சுண்டா இராச்சியம்

669 முதல் 1579 வரை ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சுண்டானிய இந்து இராச்சியம்

சுண்டா இராச்சியம் (ஆங்கிலம்: Sunda Kingdom; இந்தோனேசியம்: Karajaan Sunda; சுண்டா மொழி: ᮊᮛᮏᮃᮔ᮪ ᮞᮥᮔ᮪ᮓ) என்பது 669 முதல் 1579 வரை ஜாவா தீவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சுண்டானிய இந்து இராச்சியம் ஆகும். இன்றைய பண்டென், ஜகார்த்தா, மேற்கு ஜாவா மற்றும் மத்திய ஜாவாவின் மேற்குப் பகுதிகளைக் கொண்டிருந்தது.

சுண்டா இராச்சியம்
Sunda Kingdom
Karajaan Sunda
ᮊᮛᮏᮃᮔ᮪ ᮞᮥᮔ᮪ᮓ
669–1579
சுண்டா இராச்சியம்
சுண்டா இராச்சியம்
தலைநகரம்காவாலி
  • பாக்குவான்
பேசப்படும் மொழிகள் சுண்டா மொழி சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம்
பௌத்தம்
சுண்டா விவித்தான்
அரசாங்கம்முடியாட்சி
மகாராஜா 
• 723–732
சஞ்சயா
• 1371–1475
நிஸ்கலா வாஸ்து காஞ்சனா
• 1482–1521
வடுக மகாராசா
• 1567–1579
ராகா மூலியா
வரலாறு 
• தருஸ்பாவா மன்னரின் முடிசூட்டு விழா; சுண்டா → தருமநகரா
669
• டெமாக் சுல்தானகம் 1527, பான்தேன் சுல்தானகம் 1570
1579
நாணயம்பூர்வீக தங்கம்; வெள்ளி நாணயங்கள்
முந்தையது
பின்னையது
தருமநகரா இராச்சியம்
சுமேதாங் லாராங் இராச்சியம்
பான்தேன் சுல்தானகம்
சிரபோன் சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்இந்தோனேசியா

சுண்டா இராச்சியத்தின் தலைநகரம் அதன் வரலாற்றில் பல முறை மாற்றப்பட்டது. கிழக்கில் காலோ இராச்சியம் (Galuh) (கவாலி) (Kawali) பகுதிக்கும் மேற்கில் பக்குவான் பஜாஜாரான் நகரத்திற்கும் (Pakuan Pajajaran) இடையில் இடம்பெயர்ந்துள்ளது.[1]:379

சுண்டா இராச்சியத்தின் மன்னர் வடுக மகாராசாவின் (Sri Baduga Maharaja) ஆட்சிக் காலத்தில் உச்சத்தை எட்டியது, அவரின் ஆட்சி 1482 முதல் 1521 வரை சுண்டானிய மக்களிடையே அமைதி மற்றும் செழிப்புக்கான காலமாக, பாரம்பரியமாக நினைவு கூரப்படுகிறது.[2]

பொது

தொகு

சுண்டா தீவுகள்

தொகு
 
சுண்டானிய எழுத்துகளில் சுந்தா என்ற சொல்
 
பத்து தூலிஸ் கல்வெட்டு (c.1900)
 
பூஜாங்கா மானிக் கையெழுத்துப் பிரதி (c.1400)

சுமாத்திரா தீவையும், ஜாவா தீவையும் சுண்டா நீரிணை இணைக்கின்றது. இந்த நீரிணைக்கு மேற்கில் உள்ள நிலப் பகுதியைச் சுண்டா என்று அழைக்கிறார்கள். அதாவது ஜாவா தீவிற்கு மேற்குப் பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் தான் சுண்டா துணைக் கண்டம் ஆகும்.

