புத்ரா அயிட்ஸ்

சிலாங்கூர், பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், 1999-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குடியிருப்

புத்ரா அயிட்ஸ், (மலாய்; ஆங்கிலம்: Putra Heights; சீனம்: 布特拉高原); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், 1999-ஆம் ஆண்டில் சைம் யுஇபி பிராபர்ட்டீஸ் (Sime UEP Properties) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 1,796 ஏக்கர் குடியிருப்பு நகரமாகும்.[2]

புத்ரா அயிட்ஸ்
Putra Heights
நகரம்
புக்கிட் செர்மின் குன்றின் மேல் புத்ரா அயிட்ஸ் அடையாளம்
புக்கிட் செர்மின் குன்றின் மேல் புத்ரா அயிட்ஸ் அடையாளம்
Map
புத்ரா அயிட்ஸ் is located in மலேசியா
புத்ரா அயிட்ஸ்
      புத்ரா அயிட்ஸ்
ஆள்கூறுகள்: 3°3′52″N 101°35′37″E / 3.06444°N 101.59361°E / 3.06444; 101.59361
நாடு மலேசியா
மாநிலம் [1] சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்சுபாங் ஜெயா மாநகராட்சி
(Subang Jaya City Council)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல்
47650
தொலைபேசி+603-51, +603-5614
போக்குவரத்துB

புத்ரா அயிட்ஸில் உள்ள உயரமான புக்கிட் செர்மின் குன்றின் உச்சியில் இருந்து இந்த நகரத்தை நன்றாகப் பார்க்கலாம்.

வரலாறு

தொகு

1974-க்கு முன்பு, சுபாங் ஜெயா, கிள்ளான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுபாங் ஜெயாவின் வளர்ச்சி பிப்ரவரி 21, 1976 அன்று தொடங்கியது. அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்றது.

உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்பு ஆகியவை; இந்தப் பகுதிக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு, வளர்ச்சியின் காரணிகளாக உள்ளன. 2016-ஆம் ஆண்டில், கிளானா ஜெயா வழித்தட நீட்டிப்புத் திட்டத்தின் விளைவாக, அந்த வழித்தடம் புத்ரா அயிட்ஸ் வரை 17 கிமீ நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிப்புத் திட்டம் புத்ரா அயிடா நகரத்திற்கு புத்துயிர் வழங்கியது. தற்போது கிளானா ஜெயா வழித்தடம் இந்த நகரத்தில் முடிகிறது.

நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள்

தொகு

புத்ரா அயிட்ஸ் நகரத்தைப் பல முக்கிய சாலைகள், விரைவுச்சாலைகள், மற்றும் தொடருந்துச் சேவைகள் இணைக்கின்றன.

புத்ரா அயிட்ஸ் நகரத்தின் வழியாக நேரடியாகச் செல்லும் விரைவுச்சாலை; மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு (ELITE) ஆகும். புத்ரா அயிட்ஸின் முக்கிய சாலையான வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் மத்திய இணைப்பில் உள்ள இடைமாற்றம் 19 பிப்ரவரி 2009 அன்று போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது.

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வழியாக இந்த நகரத்தை இணைக்கும் பிற முக்கிய விரைவுச்சாலைகள்:

தொடருந்து சேவைகள்

தொகு

2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, தற்போது இந்த நகரம் இலகு தொடருந்து (LRT) சேவைகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.  SP31   KJ37  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம், ரேபிட் கேஎல் 5 கிளானா ஜெயா; மற்றும் 4 செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்களின் மூலமாக இணைக்கப்படுகிறது.

புத்ரா பாயிண்ட் வணிக மையம் (Putra Point Commercial Centre); மற்றும் ஜெயண்ட் ஹைப்பர் மார்க்கெட் (Giant hypermarket) ஆகியவை பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

தெற்கு முனையம்

தொகு

இந்த நிலையம் 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 4 செரி பெட்டாலிங்; 5 கிளானா ஜெயா ஆகிய வழித்தடங்களின் நீட்டிப்பு திட்டத்தின் (LRT Extension Project) ஒரு பகுதியாகும். இது பூச்சோங்கில் உள்ள மற்ற 3 நிலையங்களுடன் சேர்த்து 2016 மார்ச் 31 அன்று திறக்கப்பட்டது.[3]

இந்த நிலையம் தற்போது அந்த இரண்டு வழித்தடக்கும் தெற்கு முனையமாக உள்ளது.

மக்கள் இனப் பிரிவுகள்

தொகு

புத்ரா அயிட்ஸ் மக்கள் தொகை மூன்று முக்கிய இனங்களைக் கொண்டது.[4]

சுபாங் ஜெயா மாநகராட்சி

தொகு

புத்ரா அயிட்ஸ்; மற்ற பூச்சோங் வட்டார இடங்களைப் போல சுபாங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த மாநகராட்சியில் 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

  1. பூச்சோங் மக்களவைத் தொகுதி
  2. சுபாங் மக்களவைத் தொகுதி
  3. கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி

பெட்டாலிங் மாவட்டத்தில் இருக்கும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் (Subang Jaya City Council) நிர்வாகத்தின் கீழ் உள்ள இதர இடங்கள். பூச்சோங் நகர மையம் (Pusat Bandar Puchong) பெரும்பாலும் சுபாங் ஜெயா மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் அமைந்து உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Puchong Perdana, Puchong - Postcode - 47150 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 2 February 2025.
  2. "From 'ghost town' to a vibrant area". Business Times. September 6, 2018. https://www.nst.com.my/property/2018/09/408902/ghost-town-vibrant-area. 
  3. Muhammad Farhan bin Mohd Arif (July 2017). A Study on Ridership Capacity Analysis at Rapid Kelana Jaya Line Station (PDF) (Report). Faculty of Engineering Technology, Universiti Tun Hussein Onn Malaysia. p. 23,24. பார்க்கப்பட்ட நாள் 26 June 2020.
  4. "About Putra Heights". The Edge Property. பார்க்கப்பட்ட நாள் 13 August 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=புத்ரா_அயிட்ஸ்&oldid=4202505" இலிருந்து மீள்விக்கப்பட்டது