நிக்கராகுவா
நிக்கராகுவா (Nicaragua,[b] அதிகாரபூர்வமாக நிக்கராகுவா குடியரசு (Republic of Nicaragua) என்பது புவியியல் ரீதியாக நடு அமெரிக்காவில் உள்ள மிக்கப்பெரிய நாடு ஆகும். 130,370 சதுரகிமீ (50,340 சதுரமைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 2024 தரவுகளின் படி மக்கள்தொகை 7,142,529 ஆகும்.[13] இது குவாத்தமாலா, ஒண்டுராசு ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நடு அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.
நிக்கராகுவா குடியரசு Republic of Nicaragua República de Nicaragua | |
---|---|
குறிக்கோள்: En Dios confiamos "கடவுளை நம்புகிறோம்"[a] | |
நாட்டுப்பண்: Salve a ti, Nicaragua "உங்களுக்கு வணக்கம், நிக்கராகுவா" | |
தலைநகரம் | மனாகுவா 12°6′N 86°14′W / 12.100°N 86.233°W |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானிய மொழி |
பிராந்திய மொழிகள் |
|
இனக் குழுகள் (2023[2]) |
|
சமயம் |
|
மக்கள் |
|
அரசாங்கம் | சர்வாதிகார ஆட்சியில் ஒருமுக தலைவர் ஆளும் அரசு முறைமை[5][6][7] |
• அரசுத்தலைவர் | தானியேல் ஒர்ட்டேகா |
• துணைத் தலைவர் | ரொசாரியோ முரியோ |
சட்டமன்றம் | தேசியப் பேரவை |
விடுதலை எசுப்பானியா, மெக்சிக்கோ, நடு அமெரிக்க சமட்டிக் குடியரசு இடமிருந்து | |
• அறிவிப்பு | 15 செப்டம்பர் 1821 |
• அங்கீகாரம் | 25 சூலை 1850 |
• முதல் மெக்சிக்கப் பேரரசு | 1 சூலை 1823 |
• நடு அமெரிக்க சமட்டிக் குடியரசு | 31 மே 1838 |
• புரட்சி | 19 சூலை 1979 |
• நடப்பு அரசியலமைப்பு | 9 சனவரி 1987[8] |
பரப்பு | |
• மொத்தம் | 130,375 km2 (50,338 sq mi) (96-ஆவது) |
• நீர் (%) | 7.14 |
மக்கள் தொகை | |
• 2023 மதிப்பீடு | 6,359,689[9] (110-ஆவது) |
• அடர்த்தி | 51/km2 (132.1/sq mi) (155-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | $56.697 பில்.[10] (115-ஆவது) |
• தலைவிகிதம் | $8,492[10] (129-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | $17.843 billion[10] (127-ஆவது) |
• தலைவிகிதம் | $2,673[10] (134-ஆவது) |
ஜினி (2014) | 46.2[11] உயர் |
மமேசு (2022) | 0.669[12] மத்திமம் · 130-ஆவது |
நாணயம் | கோர்டோபா (NIO) |
நேர வலயம் | ஒ.அ.நே−6 (நடு நேர வலயம்) |
வாகனம் செலுத்தல் | வலம் |
அழைப்புக்குறி | +505 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NI |
இணையக் குறி | .ni |
நிக்கராகுவாவின் எல்லைகளாக, வடக்கே ஒண்டுராசு, கிழக்கே கரிபியக் கடல், தெற்கே கோஸ்ட்டா ரிக்கா, மேற்கே அமைதிப் பெருங்கடலும் எல் சால்வடோரின் கடல் எல்லைகளும், கிழக்கே கொலம்பியாவும் அமைந்துள்ளன. நிக்கராகுவாவின் மிகப்பெரிய நகரமும் அத தேசியத் தலைநகரும் மனாகுவா ஆகும். 1,055,247 (2020) மக்கள்தொகையுடன் இது நடு அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரம் ஆகும். நிக்கராகுவா மிகவும் வளமான மண், விளை நிலங்களைக் கொண்டிருப்பதால் "நடு அமெரிக்காவின் ரொட்டிக் கூடை" என்று அழைக்கப்படுகிறது.[14][15][16][17][18][19] நிக்கராகுவாவின் பல்லின மக்களில் மெசுட்டிசோ, பழங்குடியினர், ஐரோப்பிய, ஆப்பிரிக்க மரபுவழி மக்கள் உள்ளனர். மொசுக்கிட்டோ கரையோரப் உள்ள பழங்குடியினர் தங்கள் சொந்த மொழிகளையும் ஆங்கிலத்தையும் பேசினாலும், நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி எசுப்பானியம் ஆகும்.
