2000கள்
2000கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2000ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009-இல் முடிவடையும். இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக சீனா, மற்றும் இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.
தொழில் நுட்பத்தில், எண்மிய (டிஜிட்டல்) நுட்பம் கணனி, இணையம் மட்டுமல்லாமல், தொலைபேசி, ஒளிப்படக் கருவிகள், டிஜிட்டல் இசை போன்றவற்றில் உலகமயமாதல் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது.[1][2][3][4][5]
அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல் பின்னர் ஈராக் போருக்கு வழிகோலியது.
நிகழ்வுகள்
2000
- ஜனவரி 1, - புத்தாயிரமாம் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஆயினும் உண்மையில் புத்தாயிரத்தின் தொடக்கம் ஜனவரி 1, 2001 தான்.
- பெப்ரவரி 6 - தார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்[6]
- பெப்ரவரி 17 - விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது
- ஜூன் 26 - அமெரிக்காவில் மனிதர்மரபணு மாதிரி வரைபடத்தை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரும்சேர்ந்து வெளியிட்டனர்.
- நவம்பர் 1 - மிசொராம் படுகொலை
2001
- ஜனவரி 15 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.[7]
- ஜனவரி 26 - இந்திய குஜராத் பூகம்பத்தில் 20000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- மே 24 - தனது 16 வயதில் டெம்பாஷெரி என்ற நேபாளம் சின்ன பையன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தான்.
- ஜூன் 1 - நேபாள அரச குடும்பம் படுகொலை.
- ஜூன் 20 - உலக அகதிகள் தினமாக ஐநா அறிவித்தது. இவர்களுக்காக தனியாக ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளத்.
- ஜூலை 24 - புலிகளால் கட்டுநாயக்க விமான நிலையம் தாக்கப்பட்டது.
- செப்டம்பர் 11 - நியூயோர்க் உலக வர்த்தக மையம் மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல்களில் 3000 பேர் வரை இறப்பு.
- அக்டோபர் 7 - ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்ததும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆரம்பமாகியது.
- அக்டோபர் 23 - அப்பிள் நிறுவனம் ஐபாடை வெளியிட்டது.
- அக்டோபர் 25 - விண்டோஸ் எக்ஸ்பீ வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 13 - இந்தியப் பாராளுமன்றம் மீதான தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
2002
- பெப்ரவரி 22 – இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
- பெப்ரவரி 27 - குஜராத் வன்முறை 2002: இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கோத்ரா நகரில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.[8]
- டிசம்பர் 2 - இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆரம்பம்.
2003
- ஜனவரி 8 - யூஎஸ் ஏர்வேய்சு விமானம் 5481 சார்லட் டக்லசு விமான நிலையத்தில் வீழ்ந்ததில் அனைத்து 21 பேரும் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 16 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
- ஜனவரி 18 - கான்பரா நகரில் காட்டுதீ பரவியதில் 4 பே கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 23 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசிக் குறிப்பு 7.5 பில்லியன் மைல் தூரத்தில் இருந்து பெறப்பட்டது.
- பெப்ரவரி 1 - கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்ப் வரும் வழியில் டெக்சசுக்கு மேல் வெடித்ததில் அனைத்து 7 விண்ணோடிகளும் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 9 - தார்ஃபூர் போர் ஆரம்பமானது.[9]
- பெப்ரவரி 18 - தென் கொரியாவில் தொடருந்து ஒன்றில் தீ பரவியதில் 190 பேர் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 19 - ஈராக் போர் ஆரம்பமானது.
- ஏப்ரல் 14 - மனித மரபணுத்தொகைத் திட்டம் முடிவடைந்தது.
- சூலை 22 - சதாம் உசைனின் இரு மகன்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 15 - சீனா தனது முதலாவது மனித விண்வெளிப்பறப்பை ஆரம்பித்தது.
- அக்டோபர் 24 - கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பறப்பை மேற்கொண்டது.
- டிசம்பர் 5 - உருசியாவின் தெற்கே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 13 - சதாம் உசேன் கைது செய்யப்பட்டார்.
- டிசம்பர் 26 - ஈரானின் தென்கிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
2004
- சூலை 16 - கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்தில் 94 குழ்ந்தைகள் தீக்காயத்தால் இறந்தனர். 18 பேர் தீக்காயம் அடைந்தனர்.[10]
- டிசம்பர் 26 - இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக இலட்சக்கணக்காண மக்கள் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தம் என இது கூறப்பட்டது.
2005
2006
2007
==== ஜனவரி 2007 ====
- ஜனவரி 19: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
- ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
- ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
- ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
- ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
- ஜனவரி 1 - தென் கொரியாவின் பான் கி மூன் ஐநாவின் புதிய செயலாளர் நாயகம் ஆனார்.
பெப்ரவரி 2007
தொகு- பெப்ரவரி 27: மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் எறிகணையின் சிதறல்களால் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 19: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த புகைவண்டியில் புதுடில்லியில் இருந்து 100கிமீ தொலைவில் பனிபட் என்ற இடத்தில் இரு குண்டுகள் வெடித்ததில் 64 பேர் வரையில் இறந்தனர்.
மேலும் பெப்ரவரி 2007 நிகழ்வுகளுக்கு..
மார்ச் 2007
தொகு- மார்ச் 26 - கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
- மார்ச் 13: 2007 துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கியது.
- மார்ச் 6: இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் மலேசியா, மற்றும் சிங்கப்பூர் வரை உணரப்பட்டுள்ளது.
- மார்ச் 1 - இலங்கை விமானப் படையின் பிரி-06 ரக பயிற்சி விமானம் அநுராதபுரம் அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
மேலும் மார்ச் 2007 நிகழ்வுகளுக்கு..
ஏப்ரல் 2007
தொகு- ஏப்ரல் 2 - சொலமன் தீவுகளில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைத் தாக்கங்களில் 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 3 - சார்க் நாடுகளின் 16வது வருடாந்த உச்சிமாநாடு புது டில்லியில் ஆரம்பமானது.
- ஏப்ரல் 7 - தமிழ்நாட்டில் செந்தூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 12 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
- ஏப்ரல் 16 - ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
மே 2007
தொகு- மே 1 - மெல்பேர்னில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரை அவ்வமைப்புக்கு நிதி சேகரித்து அனுப்பியமைக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.
- மே 6 - கென்யாவின் போயிங் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 115பேர் மாண்டனர்.
- மே 6 - இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற பெரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் 16 பேர் கொல்லப்பட்டும் 125,000 பேர் வீடிழந்தும் உள்ளனர்.
- மே 7 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மே 12 - கராச்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் அல்டாஃப் உசேன் அவர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 13 - தலிபானின் முன்னணி இராணுவத் தலைவர் முல்லா அப்துல்லா கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- மே 14 - ரஷ்யாவில் ஓர்ஸ்க் என்னுமிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10பேர் மாண்டனர்.
- மே 16 - மேற்கு லாவோசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து, வியட்நாமிலும் உணரப்பட்டது.
