சிறீவிஜயம்
சிறீ விஜயம் (ஆங்கிலம்: Srivijaya; மலாய்: Srivijaya; இந்தோனேசியம்: Sriwijaya; srividʒaja; சமசுகிருதம்: श्रीविजय) என்பது இந்தோனேசியா, சுமத்திரா தீவை மையமாகக் கொண்ட பழைய பேரரசு ஆகும்.[2]
சிறீ விஜயம் Srivijaya Sriwijaya | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
671–1025 | |||||||||
![]() 8 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை சிறீ விஜயாவின் அதிகபட்ச பரப்பளவு | |||||||||
![]() சிறீ விஜயப் பேரரசின் விரிவாக்க வரைபடம்; பலெம்பாங், சுமாத்திரா, சாவகம் (தீவு), இரியாவு தீவுகள், பாங்கா பெலித்தோங் தீவுகள், சிங்கப்பூர், மலாய் தீபகற்பம், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், கலிமந்தான், சரவாக், புரூணை, சபா, தருமசிராயா, ஜாம்பி பிரிவு | |||||||||
தலைநகரம் | பலெம்பாங்[1]:295 | ||||||||
பேசப்படும் மொழிகள் | பழைய மலாய், சமசுகிருதம் | ||||||||
சமயம் | இந்து, பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• கி.பி. 683 | ஜெயநேசன் | ||||||||
• கி.பி. 775 | தருமசேது | ||||||||
• கி.பி. 792 | சமரதுங்கன் | ||||||||
• கி.பி. 835 | பாலபுத்திரன் | ||||||||
• கி.பி. 988 | சூடாமணி வருமதேவன் | ||||||||
வரலாறு | |||||||||
• ஜெயநேசன் பயணம் (கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு) | 671 | ||||||||
1025 | |||||||||
நாணயம் | தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் | ||||||||
|
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/9e/Dapunta_Hyang_Sri_Jayanasa.jpg/260px-Dapunta_Hyang_Sri_Jayanasa.jpg)
தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இந்தப் பேரரசு பரவி இருந்தது. இந்த அரசு இருந்ததற்கான சான்றுகள் 7-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் இருந்து கிடைத்து உள்ளன.[3]
இந்தோனேசியாவின் வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேரரசு என்றால் அதுதான் சிறீ விஜய பேரரசு ஆகும்.[4] கி.பி. 650-ஆம் ஆண்டில் ஜெயநேசன் (Sri Jayanasa) என்பவர் உருவாக்கிய பேரரசு. 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமை கொண்ட இந்தப் பேரரசு; ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தத் தென்கிழக்காசிய நாடுகளையே ஆட்சி செய்த மாபெரும் அரசாகும்.[5]
இந்த அரசு சுமாத்திராவை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கும் மேலாக சிறீ விஜய பேரரசைப் பற்றி யாருக்கும் எதுவுமே தெரியாமல் இருந்தது.[6]
1918-ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் சிறீ விஜய பேரரசைப் பற்றி ஆய்வுகள் செய்து பற்பல வரலாற்று உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர்தான் சிறீ விஜய பேரரசின் இரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தன.[7] [8]
பொது
தொகு7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும்; 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், சிறீ விஜய பேரரசு தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மேலாதிக்க நாடாக உச்சம் கண்டது. அண்டை நாடுகளான மாதரம் இராச்சியம், கோம் இராச்சியம் (Khom Empire) எனும் கெமர் பேரரசு (Khmer Empire) மற்றும் சம்பா இராச்சியம் (Champa) போன்ற நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தது. சில கட்டங்களில் அவற்றுக்குள் ஆதிக்கப் போட்டிகளும் இருந்தன.[9]
சிறீ விஜய பேரரசின் முக்கிய வெளிநாட்டு ஆர்வம் சீனாவுடன் இலாபகரமான வணிக ஒப்பந்தங்களை வளர்ப்பதாகும். இது தாங் அரசமரபு முதல் சொங் அரசமரபு வரை நீடித்தது. அத்துடன், வங்காளத்தில் பௌத்த பாலப் பேரரசு; மத்திய கிழக்கில் இசுலாமிய கலிபா ஆகியவற்றுடன் மத, பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தது.[10]
சீனத் துறவி யி சிங்
தொகுசீன பௌத்த துறவியான யி சிங் (Yijing) என்பவர் தான் ஸ்ரீ விஜயத்தி்ல் கி.பி 671-ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சுமத்திராவி்ல் பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டில் (Kedukan Bukit inscription) ஸ்ரீ விஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683-ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.[11]
மலாக்கா நீரிணை தென் சுமத்திரா கடற்கரைப் பகுதியில் பாங்கா தீவு உள்ளது. உலகின் அழகிய தீவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தீவில் கோத்தா கப்பூர் எனும் ஒரு கிராமத்தில் தான் சிறீ விஜய பேரரசு காலத்தின் கல்வெட்டு கிடைத்தது. கோத்தா கப்பூர் கல்வெட்டு (Kota Kapur Inscription) என்று அழைக்கப்படுகிறது. இது பழைய மலாய் மொழியில் பல்லவ எழுத்து வடிவத்தில் வரிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[12]:82
கோத்தா கப்பூர் கல்வெட்டு
தொகுகோத்தா கப்பூர் கல்வெட்டு கிடைத்த பின்னர் சிறீ விஜய பேரரசைப் பற்றிய உண்மையான வரலாறும் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. 1892-ஆம் ஆண்டு ஜே.கே. டெர் மியூலன் (J.K. van der Meulen) என்பவர் மேற்கொண்ட அகழாய்வில் தான் கோத்தா கப்பூர் கல்வெட்டு கிடைத்தது. கோத்தா கப்பூர் கல்வெட்டில் கிடைத்த ஒரு முக்கியமான பதிவு, பிராமி மொழியில் எழுதப்பட்டு உள்ளது.[13]
Siddha titam hamba nvari i avai kandra kayet ni paihumpaan namuha ulu lavan tandrun luah makamatai tandrun luah vinunu paihumpaan hakairum muah kayet ni humpa unai tunai.