இன்றைய காலக் கட்டத்தில் 40 மில்லியன் சுண்டா இன மக்கள், சுண்டா துணைக் கண்டத்தில் வாழ்கிறார்கள். சுண்டா இனம் தனி ஓர் இனமாகும். அந்த இனத்தவர் சுண்டா மொழி (Sundanese language) எனும் மொழியைப் பேசுகிறார்கள். 16-ஆம் நூற்றாண்டு வரையில், ஜாவாவில் சுண்டா மொழி ஓர் அதிகார மொழியாக இருந்தது. சமசுகிருத மொழியும் துணை அதிகார மொழியாக இருந்தது.

சுண்டா மொழி

தொகு

முந்தைய காலத்து சாலகநகரா இராச்சியம் (Salakanagara Kingdom); தருமநகரா இராச்சியம்; சுந்தா இராச்சியம்; காலோ இராச்சியம் (Galuh Kingdom); மற்றும் பஜாஜாரான் இராச்சியம் (Pajajaran Kingdom); ஆகியவற்றின் அதிகார மொழியாகவும் சுண்டா மொழி விளங்கி உள்ளது. சுண்டா மொழியில் பல்லவ எழுத்துகளைக் கொண்ட சமசுகிருதச் சொற்கள் உள்ளன. அவற்றில் தமிழ்ச் சொற்களும் கலந்து உள்ளன.

பூஜாங்கா மானிக்

தொகு

பூஜாங்கா மானிக் (Bujangga Manik) கையெழுத்துப் பிரதி போன்ற முதன்மையான வரலாற்றுப் பதிவுகளின்படி, சுண்டா இராச்சியத்தின் கிழக்கு எல்லையாக மத்திய ஜாவாவில் உள்ள பமாலி ஆறு (Pemali River) (இன்றைய பிரெப்ஸ் ஆறு) (Brebes River); மற்றும் செராயு ஆறு (Serayu River) ஆகியவை இருந்தன.

சுண்டா இராச்சியத்தின் பெரும்பாலான சான்றுகள், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஜாங்கா மானிக் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து வருகின்றன. சுண்டா இராச்சியத்தில் வசித்தவர்கள் பெரும்பாலோர் சுண்டானியர்கள் (Sundanese people); பெரும்பான்மையான மதம் இந்து மதம் ஆகும்.

சொல் பிறப்பியல்

தொகு

சுண்டா என்ற பெயர் சமசுகிருத முன்னொட்டு சு (Su) எனும் எழுத்தில் இருந்து உருவானது; "நன்மை" அல்லது "நல்ல குணம் கொண்டிருத்தல்" என பொருள்படும். தங்கத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சுவர்ணா (Suvarna) எனும் சொல்லை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்; நல்ல நிறம் என பொருள்படும்.[3]

சுண்டா அல்லது சுந்தா என்பது இந்து கடவுளார் விஷ்ணுவின் மற்றொரு பெயர் என அறியப்படுகிறது. சமசுகிருதத்தில், சுந்தரா (Sundara) அல்லது சுந்தரி (Sundari) என்ற சொல்லுக்கு "அழகான" அல்லது "சிறப்பு" என்று பொருள்.[4][5][6]

சாங்யாங் தாப்பாக் கல்வெட்டு

தொகு
 
சாங்யாங் தாப்பாக் கல்வெட்டு (952)

10-ஆம் நூற்றாண்டில், ஜாவாவின் மேற்குப் பகுதிகளை அடையாளம் காண, சுந்தா என்ற பெயரை வெளிநாட்டினர்; தொடக்கக்கால இந்திய ஆய்வாளர்கள்; சிறீவிஜய வணிகர்கள்; குடிமைவாதிகள்; மற்றும் ஜாவானிய அண்டை நாடுகள்; ஓர் இடப்பெயராகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. கிபி 952 தேதியிட்ட சாங்யாங் தாப்பாக் கல்வெட்டு (Sanghyang Tapak inscription) இதை உறுதிப்படுத்துகிறது.