- மே 18 - இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இஸ்லாமிய மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 24 - கொழும்பில் இராணுவத்தினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்துள்ளனர்.
- மே 24 - யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவின் தென்பகுதியில் உள்ள இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்து, 35 கடற்படையினரைக் கொன்றனர்.
- மே 28 - கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.
மேலும் மே 2007 நிகழ்வுகளுக்கு..
சூன் 2007
தொகு- சூன் 3 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- சூன் 3 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
- சூன் 7 - கொழும்பு, வெள்ளவத்தையில் விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக் காவற்துறையினர் பலவந்தமாக வெளியேற்றினர்.
- சூன் 8 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
- சூன் 11 - வங்காள தேசத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் 118 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 11 - தெற்கு சீனாவில் வெள்ளம் காரணமாக 66 பேர் பலியாயினர். 600,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- சூன் 14 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அமைச்சரவையைக் கலைத்து நாட்டில் அவசரகாலநிலையை அமுல் படுத்தினார்.
- சூன் 15 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.
- சூன் 22 - அட்லாண்டிஸ் விண்கப்பல் கலிபோர்னியாவில் உள்ள வான்படையினரின் எட்வேர்ட்ஸ் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
- சூன் 24 - கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
- சூன் 25 - கம்போடியாவில் PMTair விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
மேலும் சூன் 2007 நிகழ்வுகளுக்கு..
சூலை 2007
தொகு- சூலை 4 - பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் காசாவில் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் 4 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
- சூலை 7 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. சீனப் பெருஞ்சுவர், ஜோர்டானின் பெத்ரா, பிறேசிலின் ரெடிமர் ஏசு சிலை, பெருவில் உள்ள மச்சுபிச்சு என்ற புராதன கட்டுமானம், மெக்சிகோவின் சிச்சென் இட்சா பிரமிட், இத்தாலியின் கொலாசியம், இந்தியாவின் தாஜ் மகால் ஆகியவை புதிய 7 உலக அதிசயங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.[12]
- சூலை 11 - கிழக்கிலங்கையில் குடும்பிமலை பகுதியை கைப்பற்றியதுடன் கிழக்கிலங்கையை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
- சூலை 11 - பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் பலியாகினர்.
- சூலை 14 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
- சூலை 16 - ஜப்பானில் 6.8 அளவு நிலநடுக்கம் காரணமாக 3 பேர் கொல்லப்பட்டு 33 பேர் காயமடைந்தனர்.
- சூலை 17 - பிறேசிலில் சாவோ பவுலோ என்ற இடத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 176 பேர் உட்பட 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- சூலை 18 - இலங்கை கிழக்குக் கடற்பரப்பில் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டது.
- சூலை 21 - ஹரி பொட்டர் நாவலின் ஏழாவதும் கடைசியுமான ஹரி பொட்டர் அன்ட் த டெத்லி ஹல்லோஸ் உலகெங்கனும் வெளியிடப்பட்டது.
மேலும் சூலை 2007 நிகழ்வுகளுக்கு..
ஆகத்து 2007
தொகு- ஆகத்து 1 - ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மாநிலங்களை இணைக்கும் இண்டர்ஸ்டேட் பாலம் மிசிசிப்பி ஆற்றில் வீழ்ந்ததில் 6 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 2 - ரஷ்யாவின் சகாலின் நகரில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
- ஆகத்து 4 - நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கோளில் அடுத்த ஆண்டில் தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்ளவென பீனிக்ஸ் என்னும் கலத்தை விண்ணுக்கு ஏவியது.
- ஆகத்து 4 - இந்தியா, வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பெரும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
- ஆகத்து 8 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை (படம்) கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
- ஆகத்து 12 - யாழ்ப்பாணம் தச்சன்தோப்புப் பகுதியில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலில் 4 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்தனர்.
- ஆகத்து 15 - பெருவின் தலைநகர் லீமாவில் இருந்து 300 கிமீ தொலவில் 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- ஆகத்து 25 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- ஆகத்து 25 - கிறீசில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது.
- ஆகத்து 25 - பல்கேரியாவைச் சேர்ந்த பேத்தர் ஸ்டொய்சேவ் என்பவர் ஆங்கிலக் கால்வாயைக் மிக விரைவில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் ஆகத்து 2007 நிகழ்வுகளுக்கு..
செப்டம்பர் 2007
தொகு- செப்டம்பர் 2 - இலங்கை இராணுவத்தினர் தாம் மன்னார், சிலாவத்துறையை புலிகளிடம் இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர்.
- செப்டம்பர் 4 - சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
- செப்டம்பர் 6 - இத்தாலியப் பாடகர் லூசியானோ பவரொட்டி தனது 71வது அகவையில் புற்றுநோய் காரணமாக இறந்தார்.
- செப்டம்பர் 7 - ஏபெக் உச்சி மாநாடு சிட்னியில் ஆரம்பமானது.
- செப்டம்பர் 9 - ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன்களைத் தாண்டியது.
- செப்டம்பர் 10 - லண்டனில் இருந்து நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.
- செப்டம்பர் 12 - இந்தோனேசியாவின் சுமாத்திராவின் மேற்குப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவு நிலடுக்கம் ஏற்பட்டது.
- செப்டம்பர் 16 - தாய்லாந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 55 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 89 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 18 - பெருவில் விண்கல் ஒன்றின் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் சுகவீனமடைந்தனர்.
- செப்டம்பர் 18 - மியான்மாரில் ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு இவர்கள் கலைக்கப்பட்டனர்.
- செப்டம்பர் 19 - ஆதி மனிதர்களின் 4 எலும்புக்கூடுகள் ஜோர்ஜியாவில் கண்டெடுக்கப்பட்டன.
- செப்டம்பர் 24 - 2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.
- செப்டம்பர் 26 - வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- செப்டம்பர் 30 - இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற 2007க்கான உலக சதுரங்கப் போட்டிகளில் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.
மேலும் செப்டம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
அக்டோபர் 2007
தொகு- அக்டோபர் 15 - தெற்கு இலங்கையின் யால சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்த இராணுவ முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 18 - கராச்சி நகரில் எட்டு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை ஏற்றிச் சென்ற பார ஊர்தி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 138 பேர் கொல்லப்பட்டு 600 பேர் படுகாயமடைந்தனர்.
- அக்டோபர் 22 - வவுனியாவில் இருந்து புறப்பட்ட பெல்-212 வகை உலங்குவானூர்தி ஓன்று அனுராதபுரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் மிகிந்தலைக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் இதில் பயணம் செய்த 4 இலங்கை வான்படை வீரர்கள் இறந்தனர்.
- அக்டோபர் 22 - எல்லாளன் நடவடிக்கை: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 14 படையினர், மற்றும் 21 புலிகள் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 22 - தெற்கு கலிபோர்னியாவில் பரவிய பெரும் காட்டுதீயினால் 500,000 பேர் இடம்பெயர்ந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
- அக்டோபர் 23 - டிஸ்கவரி விண்ணோடம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 7 பேருடன் STS-120 என்ற விண்கப்பலை வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்துக்கு எடுத்துச் சென்றது.