”சிறீ விஜய இராணுவ வீரர்கள் ஜாவாவை எதிர்கொள்கிறார்கள். சிறீ விஜய அரசின் வேண்டுகோளை ஜாவா ஏற்கனவே நிராகரித்து விட்டது. அதனால் சிறீ விஜய படையெடுப்பு செய்ய வேண்டி இருக்கிறது” என பொருள்படுகிறது[12]
கோத்தா கப்பூர் கல்வெட்டு ஒரு சின்னக் கோபுரம் போல செதுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதன் உயரம் 177 செ.மீ. அகலம் 32 செ.மீ. தலைப்பாகத்தின் சுற்றுவட்டம் 19 செ.மீ. அதன் பின்னர் 1920 நவம்பர் 1-ஆம் தேதி தாலாங் துவோ (Talang Tuwo) கல்வெட்டு கிடைத்தது.
இதற்குப் பின்னர்தான் 1920 நவம்பர் 29ஆம் தேதி கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (Kedukan Bukit Inscription) கிடைத்தது. இந்தக் கல்வெட்டுகள் தான் சிறீ விஜய பேரரசைப் பற்றிய இரகசியங்களை வெளியுலகத்திற்குத் தெரிய வைத்தன.
மறக்கப்பட்ட பேரரசு
தொகுசிறீ விஜயம் பேரரசின் அழிவிற்குப் பிறகு அந்தப் பேரரசு முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இந்தப் பேரரசு இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. 1918-ஆம் ஆண்டில் பிரெஞ்சு தூரக் கிழக்குப் பள்ளியின் பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் ஜார்ஜ் கோடெஸ் (George Cœdès) என்பவர் இப்படி ஒரு பேரரசு இருந்து இருக்கும் என சொன்னார்.[14]
அதன் பின்னர் இந்தப் பேரரசு இருந்து இருக்கும் என அதிகாரப் பூர்வமாக சந்தேகிக்கப் பட்டது. 1993-ஆம் ஆண்டில் சுமாத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் (Musi River) பலெம்பாங் என்ற இடத்தில் இந்தப் பேரரசின் தலைநகரம் இருந்து இருக்கும் என நிரூபிக்கப்பட்டது.[15]
சொற்பிறப்பியல்
தொகுசிறீ ("ஸ்ரீ") விஜயா என்பது சமசுகிருதம்: श्रीविजय, श्रफिजा எனும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்ட பெயர் ஆகும். ஸ்ரீ (Śrī)[16] என்றால் "அதிர்ஷ்டசாலி", "வளமானவர்" அல்லது "மகிழ்ச்சியானவர்" என்று பொருள்படும். மேலும் இந்து மதத்தில் தெய்வீகத்தனமை என்றும் பொருள்படும். விஜய[17] என்றால் "வெற்றி" அல்லது "சிறந்தவர்" என்று பொருள்படும்[18] இவ்வாறு, ஸ்ரீ விஜயா என்ற கூட்டுச் சொல்லின் பொருள் "பிரகாசிக்கும் வெற்றி",[19] "அற்புதமான வெற்றி", "வளமான வெற்றியாளர்", "சிறப்பின் பிரகாசம்" அல்லது "புகழ்பெற்றவர்" என்பதாகும்
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுமாத்திரா மற்றும் அண்டை தீவுகளின் கல்வெட்டுகளை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் "ஸ்ரீவிஜயா" என்ற சொல் ஒரு மன்னரின் பெயரைக் குறிக்கிறது என்று நினைத்தனர். 1913-ஆம் ஆண்டில், கண்டுபிடிக்கப்பட்ட 7-ஆம் நூற்றாண்டு கோத்தா கப்பூர் கல்வெட்டில் (1892-இல் கண்டுபிடிக்கப்பட்டது) "ஸ்ரீ விஜயா" என்ற பெயரை முதன்முதலில் அடையாளம் கண்டவர் கல்வெட்டு ஆசிரியர் எச். கெர்ன் (H. Kern) என்பவர் ஆவார்.
