பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி
புக்கிட் மெலாவத்தி | |
---|---|
Bukit Malawati | |
![]() புக்கிட் மெலாவத்தி (2023) | |
உயர்ந்த புள்ளி | |
ஆள்கூறு | 3°20′31″N 101°14′46″E / 3.34194°N 101.24611°E |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | Malawati Hill |
பெயரின் மொழி | மலாய் மொழி |
புவியியல் | |
நிலவியல் | |
மலையின் வகை | எச்சக்குன்று |
புக்கிட் மெலாவத்தி அல்லது மாலாவதி மலை (மலாய் மொழி: Bukit Malawati; ஆங்கிலம்: Malawati Hill) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு மலைக் கோட்டை ஆகும்.[1] கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் இந்தக் கோட்டை நிர்வகிக்கப்படுகிறது. புக்கிட் மெலாவத்தி ஒரு பிரபலமான உள்ளூர் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.[2]
மலாக்கா நீரிணையில் கலக்கும் சிலாங்கூர் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தக் கோட்டை இருப்பதால், இது உத்திநோக்கு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இடம் இந்தோனேசியாவின் சுமாத்திரா மற்றும் மலாக்கா நீரிணை இரண்டிற்கும் சாதகமான அம்சங்களையும் கொண்டுள்ளது.
புக்கிட் மெலாவத்தியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களில் அங்குள்ள் பழைய கலங்கரை விளக்கம்; மெலாவத்தி கோட்டையின் (Fort Malawati) எச்சங்கள் ஆகியவை அடங்கும்.[3] சிலாங்கூரின் தொடக்கக்கால சுல்தான்கள் மூவரின் அடக்க இடமாகவும் புக்கிட் மெலாவத்தி செயல்படுகிறது.
வரலாறு
தொகுஇந்தக் கோட்டை முதன்முதலில் உள்ளூர் மலாய்க்காரர்களால் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. மலாக்காவின் சுல்தான் மகமுட் சா கட்டுமானத்திற்கு உத்தரவிட்டார். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பூகிஸ் குடியேறிகள் மலாய் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
பின்னர் அவர்கள் 1742-இல் சிலாங்கூரின் முதல் சுல்தானாக ராஜா லுமுவை (Raja Lumu) நியமித்தனர். அவர் தன்னை சுல்தான் சாலேவுதீன் சா என்று அழைத்துக் கொண்டார். 1778-இல் ராஜா லுமுவுக்குப் பிறகு வந்த சுல்தான் இப்ராகிம் சா, கோட்டையை மேலும் பலப்படுத்தினார். இடச்சு படையெடுப்புகளுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகச் செய்யப்பட்டது.
இருந்தபோதிலும், 1784-ஆம் ஆண்டு இடச்சுக்காரர்கள் கோட்டையைத் தாக்கியபோது கோலா சிலாங்கூர் நகரம் இடச்சுப் படைகளிடம் வீழ்ந்தது. இந்தத் தாக்குதலுக்கு டிர்க் வான் கோகெண்டோர்ப் (Dirk van Hogendorp) எனும் இடச்சு கப்பல் தளபதி தலைமை தாங்கினார். சுல்தான் இப்ராகிம் சா அவர்களின் நண்பரான ராஜா அஜி பிசாபிலில்லா (Raja Haji Fisabilillah), ஏற்கனவே இடச்சுக்காரர்கள் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.[4]
இடச்சு தாக்குதல்
தொகுஏற்கனவே ராஜா அஜி பிசாபிலில்லா மலாக்காவில் உள்ள ஆ பாமோசா கோட்டையைத் தாக்கிச் சேதப் படுத்தினார். அந்தக் கோட்டை அப்போது இடச்சுக்காரர்களின் கோட்டையாக இருந்தது. கோலா சிலாங்கூர் போரின் போது ராஜா பிசாபிலில்லா கொல்லப்பட்டார். அதன் பின்னர், இடச்சுக்காரர்கள் சுல்தான் இப்ராகிம் சாவை பழிவாங்க விரும்பினர். ஏனெனில் சுல்தான் இப்ராகிம் சாதான், ராஜா பிசாபிலில்லாவுக்கு தன்னுடைய கடற்படையின் ஆதரவை வழங்கினார்.[4]
அதன் பின்னர் இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (VOC) சுல்தான் இப்ராகிம் சாவைத் தாக்க, கோலா சிலாங்கூருக்கு தங்களின் கப்பல்களை அனுப்பியது. அங்கு வந்த இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள், கடலில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பீரங்கிகளால் மெலாவத்தி கோட்டையைத் தாக்கின. அதன் விளைவாக சுல்தான் இப்ராகிம் சாவின் படைகள் அருகிலுள்ள காடுகளுக்குள் விரட்டப்பட்டன.