- அக்டோபர் 24 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- அக்டோபர் 25 - சிங்கப்பூரின் முதலாவது ஏ-380 ரக சூப்பர் ஜம்போ விமானம் தனது முதலாவது வர்த்தகப் பயணத்தை சிட்னிக்கு வெற்றிகரமாக முடித்தது.
- அக்டோபர் 26 - ஏபிசி வானொலிச் சேவைகள் இலங்கையில் தடை செய்யப்பட்டன.
- அக்டோபர் 27 - கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.
- அக்டோபர் 29 - ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவியுள்ள எச்.ஐ.வி என்னும் தீ நுண்மம் 1969 இல் ஹையிட்டியில் முதலில் உண்டானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
- அக்டோபர் 29 - தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல இடங்களிலும் இடம்பெற்ற கனத்த மழையினால் 22 பேர் இறந்தனர்.
- அக்டோபர் 31 - யப்பான் ஆப்கானிஸ்தானில் இருந்து தமது கடற்படையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
மேலும் அக்டோபர் 2007 நிகழ்வுகளுக்கு..
நவம்பர் 2007
தொகு- நவம்பர் 1 - அட்லாண்டிக் கடலில் உருவான சூறாவளி நொயெல் இதூவரையில் 108 பேரைப் பலிகொண்டு பெர்மூடாவை நோக்கி நகர்ந்தது.
- நவம்பர் 1 - மன்னாரின் உயிலங்குளம், பாலைக்குழி மற்றும் கட்டுரைக்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற சமரில் 25 படையினரும் 7 புலிகளும் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 2 - மெக்சிகோவின் கிரிஜல்வா ஆறு பெருக்கெடுத்து 50 ஆண்டுகளில் காணாத அளவு பாரிய வெள்ளம் ஏற்பட்டதில் 800,000 பேர் வீடற்றவர்களாகினர்.
- நவம்பர் 2 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 3 - இந்தோனேசியாவின் சுகிவாராஸ் நகருக்கு அருகில் உள்ள கேலூட் எரிமலை வெடித்தது.
- நவம்பர் 3 - இலங்கையில் இருந்து இரகசியமாக லண்டனுக்கு சென்ற துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக லண்டனில் கைது செய்யப்பட்டார்.
- நவம்பர் 7 - பின்லாந்து, ஹெல்சிங்கி நகரில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
- நவம்பர் 7 - பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள 55 Cancri என்ற விண்மீனின் சுற்றுவட்டத்தில் புதிய கோள் ஒன்றை அமெரிக்க வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
- நவம்பர் 8 - துபாயில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர்.
- நவம்பர் 15 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் 2000 பேருக்கு மேல் இறந்தனர்.
- நவம்பர் 16 - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
- நவம்பர் 18 - உக்ரேனில் சசியாட்கோ என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 21 - பப்புவா நியூ கினியின் ஓரோ மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 150 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 22 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
- நவம்பர் 23 - அன்டார்ட்டிக் பெருங்கடல் பகுதியில் 150 சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற "எக்ஸ்புளோரர்" என்ற கனேடியக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் தெற்கு செட்லாண்ட் தீவு பகுதியில் பனிப்பாறையில் மோதியதில் கப்பல் மூழ்கியது. பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
- நவம்பர் 27 - இலங்கை கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிமீ மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- நவம்பர் 28 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் இராணுவத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அஷ்ஃபக் பெர்வேஸ் கியானி புதிய இராணுவத் தலைவரானார்.
- நவம்பர் 29 - கரிபியன் தீவுகளில் ஒன்றான வின்ட்வார்ட் தீவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
- நவம்பர் 30 - துருக்கியப் பயணிகள் விமானம் ஒன்று துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் கொல்லப்பட்டனர்.
மேலும் நவம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
டிசம்பர் 2007
தொகு- டிசம்பர் 3 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (படம்) தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
- டிசம்பர் 5 - அநுராதபுரத்தில் கெப்பிட்டிகொல்லாவ என்ற இடத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர்.
- டிசம்பர் 11 - மன்னாரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதலில் 20 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 12 - ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை மரியன் ஜோன்சின் 5 சிட்னி ஒலிம்பிக் விருதுகள் திரும்பப் பெறப்பட்டன்.
- டிசம்பர் 17 - பொலீவியாவின் நிர்வாகப் பகுதிகாளான பெனி, பாண்டோ, சாண்டா குரூஸ், தரிஜா ஆகியன நடுவண் அரசிலிருந்து சுயாட்சி மாகாணங்களாகத் தம்மை அறிவித்தன.
- டிசம்பர் 20 - 81 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்களை நிறைவு செய்து பிரித்தானியாவை ஆட்சிசெய்த மன்னர்கள், மகாராணிகளில் மிகவும் வயது முதிர்ந்தவரென்ற பெருமையை மகாராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
- டிசம்பர் 21 - பாகிஸ்தானில் பெஷாவார் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 22 - மன்னார், உயிலங்குளத்தில் இரு முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இடம்பெற்ற சமரில் 17 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 25 - மேற்கு நேபாளத்தில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 15 பேர் கொல்லப்பாட்டு பலர் படுகாயமடைந்தனர்.
- டிசம்பர் 27 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ ராவுல்பிண்டி நகரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 29 - மன்னாரில் இலங்கைப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..
2008
==== ஜனவரி 2008 ====
- ஜனவரி 1 - மேற்கு கென்யாவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் கலவரங்களின் போது இடம்பெயர்ந்திருந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 1 - சைப்பிரஸ், மால்ட்டா ஆகியன யூரோவை தமது அதிகாரபூர்வ நாணயங்ககளாக ஏற்றுக் கொண்டன.
- ஜனவரி 2 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
- ஜனவரி 8 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 9 - இந்தியாவின் டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த டாட்டா நனோ என்ற தானுந்து ஒன்றை அறிமுகப்படுத்தினர்.
- ஜனவரி 14 - நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளை அண்மித்தது. புதனை அண்மித்த இரண்டாவது விண்கலம் இதுவாகும்.
- ஜனவரி 16 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இலங்கையில் இருந்து வெளியேறினர்.
- ஜனவரி 16 - டஹினா ஸ்பெக்டாபிலிஸ் (Tahina spectabilis) என்ற பூத்தவுடனே இறக்கும் ஒரு தென்னை போன்ற தாவரம் வடக்கு மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 23 - கொங்கோ சனநாயகக் குடியரசு அரசுக்கும் ஹுரு இனப் போராளிக் குழுவிற்கும் இடையில் அமைதி உடன்படிக்கையொன்று எட்டப்பட்டது.
- ஜனவரி 29 - மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 12 மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஜனவரி 2008 நிகழ்வுகளுக்கு..
