கோலா சிலாங்கூர் மாவட்டம்
கோலா சிலாங்கூர் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor District; சீனம்: 瓜拉雪兰莪县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.
கோலா சிலாங்கூர் மாவட்டம் | |
---|---|
Daerah Kuala Selangor | |
![]() | |
ஆள்கூறுகள்: 3°35′N 101°35′E / 3.583°N 101.583°E | |
தொகுதி | கோலா சிலாங்கூர் |
உள்ளூராட்சி | கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றம் |
அரசு | |
• நகராட்சி மன்றத் தலைவர் | ரகிலா ரகுமட்[1] |
• மாவட்ட அதிகாரி | ஜொகாரி அன்வார்[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,194.52 km2 (461.21 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,73,728 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
அஞ்சல் குறியீடுகள் | 45xxx |
மலேசியாவில் தொலைபேசி எண்கள் | +6-03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[3]
இந்த மாவட்டத்தைக் கோலா சிலாங்கூர் பிரிவு; தஞ்சோங் காராங் பிரிவு; என இரு பிரிவுகளாக சிலாங்கூர் ஆறு பிரிக்கின்றது. சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தை ஊடுருவிச் செல்வதால் அந்த ஆற்றின் பெயரே கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகப் பகுதிகள்
தொகுகோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
தொகு- அப்பி அப்பி (Api-Api)
- பெஸ்தாரி ஜெயா (Bestari Jaya)
- உஜோங் பெர்மாத்தாங் (Hujong Permatang)
- உலு திங்கி (Hulu Tinggi)
- ஈஜோக் (Ijok)
- ஜெராம் (கோலா சிலாங்கூர்) (Jeram)
- கோலா சிலாங்கூர் (Kuala Selangor)
- பாசாங்கான் (Pasangan)
- தஞ்சோங் காராங் (Tanjung Karang)
மலேசிய நாடாளுமன்றம்
தொகு2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[4]
2018 மார்ச் 30-ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுயில் சிவராசா ராசையா என்பவர் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்கள் 65.33%. சீனர்கள் 21.64%. இந்தியர்கள் 10.72% இதர இனத்தவர் 2.32%.
90,707 வாக்காளர்கள் கொண்ட இந்தத் தொகுதியில் 77,951 வாக்காளர்கள் வாக்கு அளித்தனர். 26,634 வாக்குப் பெரும்பான்மையில் சிவராசா ராசையா வெற்றி பெற்றார்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P95 | தஞ்சோங் காராங் | நோ ஒமார் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P96 | கோலா சிலாங்கூர் | சுல்கிப்லி அகமட் | பாக்காத்தான் ஹரப்பான் (அமானா) |
P107 | சுங்கை பூலோ | சிவராசா ராசையா | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்
தொகு2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்
தொகுசிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[5]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P95 | N8 | சுங்கை பூரோங் | முகமட் சம்சுதீன் லியாஸ் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P95 | N9 | பெர்மாத்தாங் | ரோசானா சைனல் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P96 | N10 | புக்கிட் மெலாவாத்தி | சுவாரியா சுல்கிப்லி | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P96 | N11 | ஈஜோக் | இட்ரிஸ் அகமட் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P96 | N12 | ஜெராம் (கோலா சிலாங்கூர்) | முகமட் சாயிட் ரோஸ்லி | பெஜுவாங் (பி.கே.ஆர்) |
P107 | N38 | பாயா ஜெராஸ் | கைருடின் ஒஸ்மான் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
தொகுகோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
தொகுகோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள மாநிலங்களில் இந்த மாநிலமும் ஒன்றாகும்.[6][7]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD3048 | பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) |
SJK(T) Bestari Jaya[8] | பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி | 45600 | பெஸ்தாரி ஜெயா | 495 | 39 |
BBD3049 | ஜெராம் | SJK(T) Ldg Braunston[9] | பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45800 | ஜெராம் | 90 | 14 |
BBD3051 | புக்கிட் செராக்கா தோட்டம் | SJK(T) Ldg Bukit Cheraka[10] | புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45800 | ஜெராம் | 119 | 15 |
BBD3052 | புக்கிட் ஈஜோக் தோட்டம் | SJK(T) Ldg Bkt Ijok (மூடப்பட்டு விட்டது. 2021-க்குள் சுங்கை பீலேக், சிப்பாங் பகுதிக்கு இடம் பெயர்கிறது)[11] |
புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45800 | ஜெராம் | * | * |
BBD3055 | சுங்கை பூலோ Bandar Seri Coalfields |
SJK(T) Ldg Coalfields | கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 47000 | சுங்கை பூலோ | 100 | 11 |
BBD3056 | சுங்கை பூரோங் செகிஞ்சான் Sekinchan |
SJK(T) Ghandiji Sekinchan | காந்திஜி தமிழ்ப்பள்ளி செகிஞ்சான் | 45400 | பந்திங் | 22 | 7 |
BBD3057 | ஹோப்புள் தோட்டம் | SJK(T) Ldg Hopeful | ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45600 | பெஸ்தாரி ஜெயா | 17 | 7 |
BBD3058 | கம்போங் பாரு தோட்டம் | SJK(T) Ldg Kg Baru | கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 19 | 7 |
BBD3060 | சுங்கை தெராப் தோட்டம் | SJK(T) Ladang Sungai Terap | சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 46 | 10 |
BBD3061 | கோலா சிலாங்கூர் தோட்டம் | SJK(T) Ldg Kuala Selangor | கோலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | புக்கிட் ரோத்தான் | 62 | 11 |
BBD3064 | கோலா சிலாங்கூர் | SJK(T) Ldg Raja Musa | ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 36 | 10 |
BBD3065 | புக்கிட் ரோத்தான் | SJK(T) Bukit Rotan Baru | புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி | 45700 | புக்கிட் ரோத்தான் | 40 | 10 |
BBD3066 | புக்கிட் பெலிம்பிங் Bukit Belimbing |
SJK(T) Ldg Riverside | ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 50 | 10 |
BBD3068 | சிலாங்கூர் ரீவர் தோட்டம் | SJK(T) Ldg Selangor River | சிலாங்கூர் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | புக்கிட் ரோத்தான் | 87 | 13 |
BBD3069 | சுங்கை பூலோ தோட்டம் | SJK(T) Ldg Sg Buloh | சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | கோலா சிலாங்கூர் | 29 | 7 |
BBD3071 | சுங்குரும்பை தோட்டம் | SJK(T) Ldg Sg Rambai | சுங்குரும்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45600 | பெஸ்தாரி ஜெயா | 46 | 11 |
BBD3072 | துவான் மீ தோட்டம் | SJK(T) Ladang Tuan Mee | துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 47000 | சுங்கை பூலோ | 57 | 11 |
BBD3073 | கோலா சிலாங்கூர் | SJK(T) Vageesar | வகீசர் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 361 | 28 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "YDP's Profile". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Portal Kerajaan Negeri Selangor Darul Ehsan". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "KUALA LANGAT - SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA (SPR) - SEMAKAN CALON PILIHAN RAYA UMUM KE 14". keputusan.spr.gov.my. Archived from the original on 13 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ "கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் - Schools". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Razak, Najib (28 April 2013). "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - Majlis Perasmian SJKT Bestari Jaya". பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GO English! 2018-19 Project Video (SJKT Ladang Braunston #1)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Bukit Cheraka Menyambut Hari Merdeka" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Teo Nie Ching (张念群)". www.facebook.com.
வெளி இணைப்புகள்
தொகு