இருப்பினும், அந்த நேரத்தில் அது "விஜயா" என்ற மன்னரைக் குறிக்கலாம் என்றும்; "ஸ்ரீ" என்பது ஒரு மன்னர் அல்லது ஆட்சியாளருக்கான மரியாதைக்குரிய பட்டமாக இருக்கலாம் என்றும் கல்வெட்டு ஆசிரியர் எச். கெர்ன் நம்பினார்.[20]
மாதரத்தின் சஞ்சயன்
தொகு16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஜாவாவில் இயற்றப்பட்ட செரித்தா பாராயாங்கான் (Carita Parahyangan) எனும் சுண்டானிய கையெழுத்துப் பிரதியில் "சாங் ஸ்ரீ விஜயா" என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதியில், மாதரத்தின் சஞ்சயன் (Sanjaya of Mataram) என்பவர் ஜாவாவில் மன்னர் ஆட்சி உரிமையைப் பெற்ற பிறகு, மன்னர் சாங் ஸ்ரீ விஜயா (Sang Sri Wijaya) என்பவருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.[21]
பின்னர், உள்ளூர் கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள்; மற்றும் சீன வரலாற்றுப் பதிவுகளை ஆய்வு செய்த பிறகு, "ஸ்ரீவிஜயா" சொல் ஓர் அரசியல் அல்லது ஓர் இராச்சியத்தைக் குறிக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
வரலாறு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Miksic, John N.; Goh, Geok Yian (2017). Ancient Southeast Asia. London: Routledge.
- ↑ "Indonesia - The Malay kingdom of Srivijaya-Palembang". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
- ↑ Rausa-Gomez, Lourdes (20 January 1967). "Sri Vijaya and Madjapahit". Philippine Studies 15 (1): 63–107. https://www.jstor.org/stable/42720174.
- ↑ Sastri, K. A. Nilakanta (20 January 2024). "Śrī Vijaya". Bulletin de l'École Française d'Extrême-Orient 40 (2): 239–313. https://www.jstor.org/stable/43733093.
- ↑ Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4155-67-5.
- ↑ "SRIVIJAYAN CIVILIZATION : The Awakening of a Maritime Kingdom" (PDF). Repositori Kemdikbud (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-13.
- ↑ Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. pp. 8–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10518-5.
- ↑ Kulke, Hermann (2016). "Śrīvijaya Revisited: Reflections on State Formation of a Southeast Asian Thalassocracy". Bulletin de l'École française d'Extrême-Orient 102: 45–96. doi:10.3406/befeo.2016.6231. பன்னாட்டுத் தர தொடர் எண்:0336-1519. https://www.jstor.org/stable/26435122.
- ↑ Laet, Sigfried J. de; Herrmann, Joachim (1994). History of Humanity. Routledge.
- ↑ Thwin, Maitrii Aung (ed.). "Journal of Southeast Asian Studies | Cambridge Core" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-13.
- ↑ Partogi, Sebastian (November 25, 2017). "Historical fragments of Sriwijaya in Palembang". The Jakarta Post. https://www.thejakartapost.com/adv/2017/11/25/historical-fragments-of-sriwijaya-in-palembang.html.
- ↑ 12.0 12.1 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ "Penelitian di situs Depdiknas". Archived from the original on 2006-04-21. பார்க்கப்பட்ட நாள் 2010-04-12.
- ↑ Peter Bellwood; James J. Fox; Darrell Tryon (1995). Bellwood, Peter; Fox, James J.; Tryon, Darrell (eds.). The Austronesians: Historical and Comparative Perspectives. எண்ணிம ஆவணச் சுட்டி:10.22459/A.09.2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7315-2132-6.
- ↑ Munoz. Early Kingdoms. p. 122.
- ↑ Glashoff, Klaus. "Sanskrit Dictionary for Spoken Sanskrit". learnsanskrit.cc. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
- ↑ Glashoff, Klaus. "Sanskrit Dictionary for Spoken Sanskrit". learnsanskrit.cc. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
- ↑ Munoz. Early Kingdoms. p. 117.
- ↑ "Srivijaya: A primer - Part 1 | SEAArch - Southeast Asian Archaeology" (in en-GB). SEAArch - Southeast Asian Archaeology. 2007-06-07. http://www.southeastasianarchaeology.com/2007/06/07/srivijaya-a-primer-part-1/.
- ↑ MNI (2017-11-21). "Prasasti Kota Kapur dan nama Kedatuan Sriwijaya". Museum Nasional (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
- ↑ "Téks Carita Parahyangan". Google Docs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Srivijaya தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Britannica Encyclopedia: Srivijaya empire
- Articles about Srivijaya Kingdom in Southeast Asian Archaeology.com
- Timeline of Indonesia from prehistory to present: click on the period for info பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம்
- Melayu online: Çriwijaya Kingdom
- Candi Muaro Jambi
- Śrīvijaya―towards ChaiyaーThe History of Srivijaya - Takahashi Suzuki
- Chaiya National Museum