பெப்ரவரி 2008
தொகு- பெப்ரவரி 2 - இலங்கையின் மாத்தளை மாவட்டம் தம்புள்ள என்ற இடத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
- பெப்ரவரி 3 - மேற்கு ருவாண்டாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 3 - கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 7 - நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் ஏழு விண்வெளி வீரர்களுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது.
- பெப்ரவரி 11 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
- பெப்ரவரி 13 - ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் குழந்தைகளை 1869-1969 காலப்பகுதிகளில் அவர்களின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தமைக்காக ஆஸ்திரேலிய அரசு சார்பாக பிரதமர் கெவின் ரட் பொது மன்னிப்புக் கேட்டார்.
- பெப்ரவரி 17 - கொசோவோ நாடாளுமன்றம் சேர்பியாவிடமிருந்து ஒருதலைப் பட்சமாக விடுதலையாவதாக அறிவித்தது.
- பெப்ரவரி 19 - 51 ஆண்டுகள் கியூபாவின் ஜனாதிபதியாகவும் இராணுவத் தலைவராகவும் இருந்த பிடெல் காஸ்ட்ரோ தனது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- பெப்ரவரி 21 - விண்ணிலிருந்து பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு செய்மதியான யூஎஸ்ஏ 193ஐ அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் பூமிக்கு அதனால் எவ்வித ஆபத்தும் இனி இல்லை எனவும் அமெரிக்கா அறிவித்தது.
- பெப்ரவரி 24 - கியூபாவின் அதிபராக பிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவூல் காஸ்ட்ரோ தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் பெப்ரவரி 2008 நிகழ்வுகளுக்கு..
மார்ச் 2008
தொகு- மார்ச் 6 - வன்னி கனகராயன்குளம் பகுதியில் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் கொல்லப்பட்டார்.
- மார்ச் 11 - என்டெவர் விண்ணோடம் அனைத்துலக விண்வெளி மையத்தை நோக்கி ஏவப்பட்டது.
- மார்ச் 15 - சீனாவின் திபெத் சுயாட்சிப் பிரிவில் திபெத்தின் விடுதலையை வேண்டி ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினர் சுட்டதில் 30 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- மார்ச் 16 - இரண்டாம் உலகப் போரின் போது 1941 ஆம் ஆண்டு மூழ்கிய ஜேர்மானியப் போர்க்கப்பலான கோர்மொரான் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
- மார்ச் 17 - இரண்டாம் உலகப் போரின் போது 645 கடற்படையினருடன் மூழ்கடிக்கப்பட்ட எச்.எம்.ஏ.எஸ். சிட்னி என்ற ஆஸ்திரேலியப் போர்க்கப்பல் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 22 - முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசு தெரிவித்தது.
- மார்ச் 23 - ஈராக் போரில் இறந்த ஐக்கிய அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ எட்டியது.
- மார்ச் 27 - 1860 ஏப்ரல் 9 இல் போனாட்டோகிராஃப் மூலம் எடுவார்ட்-லெயோன் மார்ட்டின்வில் என்பவரினால் பதியப்பட்ட மனிதக் குரல் ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் மார்ச் 2008 நிகழ்வுகளுக்கு..
ஏப்ரல் 2008
தொகு- ஏப்ரல் 4 - மன்னார், மடு அன்னை திருவுருவச் சிலை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது.
- ஏப்ரல் 6 - இலங்கை, கம்பகாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 8 - ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியது.
- ஏப்ரல் 8 - ரஷ்யாவின் சோயூஸ் டீஎம்ஏ விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. முதன் முதலில் ஒரு கொரிய விண்வெளி வீரர் விண்ணுக்கு செல்வது இதுவே முதற் தடவையாகும்.
- ஏப்ரல் 14 - 43 ஆண்டுகளின் பின்னர் வங்காள தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- ஏப்ரல் 14 - நேபாளத்தில் 9 ஆண்டுக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நேபாள மாவோயிஸ்டுகள் பெரும்பான்மையைப் பெற்றனர்.
- ஏப்ரல் 20 - வட கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் வண. கருணாரத்தினம் அடிகள் வன்னியில் அம்பல்குளம் என்ற இடத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 23 - கிளாலி முதல் முகமாலை வரை 7 கிமீ முன்னரண் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு படையினர் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 25 - கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பேருந்து ஒன்றினுள் குண்டு வெடித்ததில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 52 பேர் படுகாயமடைந்தனர்.
- ஏப்ரல் 27 - மணலாறு இராணுவ முகாம்களின் மீது வான்புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர்.
- ஏப்ரல் 28 - பத்து செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி9 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.
மேலும் ஏப்ரல் 2008 நிகழ்வுகளுக்கு..
மே 2008
தொகு- மே 4: சூறாவளி நர்கிஸ் பர்மாவைத் தாக்கியதில் குறைந்தது 22,000 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 7 - 3,000 கிமீ தூரம் செல்லக்கூடிய அக்னி 3 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது.
- மே 9: ஹெஸ்புல்லா இயக்கம் லெபனானின் பெய்ரூட் நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது.
- மே 9 - அம்பாறை நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் 13 பேர் கொல்லப்பட்டு, 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- மே 10: திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கைப் படையினரின் ஏ-520 என்ற வழங்கல் கப்பல் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
- மே 12: சீனாவின் சிச்சான் மாநிலத்தின் வென்சுவா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- மே 16 - கொழும்பு மத்தியில் வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 7 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்தனர்.
- மே 13: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள்: இந்திய நகரமான ஜெய்ப்பூரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்தனர்.
- மே 16 - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
- மே 18: மன்னார், கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- மே 23 - கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- மே 23: பத்து பூத்தே தீவு (Pedra Branca) மீதான அரசுரிமையை அனைத்துலக நீதிமன்றம் சிங்கப்பூருக்கு வழங்கியது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருந்த 28 ஆண்டுக்கால சர்ச்சை முடிவுக்கு வந்தது. இத்தீவுக்குச் சற்றுத் தள்ளியுள்ள இரண்டு சிறிய தீவுத்திட்டுகள் - மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவை மலேசியாவுக்குச் சொந்தமானவை என முடிவு செய்தது.
- மே 26: கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டு 73 பேர் படுகாயமடைந்தனர்.
- மே 28: யாழ்ப்ப்பாண நகரில் நாவாந்துறையில் ஊடகவியலாளர் பி. தேவகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- மே 29 - யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் தாக்கியழிக்கப்பட்டதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் மே 2008 நிகழ்வுகளுக்கு..
ஜூன் 2008
தொகு- ஜூன் 6 - கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டு 47 பேர் காயமடைந்தனர்.
- ஜூன் 8 - தெற்கு கிரேக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
- ஜூன் 11 - மன்னார், எருக்கலம்பிட்டி இலங்கைக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. 10 கடற்படையினர் கொல்லப்பட்டன்ன்ர்.