பண்டைய காலத்திலிருந்தே பல்வேறு பூர்வீக கலாச்சாரங்களால் புழங்கப்பட்டு வந்த இப்பகுதி 16 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. நிக்கராகுவா எசுப்பானியாவிடம் இருந்து 1821 இல் விடுதலை பெற்றது. மொசுக்கிட்டோ கரையோரம் வேறுபட்ட வரலாற்றுப் பாதையைப் பின்பற்றியது, 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் குடியேற்றம் நடைபெற்று பின்னர் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது. இது 1860 இல் நிக்கராகுவாவின் தன்னாட்சிப் பிரதேசமாக மாறியது, இதன் வடக்குப் பகுதி 1960 இல் ஒண்டுராசுக்கு மாற்றப்பட்டது. நிக்கராகுவா விடுதலை பெற்றதில் இருந்து அரசியல் அமைதியின்மை, சர்வாதிகாரம், ஆக்கிரமிப்பு, நிதி நெருக்கடி போன்றவற்றிற்கு காலத்துக்குக் காலம் உட்பட்டுள்ளது, இதில் 1960கள், 1970களில் நடைபெற்ற நிக்கராகுவா புரட்சி, 1980களின் போர் ஆகியனவும் அடங்கும்.
கலாச்சார மரபுகளின் கலவையானது நாட்டுப்புறவியல், உணவு வகைகள், இசை, இலக்கியம் ஆகியவற்றில் கணிசமான பன்முகத்தன்மையை உருவாக்கியுள்ளது, இதில் நிக்கராகுவா கவிஞர்கள், ரூபன் டாரியோ போன்ற போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்புகளும் அடங்கும். "ஏரிகள் மற்றும் எரிமலைகளின் நிலம்" என்று அறியப்படும் நிக்கராகுவா,[20][21] அமெரிக்கக் கண்டத்தின் இரண்டாவது பெரிய மழைக்காடான போசாவாசு உயிர்க்கோளக் காப்பகத்தையும் கொண்டுள்ளது.[22] உயிரியல் பன்முகத்தன்மை, சூடான வெப்பமண்டலக் காலநிலை, செயல்நிலை எரிமலைகள் ஆகியவை நிக்கராகுவாவை பிரபலமான சுற்றுலாத் தலமாக ஆக்குகின்றன.[23][24]
ஐக்கிய நாடுகள் அவையின் நிறுவகர்களில் ஒன்றான நிக்கராகுவா,[25] அணிசேரா இயக்கம்,[26] நமது அமெரிக்க மக்களுக்கான பொலிவேரியக் கூட்டணி,[27] இலத்தீன் அமெரிக்க, கரீபியன் மாநிலங்களின் சமூகம் ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது.[28]
குறிப்புகள்
தொகு- ↑ நிக்கராகுவாவின் கோர்டோபா நாணயத்தில் (வங்கி நாணயத் தாள்களிலும் நாணயங்களிலும்) எழுதப்பட்டுள்ளதன் படி.[1]
- ↑ /ˌnɪkəˈrɑːɡwə, -ˈræɡ-, -ɡjuə/ (ⓘ); es
மேற்கோள்கள்
தொகு- ↑ Banco Central de Nicaragua பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Nicaragua". The World Factbook (in ஆங்கிலம்). Central Intelligence Agency. 19 June 2023. Archived from the original on 20 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.
- ↑ The Latin American Socio-Religious Studies Program / Programa Latinoamericano de Estudios Sociorreligiosos (PROLADES) பரணிடப்பட்டது 12 சனவரி 2018 at the வந்தவழி இயந்திரம் PROLADES Religion in America by country
- ↑ "CENSO DE POBLACIÓN 2005" (PDF). 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Awadalla, Cristina (March 23, 2023). "Authoritarian Populism and Patriarchal Logics: Nicaragua's Engendered Politics". Social Politics: International Studies in Gender, State & Society (Oxford University Press (OUP)) 30 (2): 701–723. doi:10.1093/sp/jxad006. பன்னாட்டுத் தர தொடர் எண்:1072-4745.