கிழக்கு ஜாவா கெடிரியில் (Kediri) கிடைத்த 11-ஆம் நூற்றாண்டு ஓரன் கல்வெட்டில் (Horren inscription) சுந்தா எனும் சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. சுண்டா நீரிணை எனும் நீரிணைப் பகுதியும் சுந்தா இராச்சியத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

வரலாறு

தொகு
 
போஜோங்மெஞ்சே இந்து கோயில் இடிபாடுகள் (1900)

சுண்டா இராச்சியத்தின் வரலாறு 7-ஆம் நூற்றாண்டு தொடங்கி 16-ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய ஓராயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கிறது. சுண்டா இராச்சியத்தைப் பற்றிய கல்வெட்டு எச்சங்கள் கிடைத்துள்ளன. பாண்டுங்கிற்கு அருகிலுள்ள 7-ஆம் நூற்றாண்டின் போஜோங்மெஞ்சே (Bojongmenje) இந்து கோயிலில் சுண்டா இராச்சியத்தைப் பற்றிய ஒரு கல்வெட்டுத் துண்டு கிடைத்துள்ளது.

இந்தக் கோயில் ஜாவாவில் உள்ள தொடக்ககால கோயில் கட்டமைப்புகளில் ஒன்றாகும். மத்திய ஜாவாவில் உள்ள தியெங் கோயில்களை (Dieng Temples) விட போஜோங்மெஞ்சே கோயில் பழைமையானது. இங்கு கிடைக்கப்பட்ட கல்வெட்டு எச்சம், சுண்டா இராச்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுண்டா இராச்சியத்தின் முந்தைய வரலாறு தெளிவாக இல்லை; இரண்டு கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே உள்ளன.

தருமநகரா இராச்சியம்

தொகு
 
சுண்டா பஜாஜாரான் இராச்சியத்தின் வடுக மகாராசாவின் சித்திரம் (Prabu Siliwangi)

மேற்கு ஜாவாவில், சுண்டா இராச்சியத்தின் முந்தைய இராச்சியமான தருமநகரா இராச்சியத்துடன் என்ன உறவுகள் இருந்தன என்று தெரியவில்லை. தருமநகரா இராச்சியம் என்பது மேற்கு ஜாவாவில் ஏறக்குறைய 1650 ஆண்டுகளுக்கு முன்பு, 400 - 500-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு சுந்தானிய-இந்திய இராச்சியமாகும். இந்தோனேசியாவின் மூதாதைய இராச்சியங்களில் மூன்றாவது இராச்சியம் என அறியப்படுகிறது.

இருப்பினும், 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குப் பிறகு, குறிப்பாக வாஸ்து காஞ்சனா (King Wastu Kancana) மற்றும் வடுக மகாராசாவின் (Sri Baduga Maharaja) ஆட்சியைத் தொடர்ந்து, பிந்தைய காலத்தின் வரலாறு இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இதில் வெளிநாட்டு வரலாற்றுப் பதிவுகள், குறிப்பாக போர்த்துகீசியர்களின் சுமா ஓரியண்டல் (Suma Oriental); மற்றும் பத்து தூலிஸ் கல்வெட்டு (Batutulis inscription) போன்ற கல்வெட்டுகள் உறுதியான சான்றுகளை வழங்குகின்றன.

ஆயாம் உரூக்

தொகு
 
கி.பி 8 - 9-ஆம் நூற்றாண்டு சுண்டா இராச்சியத்தின் சிவன் மகாதேவரின் சிலை.
 
சுண்டா இளவரசி சித்ரா ரசிமி பய்ன்படுத்திய கப்பலின் மாதிரிப்படம் (1357)

மஜபாகித் அரசு என்பது 1293-ஆம் ஆண்டில் இருந்து 1517-ஆம் ஆண்டு வரை ஜாவா தீவை ஆட்சி செய்த ஓர் இந்து பேரரசு ஆகும். பின்னர் பௌத்த-இசுலாமிய அரசாக மாறியது. அந்தப் பேரரசை ஆட்சி செய்த அரசர்களில் மிக முக்கியமானவர் மன்னர் ஆயாம் உரூக் (Hayam Wuruk) என்பவர் ஆவார். இவரின் அசல் பெயர் இராஜசநகரன் அல்லது பத்திரா பிரபு (Rajasanagara, Bhatara Prabhu).