- ஜூன் 11 - கியூபாவில் ஒரே தொழில் செய்பவர்கள் சமமான ஊதியம் பெறும் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் உற்பத்தித்திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 13 - அமெரிக்கப் புரட்சியின் போது 1780 ஆம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 22-பீரங்கிகள் பொருத்தப்பட்ட ஒண்டாரியோ என்ற போர்க்கப்பலின் பகுதிகள் ஒண்டாரியோ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜூன் 13 - ஆப்கானிஸ்தானில் கண்டகாரில் உள்ள ஒரு சிறைச்சாலையை தலிபான்கள் தாக்கி தமது 390 உறுப்பினர்கள் உட்பட 1,150 கைதிகளை தப்ப வைத்தனர்.
- ஜூன் 14 - ஜப்பானில் ஹொன்சூ தீவில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 16 - வவுனியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 இலங்கை காவல்துறையினர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தனர்.
- ஜூன் 18 - காசா கரையில் ஹமாஸ் அரசுடன் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்தது.
- ஜூன் 20 - பெருங்கடல்களின் இயல்புகளை ஆராய்வதற்காக ஜேசன்-2 என்ற பிரெஞ்சு-அமெரிக்க செய்மதி ஏவப்பட்டது.
- ஜூன் 20 - பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் பனிக்கட்டிகளைக் கண்டறிந்திருப்பதாக நாசா தெரிவித்தது.
- ஜூன் 21 - பிலிப்பீன்சில் 700 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது.
- ஜூன் 22 - சிம்பாப்வேயில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்து ஜூன் 27 இல் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மோர்கன் சங்கிராய் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
- ஜூன் 27 - அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
- ஜூன் 29 - சிம்பாப்வேயின் அதிபராக ஆறாவது தடவையாக ரொபேர்ட் முகாபே தெரிவானார்.
மேலும் ஜூன் 2008 நிகழ்வுகளுக்கு..
ஜூலை 2008
தொகு- ஜூலை 2 - 31 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 விண்கலம் சூரியனின் அதிர்ச்சி அலைகள் குறித்து தகவல்களை அனுப்பியது.
- ஜூலை 2 - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.
- ஜூலை 6 - இந்தியத் துடுப்பாட்ட அணியை 100 ஓட்டங்களால் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது.
- ஜுலை 7 - 2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியத் தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 7 - பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் 11ம் நூற்றாண்டு இந்துக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- ஜூலை 12 - அலாஸ்காவின் உம்னாக் தீவில் உள்ள ஒக்மொக் மலை வெடித்ததில் தீவின் கிழக்குப் பகுதி மக்கள் வெளியேறினர்.
- ஜூலை 14 - மாக்கிமாக்கி ஒரு புதிய குறுங்கோளாக அறிவிக்கப்பட்டது.
- ஜூலை 16 - மன்னாரில் அமைந்துள்ள விடத்தல் தீவு என்ற கடற்புலிகளின் மிக முக்கியமான தளம் ஒன்றைத் தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
- ஜூலை 16 - மட்டக்களப்பில் பாலமீன்மடுப் பகுதியில் 16 பேரின் எலும்புத் துண்டங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜூலை 19 - சிட்னியில் இடம்பெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வில் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த மதகுருக்களினால் கடந்த காலங்களில் பாலியல் துன்புறுத்தலுக்காளான சிறுவர்களுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
- ஜூலை 21 - நேபாளத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராம் பரன் யாதவ் வெற்றி பெற்றார்.
- ஜூலை 21 - 12 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்த யூகொஸ்லாவியாவின் முன்னாள் அரசுத் தலைவர் ரடோவான் கராட்சிச் சேர்பியாவில் கைது செய்யப்பட்டார்.
- ஜூலை 22 - இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 26 முதல் ஆகத்து 4 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தனர்.
- ஜூலை 26 - 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.
- ஜூலை 28 - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தமிழரான நவநீதம் பிள்ளை ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் ஜூலை 2008 நிகழ்வுகளுக்கு..
ஆகத்து 2008
தொகு- ஆகத்து 1 - இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த கடுகதி தொடருந்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 2 - இமயமலையின் கே-2 கொடுமுடியில் ஏற முயன்ற 11 பன்னாட்டு மலையேறிகள் பனிவீழ்ச்சியில் சிக்கி இறந்தனர்.
- ஆகத்து 3 - இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் நைனா தேவி என்ற மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
- ஆகத்து 6 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- ஆகத்து 8 - 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது.
- ஆகத்து 8 - முல்லைத்தீவு மருத்துவமனையினுள் இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.
- ஆகத்து 8 - ஜோர்ஜியா பிரிந்துபோன தெற்கு ஒசேத்தியாவினுள் நுழைந்து முழு அளவிலாத தாக்குதல்களை ஆரம்பித்தது. ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் போர் வெடித்தது.
- ஆகத்து 11 - 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: ஆண்களுக்கான 10 மீ கைத்துப்பாக்கி குறி பார்த்துச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்திரா தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
- ஆகத்து 16 - ஜமெய்க்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக் 100 மீ விரைவோட்டத்தை 9.69 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
- ஆகத்து 17 - அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது எட்டாவது தங்கப்பதக்கத்தை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வென்று உலக சாதனை படைத்தார்.
- ஆகத்து 18 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் பதவியில் இருந்து விலகினார்.
- ஆகத்து 20 - ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் நகரின் பராஹாஸ் விமான நிலையத்தில் ஒரு வானூர்தி ஓடுபாதையை விட்டு விலகி தீ பிடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 24 - கிர்கிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 26 - தெற்கு ஒசேத்தியா, அப்காசியா ஆகியவற்றை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது.
- ஆகத்து 26 - பீகார் மாநிலத்தில் கோசி ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 26 - திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி தாக்குதல் நடத்தியதில் இலங்கைக் கடற்படையினர் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.
- ஆகத்து 30 - கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர்.
மேலும் ஆகத்து 2008 நிகழ்வுகளுக்கு..
செப்டம்பர் 2008
தொகு- செப்டம்பர் 5 - கரிபியன் தீவான எயிட்டியில் சூறாவளி ஹன்னாவின் தாக்கத்தில் சிக்கி 500 பேர் இறந்தனர்.
- செப்டம்பர் 7 - பிரம்மபுத்திரா ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 24 பேர் கொல்லப்பட்டனர். 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
- செப்டம்பர் 9 - வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்: வவுனியாவில் இலங்கை படைத்தலைமையகத்தின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். வான்புலிகளின் மூன்று வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
- செப்டம்பர் 9 - ஆகத்து மாதத்தில் மட்டும் 155 படையினர் கொல்லப்பட்டு 983 பேர் காயமடைந்ததாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
- செப்டம்பர் 10 - 27 கிமீ நீளமான சுரங்கப் பாதையைக் கொண்ட பெரும் ஹாட்ரான் மோதியில் அடிப்படைத் துகள்கள் முதற்தடவையாக வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.
- செப்டம்பர் 11 - பீகார் மாநிலத்தில் ஹரோகார் ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 40 பேர் காணாமல் போயினர்.