சுல்தான் இப்ராகிம் சா பெர்ணம் பகுதிக்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் பகாங்கிற்குச் சென்றார். அதைத் தொடர்ந்து, இடச்சுக்காரர்கள் மெலாவத்தி கோட்டையைக் கைப்பற்றினர். ஆல்டிங்பர்க் கோட்டை (Fort Altingburg) என்று பெயர் மாற்றினர். வில்லெம் அர்னால்ட் ஆல்டிங் என்பவர் 1780-ஆம் ஆண்டு முதல் 1797-ஆம் ஆண்டு வரை இடச்சு கிழக்கிந்திய தீவுகளின் தலைமை ஆளுநராக இருந்தவர் ஆவார்.[5]
பின்னர் சுல்தான் இப்ராகிம் சா திரும்பி வந்து. 1785-இல் கோட்டையை மீண்டும் கைப்பற்றினார். தன்னுடைய சகோதரர் டத்தோ பெங்காவா பெர்மாத்தாங் மகாபிஜயா (Dato' Penggawa Permatang Mahabijaya) மற்றும் பெண்டகாரா அடிப் (Bendahara Adb) ஆகியோரின் உதவியுடன் அவர் கோட்டையைக் கைப்பற்றினார். 19-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூர் உள்நாட்டுப் போரின் போது இந்தக் கோட்டை முற்றாக அழிக்கப்பட்டது.[6]
சிறப்புகள்
தொகுபுக்கிட் மெலாவத்தி, கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி பூங்கா மற்றும் கோலா சிலாங்கூர் இயற்கை பூங்கா போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.[1][6] மலைக்கோட்டையில் உள்ள பிரபலமான ஈர்ப்புகளில் அமிழ் தண்டூர்தி சவாரி, ஓர் அரச கல்லறை மற்றும் ஓர் அருங்காட்சியகம் ஆகியவை அடங்கும்.[1][3]
காட்சியகம்
தொகுபுக்கிட் மெலாவத்தி காட்சிப் படங்கள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Bukit Malawati". visitselangor.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ "Kuala Selangor Municipal Council". mdks.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
- ↑ 3.0 3.1 Rajendra, Edward. "Abandoned facilities in Kota Malawati disappoint visitors". Star Media Group. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ 4.0 4.1 "Bukit Melawati (Melawati Hill - It was built during the reign of Sultan Ibrahim from 1782 to 1826 to fight against the Dutch. Selangor had been sucked into the struggle between the Dutct amd the ruler of Johor and Riau". Kuala Selangor (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 February 2025.
- ↑ Activities, Filed under; trips, Day; Selangor, Kuala (12 April 2017). "In 1784, Kuala Selangor eventually fell to the Dutch, who reinforced the fort with cannons and renamed it Fort Altingburg after Willem Arnold Alting". Visit Selangor.
- ↑ 6.0 6.1 Leong, Ewe Paik (2017). "More than fireflies in Kuala Selangor". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Ksmuthukrishnan/மணல்தொட்டி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.