- ↑ Córdoba, José de (October 25, 2022). "U.S. Imposes Sanctions on Nicaragua's Authoritarian Regime". WSJ. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் September 3, 2023.
- ↑ "Nicaragua: Freedom in the World 2023 Country Report". Freedom House. May 30, 2019. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் September 3, 2023.
- ↑ "Nicaragua". CIA World Factbook இம் மூலத்தில் இருந்து 20 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210320071255/https://www.cia.gov/the-world-factbook/countries/nicaragua.
- ↑ "Nicaragua". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2025 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023. (Archived 2023 edition)
- ↑ 10.0 10.1 10.2 10.3 "World Economic Outlook Database, October 2024 Edition. (Nicaragua)". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 10 October 2024. பார்க்கப்பட்ட நாள் 9 November 2024.
- ↑ "GINI index (World Bank estimate)". data.worldbank.org. உலக வங்கி. Archived from the original on 22 May 2020. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019.
- ↑ "Human Development Report 2023/2024" (PDF) (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 13 March 2024. Archived (PDF) from the original on 13 March 2024. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ "Nicaragua Population 1950-2024".
- ↑ "Yara expands presence in Central America". 23 February 2018.
- ↑ "Nicaragua's Great Leap Forward". 8 May 2008.
- ↑ "The Environment: Saving Nicaragua's Soils".
- ↑ "The New Face of Global Missions". 15 March 2016.
- ↑ "The week in focus" (PDF).
- ↑ "Belts tightening in Nicaragua". Los Angeles Times. 6 May 2008.
- ↑ Brierley, Jan (October 15, 2017). "Sense of wonder: Discover the turbulent past of Central America" (in en). Daily Express இம் மூலத்தில் இருந்து 18 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220618135750/https://www.express.co.uk/travel/beach/865185/Discover-the-turbulent-past-Central-America-travel.
- ↑ Wallace, Will; Wallace, Camilla (April 10, 2010). "Traveller's Guide: Nicaragua". The Independent இம் மூலத்தில் இருந்து 18 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220618/https://www.independent.co.uk/travel/americas/travellers-guide-nicaragua-1940000.html.
- ↑ Peter (2019-02-16). "12 largest rainforests in the world and where to find them". Atlas & Boots (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
- ↑ Dicum, G (2006-12-17). "The Rediscovery of Nicaragua". Travel Section (New York: TraveThe New York Times) இம் மூலத்தில் இருந்து 10 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110510020955/http://travel.nytimes.com/2006/12/17/travel/17Nicaragua.html?ref=travel.
- ↑ Davis, LS (2009-04-22). "Nicaragua: The next Costa Rica?". Mother Nature Network. MNN Holdings, LLC. Archived from the original on 11 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.
- ↑ Kurtas, Susan. "Research Guides: UN Membership: Founding Members". research.un.org (in English). Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Vanden, Harry E.; Morales, Waltraud Queiser (1985). "Nicaraguan Relations with the Nonaligned Movement". Journal of Interamerican Studies and World Affairs 27 (3): 141–161. doi:10.2307/165603. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1937. https://www.jstor.org/stable/165603. பார்த்த நாள்: 26 June 2022.
- ↑ "A Guide to ALBA". Americas Quarterly (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
- ↑ "CELAC | CELAC INTERNATIONAL" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-16. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
வெளி இணைப்புகள்
தொகுஅரசு
தொகு- பொதுத் தரவுகள்
- Nicaragua பரணிடப்பட்டது 20 மார்ச்சு 2021 at the வந்தவழி இயந்திரம். த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
- Nicaragua Corruption Profile from the Business Anti-Corruption Portal
- Nicaragua at UCB Libraries GovPubs
- Nicaragua profile பரணிடப்பட்டது 3 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் from the BBC News
- Wikimedia Atlas of Nicaragua
- Maps பரணிடப்பட்டது 28 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம் from WorldAtlas.com
- Nicaraguaportal பரணிடப்பட்டது 7 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்: Official information of the Honorary Consulate of Nicaragua
- Key Development Forecasts for Nicaragua பரணிடப்பட்டது 16 திசம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம் from International Futures
ஏனையவை
தொகு- Visit Nicaragua பரணிடப்பட்டது 28 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- The State of the World's Midwifery – Nicaragua Country Profile பரணிடப்பட்டது 12 மே 2013 at the வந்தவழி இயந்திரம்