- செப்டம்பர் 13 - தில்லியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
- செப்டம்பர் 14 - ரஷ்யாவில் பேர்ம் நகரில் விமானம் ஒன்று யூரல் மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த 88 பேரும் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 16 - வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து ஐநா நிவாரணப் பணியாளர்கள் அனைவரும் வெளியேறி வவுனியா வந்து சேர்ந்தனர்.
- செப்டம்பர் 17 - சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஹவுமெயா என்ற கிரேக்கக் கடவுளின் பெயர் வைக்கப்பட்டது.
- செப்டம்பர் 18 - யெமெனில் தலைநகரம் சனாவில் அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 20 - ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டதை அடுத்து தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி பதவி விலகினார்.
- செப்டம்பர் 20 - பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாதில் "மேரியாட்" விடுதி மீது நடந்த தானுந்து குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
- செப்டம்பர் 23 - ஜெனீவாவில் இயங்கும் பெரும் ஹாட்ரான் மோதியில் காந்தம் இயங்க மறுத்ததால் மோதி இடைநிறுத்தப்பட்டது.
- செப்டம்பர் 25 - சீனா தனது சென்ஷோ 7 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு அனுப்பியது. முதற்தடவையாக தனது வீரரை விண்ணில் நடக்க வைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
- செப்டம்பர் 27 - கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு, கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
- செப்டம்பர் 27 - இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர்.
- செப்டம்பர் 27 - சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இராணுவத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 30 - ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர்.
மேலும் செப்டம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..
அக்டோபர் 2008
தொகு- அக்டோபர் 1 - திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 3 - வைக்கிங் காலத்து தேவாலயம் ஒன்றின் எச்சங்கள் சுவீடனில் கண்டுபிடிக்கப்பட்டன.
- அக்டோபர் 5 - கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 6 - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இலங்கை தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 25 பேர் கொல்லப்பட்டு, 80 பேர் காயமடைந்தனர்.
- அக்டோபர் 6 - மெசஞ்சர் விண்கலம் இரண்டாம் தடவையாக புதன் கோளைக் கடந்தது.
- அக்டோபர் 7 - செப்டம்பர் மாத காலப்பகுதியில் 200 படையினர் கொல்லப்பட்டு, 997 பேர் காயமடைந்திருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
- அக்டோபர் 8 - நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 10 - 2008 அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் பின்லாந்து அரசுத் தலைவர் மார்ட்டி ஆட்டிசாரிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- அக்டோபர் 14 - த வைட் டைகர் என்னும் புதினத்திற்காக இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடிகா மான் புக்கர் பரிசு வென்றார்.
- அக்டோபர் 16 - இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கமான இந்துராப் என்ற அமைப்புக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது.
- அக்டோபர் 21 - இந்தியாவின் இம்ப்பால் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர்.
- அக்டோபர் 22 - சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முதல் முயற்சியாக சந்திரயான்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக செலுத்தியது.
- அக்டோபர் 23 - நாச்சிக்குடா தொடக்கம் புத்துவெட்டுவான் வரையிலான களமுனைகளில் 47 படையினர் கொல்லப்பட்டு, 87 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.
- அக்டோபர் 23 - 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: பிரிவினைவாதத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் மு. கண்ணப்பன் ஆகியோரை தமிழ்நாடு அரசு கைது செய்தது.
- அக்டோபர் 28 - மட்டக்களப்பில் செங்கலடியில் கருணா குழுவின் முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டு, ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.
- அக்டோபர் 29 - மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
- அக்டோபர் 29 - இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் நடந்த உலக சதுரங்கப் போட்டித் தொடரில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வென்று உலக சதுரங்க சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
- அக்டோபர் 29 - மாலைதீவுகளில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் முகமது நசீட் வெற்றி பெற்றார்.
- அக்டோபர் 29 - பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 30 - அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர், நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மேலும் அக்டோபர் 2008 நிகழ்வுகளுக்கு..
நவம்பர் 2008
தொகு- நவம்பர் 4 - ஐக்கிய அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல், 2008: மக்காளாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.[13]
- நவம்பர் 6 - ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பூட்டானின் 5வது மன்னராக முடிசூடினார். இவரே உலகின் வயதில் குறைந்த அரசுத்தலைவர் ஆவார்.
- நவம்பர் 7 - எயிட்டியில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 9 - 2002 பாலி குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான மூன்று தீவிரவாதிகள் பாலியில் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- நவம்பர் 11 - எகிப்தின் அரசி செசெஷெட்டுக்குச் சொந்தமான 4,300 ஆண்டுகள் பழமையான பிரமிட் ஒன்றைத் தான் கண்டுபிடித்திருப்பதாக எகிப்தின் வரலாற்றாய்வாளர் சாகி ஹவாஸ் அறிவித்தார்.
- நவம்பர் 13 - எச்ஆர் 8799 விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களையும், பொமல்ஹோட் என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோளையும் தொலைக்காட்டிகளினூடாக பார்க்கக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 14 - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது.
- நவம்பர் 14 - இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் இந்திய தேசியக் கொடியுடன் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
- நவம்பர் 15 - எண்டெவர் விண்ணோடம் எஸ்டிஎஸ்-126 விண்கலத்தைத் தாங்கி பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் சென்றது.
- நவம்பர் 22 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ஹுயிலா எரிமலை வெடித்ததில் 10 பேர் கொல்லப்ப்பட்டனர். 12,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
- நவம்பர் 23 - கினி-பிசாவு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
- நவம்பர் 23 - பாலஸ்தீன அரசின் தலைவராக மகமுது அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- நவம்பர் 26 - 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்: இந்தியாவின் மும்பாய் நகரில் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 174 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 27 - "நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்" என புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்தார்.
- நவம்பர் 29 - நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்களில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 29 - கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் நவம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..
டிசம்பர் 2008
தொகு- டிசம்பர் 1 - கிளிநொச்சி மாவட்டம், கொக்காவில் பகுதியை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது.
- டிசம்பர் 10 - எச்டி 189733 பி என்ற கோளில் நீராவி, காபனீரொட்சைட்டு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- டிசம்பர் 10 - கால்வாய் தீவுகளில் ஒன்றான சார்க்கில் முதற் தடவையாக மக்களாட்சி முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெற்றன.
- டிசம்பர் 23 - கினியின் அதிபர் லன்சானா கொண்டே இறந்ததை அடுத்து அங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
- டிசம்பர் 27 - காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 225 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
- டிசம்பர் 28 - கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.
- டிசம்பர் 30 - ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தல்களில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது.
மேலும் டிசம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..
2009
==== ஜனவரி 2009 ====
- ஜனவரி 1 - சிலோவாக்கியா யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்ட 16வது ஐரோப்பிய நாடானது.
- ஜனவரி 2 - கிளிநொச்சி நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
- ஜனவரி 7 - இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக்க அறிவிக்கப்பட்டது.
- ஜனவரி 8 - சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜனவரி 8 - இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 1.5 விழுக்காடாகக் குறைத்தது. இது 315 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவானதாகும்.
