தருமசிராயா

இந்தோனேசியா, ஜாம்பி, பாத்தாங்காரி ஆற்றுப் பகுதியில் அமைந்து இருந்த பௌத்த மய மெலாயு இராச்சியம்

தருமசிராயா (ஆங்கிலம்: Dharmasraya) என்பது 11-ஆம் நூற்றாண்டில், இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா, ஜாம்பி, பாத்தாங்காரி ஆற்றுப் பகுதியில் (Batang Hari River) அமைந்து இருந்த பௌத்த மய மெலாயு இராச்சியத்தின் (Melayu Kingdom) தலைநகரம் ஆகும்.[1]

தருமசிராயா இராச்சியம்

பாடாங் ரோக்கோ கல்வெட்டில் (Padang Roco Inscription) பொறிக்கப்பட்டுள்ள பதிவின் படி, மெலாயு இராச்சியத்தின் தலைநகரான தருமசிராயா அல்லது மெலாயு பூமி (bhūmi Mālayu) அல்லது சுவர்ணபூமி (Suvarnnabhumi) என்ற பெயரால் அடையாளம் காணலாம்.

பொது

தொகு

தென்னிந்தியாவில் இருந்து சோழப் பேரரசின் அரசன் இராசேந்திர சோழன் படையெடுத்த பிறகு, சுமாத்திரா தீவுகள் மற்றும் மலாய் தீபகற்பத்தின் மீதான சைலேந்திர அரச மரபின் (Sailendra Dynasty) அதிகாரம் பலவீனம் அடைந்தது.

சில காலம் கழித்து சைலேந்திர அரச மரபின் அதிகாரத்தை ஏற்று ஒரு புதிய அரசமரபு உருவானது. அந்தப் புதிய அரச மரபின் பெயர் மௌலி அரச்மரபு (Mauli Dynasty) ஆகும்.[2] அந்த வகையில் தருமசிராயா என்பதை சிறீவிஜயத்தின் வாரிசாகக் கருதலாம்.

அமைவு

தொகு

மகாராஜா மௌலியின் (Maharaja Mauli) பெயரைக் கொண்ட மிகப் பழமையான கல்வெட்டு 1183-ஆம் ஆண்டு கிராகி கல்வெட்டாகும் (Grahi Inscription). அந்தக் கல்வெட்டு, மலாய் தீபகற்பத்தில் தெற்கு தாய்லாந்து சாய்யா (Chaiya) எனும் இடத்தில் 1183-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கிராகி கல்வெட்டு, மகாராஜா செரிமத் திரிலோக்யராஜ மௌலி பூசண வர்மதேவாவின் (Maharaja Srimat Trailokyaraja Maulibhusana Warmadewa) ஆணையைக் கொண்டுள்ளது. அந்தக் காலக்கட்டத்தில், சாய்யா எனும் கிராகியை (Grahi) ஆட்சி செய்த தளபதி பூபதி என்பவருக்கு அந்த ஆணை அனுப்பப்பட்டு உள்ளது.

10 தங்க தம்ளின் (Tamlin) மதிப்பில் 1 பாரா 2 துலா எடையுள்ள புத்தர் சிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அந்தச் சிலையை உருவாக்கக் காரணமாக இருந்த கலைஞரின் பெயர் மிரட்டன் செரி நானோ (Mraten Sri Nano)

பாடாங் ரோக்கோ கல்வெட்டு

தொகு
 
தருமசிராயா இராச்சிய கொடி

மௌலி அரசமரபின் இரண்டாவது கல்வெட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1286-இல் கிடைத்தது. அந்தக் கல்வெட்டில், தருமசிராயா எனும் பெயர்; மற்றும் அப்போதைய தருமசிராயா இராச்சியத்தின் மன்னர் செரிமத் திரிபுவனராஜ மௌலி வர்மதேவாவின் (Srimat Tribhuwanaraja Mauli Warmadewa) பெயர் பொறிக்கப்பட்டு இருந்தன. கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.[3]:201

இந்தக் கல்வெட்டு பாத்தாங்காரி ஆற்றுப் பகுதியில் 1286-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பாடாங் ரோக்கோ கல்வெட்டு என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

ஆட்சியாளர்கள்

தொகு

தருமசிராயா அரசர்கள்:

திகதி பெயர் தலைநகரம் கல்வெட்டுகள்; நிகழ்வுகள்
1183 செரிமத் திரிலோக்யராஜ மௌலி பூசண வர்மதேவா தருமசிராயா கிராகி கல்வெட்டு 1183 சகாயா, தென் தாய்லாந்து, புத்தர் சிலை
1286 செரிமத் திரிபுவனராஜ மௌலி வர்மதேவாவின் தருமசிராயா பாடாங் ரோக்கோ கல்வெட்டு 1286 சிக்குந்தூர் (தற்போது தருமசிராயா மாநிலம்)
1347 செரிமத் செரி உதயாதித்யவர்மன் பிரதாபபராக்ரம ராஜேந்த்ர மௌலி வர்மதேவா பகாருயோங் பகாருயோங் அமோகபாசா கல்வெட்டு 1347 தருமசிராயா குபுராஜோ கல்வெட்டு, பகாருயோங் (தற்போது தானா டாத்தார் மாநிலம்)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. J.L.A. Brandes, 1902, Nāgarakrětāgama; Lofdicht van Prapanjtja op koning Radjasanagara, Hajam Wuruk, van Madjapahit, naar het eenige daarvan bekende handschrift, aangetroffen in de puri te Tjakranagara op Lombok
  2. Muljana, Slamet (2006), Sriwijaya, Yogyakarta: LKiS, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8451-62-7.
  3. Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
"https://ta.wiki.x.io/w/index.php?title=தருமசிராயா&oldid=4186699" இலிருந்து மீள்விக்கப்பட்டது