- ஜனவரி 11 - தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2009க்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
- ஜனவரி 12 - இந்தோனீசியாவில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 15 - அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று 155 பேருடன் நியூயோர்க் நகரில் அட்சன் ஆற்றில் வீழ்ந்தது. அனைவரும் உயிர் தப்பினர்.
- ஜனவரி 20 - பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றார்.
- ஜனவரி 25 - முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
- ஜனவரி 29 - இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கு. முத்துக்குமார் என்பவர் சென்னையில் தீக்குளித்து இறந்தார்.
மேலும் ஜனவரி 2009 நிகழ்வுகளுக்கு..
பெப்ரவரி 2009
தொகு- பெப்ரவரி 1 - 1744 இல் மூழ்கிய விக்டரி என்ற பிரித்தானியப் போர்க்கப்பலின் பகுதிகள் ஆங்கிலக் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டன.
- பெப்ரவரி 2 - புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இராணுவ ஏவுகணைகள் வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 5 - ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 503வது விக்கெட்டை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனையை முறியடித்தார்.
- பெப்ரவரி 7 -நாகப்பட்டினம், சீர்காழியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
- பெப்ரவரி 8 - முல்லைத்தீவு, சுதந்திபுரம் பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில், 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 8 - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மலேசியாவில் ராஜா (27 வயது) என்ற இலங்கைத் தமிழர் தீக்குளித்து இறந்தார்.
- பெப்ரவரி 9 - எகிப்தில் சக்காரா என்ற இடத்தில் 2,600 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்தின் 30 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- பெப்ரவரி 10 - வன்னியில் தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய இடங்களில் படையினர் நடத்திய தாக்குதலில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 10 - தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
- பெப்ரவரி 12 - நியூயோர்க்கில் விமானம் ஒன்று குடிமனை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 13 - ஒரிசாவில் புவனேஸ்வர் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 14 - பாகிஸ்தானில் தெற்கு வாசிரிஸ்தானில் அமெரிக்க வானூர்திகள் வீசிய ஏவுகணை வீச்சில் 25 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 19 - வன்னிப் பகுதியில் படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 126 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 20 - வான்புலிகளின் 2 கரும்புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 47 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 29 - நிலவை ஆராய அணுப்பப்பட்ட சந்திரயான்-1 தன் பணியை முடித்துக்கொண்டது.
மேலும் பெப்ரவரி 2009 நிகழ்வுகளுக்கு..
மார்ச் 2009
தொகுமேலும் மார்ச் 2009 நிகழ்வுகளுக்கு..
பிறப்புகள்
தொகு
இறப்புகள்
தொகு2000
- மார்ச் 6 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
- சூலை 10 - நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- அக்டோபர் 13 - கண்டதேவி எஸ். அழகிரிசாமி, தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1925)
- நவம்பர் 8 - சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (பி. 1912)
2001
- பிப்ரவரி 25 - டொன் பிறட்மன், ஆஸ்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
- மே 13 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)
- சூன் 21 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918)
- ஆகத்து 30 - கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
2002
- திருபாய் அம்பானி - இந்தியத் தொழில் அதிபர்
- சூலை 12 - மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)
2003
- பெப்ரவரி 1 - கல்பனா சாவ்லா, அமெரிக்க விண்வெளி வீராங்கனை (இ. 1961)
- சூலை 30 - கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (பி. 1917)
- ஆகஸ்டு 16 - இடி அமீன், உகாண்டா முன்னாள் அரசுத்தலைவர் (பி. 1924)
- செப்டம்பர் 9 - எட்வர்ட் டெல்லர், அங்கேரிய இயற்பியலாளர் (பி. 1908)
- அக்டோபர் 8 - வீரமணி ஐயர், ஈழத்துக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1931)
- அக்டோபர் 9 - ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)
2004
- அக்டோபர் 18 - சந்தன வீரப்பன் (பி 1952)
2005
- பெப்ரவரி 3 - எர்ணஸ்ட் மாயர், செர்மானிய படிமலர்ச்சி உயிரியலாளர் (பி. 1904).
- பெப்ரவரி 10 - ஆர்தர் மில்லர் (Arthur Asher Miller), அமெரிக்க நாடகாசிரியர் மற்றும் கட்டுரையாளர் (பி. 1915).
- மார்ச்சு 18 அல்பிரட் அட்காக், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்(பி. 1916).
- மார்ச்சு 28 - ஆதி குமணன், மலேசிய எழுத்தாளர் (பி. 1950).
- ஏப்ரல் 2 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், அப்போஸ்தலர் மாளிகை, வத்திக்கான் நகர்.
- செப்டம்பர் 15 - ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (பி. 1946).
- டிசம்பர் 24 - பானுமதி (பி: 1925)
- திசம்பர் 30 - எடி பார்லோ (Eddie Barlow), தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர் (பி 1940).
- இளையபெருமாள்
- எஸ். எம். கார்மேகம்
- ஏக்நாத் சொல்கர்
- காரை சுந்தரம்பிள்ளை
- கிருஷ்ணா வைகுந்தவாசன்
- கிளாட் சிமோன்
- கென் ஃபன்ஸ்டன்
- கே. வி. சுப்பண்ணா
- சார்ல்ஸ் பாமர்
- சித்திரசேன
- செ. சிவஞானசுந்தரம்
- ஜாக்குலின் ராபின்சன்
- ஜியாஃப் மில்மேன்
- ஜெமினி கணேசன்
- டிரெவர் ஜோன்ஸ்
- டெனிஸ் லின்ட்சி
- டேவிட் அயன்சைட்
- டேவிட் ஷெப்பர்ட்
- தர்மரத்தினம் சிவராம்
- நார்மன் பென்னெட்
- நோர்மன் டன்ஹாம்
- பய்சால் மஹ்மூத்
- பாலு குப்தே
- பிரயன்ட் லுக்ஹார்ட்
- பீட்டர் டிரக்கர்
- பீட்டர் ஹெய்ன்
- ம. க. அ. அந்தனிசில்
- முஸ்தாக் அலி
- ரிச்சர்ட் அல்தாம்
- ரேலங்கி செல்வராஜா
- ரோஜர் ஹோசன்
- ஹாரி கிளார்க்
- ஹோவர்ட் வாட்
2006
- டிசம்பர் 30 – சதாம் உசேன், ஈராக் அரசுத்தலைவர் (பி. 1937)
2007
- ஜனவரி 28 - ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்
- மே 16 – புலவர் கு. கலியபெருமாள் (பி. 1924)
- சூலை 8 - சந்திரசேகர், முன்னாள் இந்தியப் பிரதமர்
- சூன் 27 - டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)
- ஆகத்து 25 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
- செப்டம்பர் 6 - லூசியானோ பவரொட்டி, இத்தாலியப் பாடகர்
- செப்டம்பர் 21 - விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- நவம்பர் 2 - சு. ப. தமிழ்ச்செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
- டிசம்பர் 27 - பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
2008
- ஜனவரி 1 - தியாகராஜா மகேஸ்வரன், கொழும்பு நாடாளுமன்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்
- ஜனவரி 10 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஜனவரி 11 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)
- ஜனவரி 15 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938
- ஜனவரி 17 - பொபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)
- ஜனவரி 22 - ஹீத் லெட்ஜர்,, ஹாலிவுட் நடிகர் (பி. 1979)
- ஜனவரி 26 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
- ஜனவரி 27 - சுகார்ட்டோ, இந்தோனீசியாவின் 2வது அதிபர் (பி. 1921)
- ஜனவரி 28 - செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர்
- பெப்ரவரி 2 - ஜோசுவா லெடர்பேர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1925)
- பெப்ரவரி 5 - மகரிஷி மகேஷ் யோகி, ஆன்மிகக் குரு
- பெப்ரவரி 7 - குணால், தமிழ்த் திரைப்பட நடிகர்
- பெப்ரவரி 20 - டி. ஜி. எஸ். தினகரன், கிறிஸ்தவ மதபரப்புனர் (பி. 1935)
- பெப்ரவரி 27 - சுஜாதா, எழுத்தாளர் (பி. 1935)
- மார்ச் 6 - கி. சிவநேசன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (பி. 1957)
- மார்ச் 16 - அநுரா பண்டாரநாயக்கா, இலங்கைஅமைச்சர் (பி. 1949)
- மார்ச் 19 - ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில அறிவியல் புதின எழுத்தாளர் (பி. 1917)
- மார்ச் 19 - ரகுவரன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஏப்ரல் 6 - ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இலங்கை அமைச்சர் (பி. 1953)
- மே 20 - பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)
- ஜூன் 6 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
- ஜூன் 15 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி (பி. 1925)
- ஜூன் 24 - லியோனிடு ஹுர்விக்ஸ், பொருளியல் அறிஞர் (பி. 1917)
- ஜூலை 14 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)
- ஆகத்து 1 - ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)
- ஆகத்து 3 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பி. 1918)
- ஆகத்து 4 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)
- ஆகத்து 9 - மஹ்மூட் தர்வீஷ், பாலஸ்தீன எழுத்தாளர் (பி. 1941)
- ஆகத்து 19 - லெவி முவனவாசா, சாம்பியாவின் சனாதிபதி (பி. 1948)
- ஆகத்து 29 - ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)
- ஆகத்து 30 - கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி.. 1918)
- செப்டம்பர் 8 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)
- செப்டம்பர் 10 - வி. கே. கானமூர்த்தி, ஈழத்து நாதசுரக் கலைஞர் (பி. 1948)
- செப்டம்பர் 21 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது ஜனாதிபதி (பி. 1922)
- செப்டம்பர் 30 - ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
- அக்டோபர் 1 - பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்
- அக்டோபர் 20 - ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1933)
- நவம்பர் 19 - எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919)
- நவம்பர் 27 - வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)
- நவம்பர் 29 - ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)
- டிசம்பர் 2 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)
- டிசம்பர் 21 - கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்
- டிசம்பர் 22 - லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)
- டிசம்பர் 24 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1930)
2009
- ஜனவரி 8 - லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)
- ஜனவரி 12 - புலோலியூர் தம்பையா, ஈழத்து எழுத்தாளர்
- ஜனவரி 17 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)
- ஜனவரி 29 - கு. முத்துக்குமார், ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தீக்குளித்து இறந்த தமிழக இளைஞன்
- ஜனவரி 31 - நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
- பெப்ரவரி 12 - சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்
- பெப்ரவரி 12 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)
- பெப்ரவரி 13 - கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
- மார்ச் 11 - ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஏப்ரல் 23 - ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்
- மே 2 - கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
- மே 31 - மில்வினா டீன், டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசிப் பயணி (பி. 1912)
- மே 31 - கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)
- சூன் 3 - இரா. திருமுருகன், தமிழறிஞர் (பி. 1929)
- சூன் 6 - ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்
- சூன் 18 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
- சூன் 25 - மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)
- சூன் 27 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)
- சூன் 29 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)
- சூலை 9 - சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்
- சூலை 16 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)
- சூலை 21 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)
- சூலை 29 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
- சூலை 29 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
- ஆகத்து 1 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி. 1933)
- ஆகத்து 6 - முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
- ஆகத்து 18 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (பி. 1924)
- ஆகத்து 25 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
- ஆகத்து 29 - மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்
- செப்டம்பர் 2 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் (பி. 1949)
- செப்டம்பர் 11 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (பி. 1927)
- செப்டம்பர் 12 - நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)
- செப்டம்பர் 13 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)
- செப்டம்பர் 16 - தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
- செப்டம்பர் 22 - எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927)
- செப்டம்பர் 22 - ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர்
- செப்டம்பர் 24 - நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)
- அக்டோபர் 5 - இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (பி. 1913)
- அக்டோபர் 14 - சி. பி. முத்தம்மா, முதல் இந்தியப் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி (பி. 1924)
- அக்டோபர் 15 - தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (பி. 1923)
- அக்டோபர் 15 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (பி. 1947)
- டிசம்பர் 5 - திலகநாயகம் போல், ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர்
- டிசம்பர் 29 - பழ. கோமதிநாயகம், பாசனப் பொறியாளர்
- டிசம்பர் 30 - விஷ்ணுவர்தன், கன்னட நடிகர் (பி. 1950)
மேற்கோள்கள்
தொகு- ↑ Ludden D (1998). The newness of globalization: A schematic view of the historical zones of territorialityUniversity of Pennsylvania. Unfinished draft. Retrieved திசம்பர் 30, 2009. பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Gordon PH; Meunier S (2001). The French challenge: Adapting to globalization. Washington, D.C.: Brookings.
- ↑ Heizo T; Ryokichi C (1998). "Japan". Domestic Adjustments to Globalization (CE Morrison & H Soesastro, Eds.). Tokyo: Japan Center for International Exchange, pp. 76–102. Retrieved திசம்பர் 30, 2009.
- ↑ Fry EH (2003). Local governments adapting to globalization. National League of Cities. Retrieved திசம்பர் 30, 2009. பரணிடப்பட்டது 2011-01-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Haarstad H; Fløysand A (2007). "Globalization and the power of rescaled narratives: A case of opposition to mining in Tambogrande, Peru". Political Geography 26(3), pp. 289–308. Retrieved திசம்பர் 30, 2009 பரணிடப்பட்டது 2019-06-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tarja Halonen, president of Finland
- ↑ Who are these devoted, even obsessive contributors to Wikipedia?
- ↑ குஜராத் 2002 கலவரம்
- ↑ Conflict in Darfur
- ↑ கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை
- ↑ Jalal Talabani, president of Iraq
- ↑ வரலாற்றில் இன்று: 7 புதிய உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட நாள்!
- ↑ மக்கள் அதிபர் பராக் ஒபாமா கண்ட அமெரிக்கப் பெருங்கனவு! | இன்று ஒன்று நன்று