இவர் ஓர் இந்து ஜாவானிய மன்னர். இராஜாசா (Rajasa) வம்சாவளியைச் சேர்ந்தவர். மஜபாகித் பேரரசின் நான்காவது மன்னர்; 1350 முதல் 1389 வரை ஆட்சி செய்தவர்.

இளவரசி சித்ரா ரசிமி

தொகு

ஆயாம் உரூக் எனும் இராஜசநகரன், சுண்டா இளவரசி சித்ரா ரசிமி (Dyah Pitaloka Citraresmi) என்பவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். சித்ரா ரசிமியின் மற்றொரு பெயர் தியா பிதலோகா (Dyah Pitaloka). இவர் சுண்டா இராச்சியத்தை ஆட்சி செய்த மகாராஜா லிங்க புவானா விசேசா (Prabu Maharaja Linggabuana Wisesa) என்பவரின் மகள் ஆவார். அரசியல் காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொள்ள ஆயாம் உரூக் விரும்பி இருக்கலாம்.[7] [8] வரலாற்று ஏடுகள் சித்ரா ரசிமியை அசாதாரண அழகு கொண்ட பெண் என்று வர்ணிக்கின்றன.[9]:208

மஜபாகித்தைச் சேர்ந்த பாத்தே மது (Madhu) என்பவர் பெண் கேட்க மஜபாகித்தில் இருந்து சுண்டா அரண்மனைக்கு அனுப்பப் பட்டார். இளவரசி சித்ரா ரசிமியின் தந்தையார் மகாராஜா லிங்க புவானா சம்மதம் தெரிவித்தார். மஜபாகித் பேரரசு; சுண்டா இராச்சியம் ஆகிய இரு அரசுகளுக்கும் இடையே நல்ல உறவுகள் ஏற்படலாம் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

மஜபாகித் பிரதமர் கஜ மதன்

தொகு

1357-ஆம் ஆண்டில், சுண்டா மன்னரும் அவரின் அரச குடும்பத்தினரும், 200 பெரிய கப்பல்கள் மற்றும் பல சிறிய கப்பல்கள் கொண்ட ஒரு கப்பல் அணியின் மூலமாக ஜாவா கடல் வழியாகப் பயணம் செய்து மஜபாகித்தை அடைந்தனர்.[10]:61 அரசரும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் ஒன்பது அடுக்குகள் கொண்ட ஒரு கப்பலில் போய்ச் சேர்ந்தனர்.[11]:16–17, 76–77[12]:2199

சுண்டா மன்னர் மகாராஜா லிங்க புவானா அரசக் குழுவினர், மஜபாகித் சென்று அடைந்த போது, அவர்களை மஜபாகித் பிரதமர் கயா மடா எனும் கஜ மதன் தான் முதல் ஆளாக வரவேற்றார். பின்னர் சுண்டா அரச குடும்பத்தினர், பிரந்தாஸ் ஆற்றின் (Brantas River) வழியாக மஜபாகித் தலைநகரத்தை அடைந்தனர்.[13]{{rp|270}

பூபாட் சதுக்கம்

தொகு
 
பூபாட் சதுக்கம் (1279)
 
சாங்யாங் தாப்பாக் கல்வெட்டு (952)
 
சுராபாயாவில் கயா மடாவின் சிலை. ஜாவாவில் கஜ மதனை தேசிய வீரராகக் கொண்டாடுகிறார்கள் (2017)
 
மேற்கு ஜாவாவில் உள்ள செரி பாதுக்கா அருங்காட்சியகத்தில், பழைய சுண்டானிய கெபாங் கையெழுத்துப் பிரதியான சாங்யாங் ராக தேவாதா. (2018)

அந்தக் கட்டத்தில் மஜபாகித் பேரரசின் தலைநகர் துரோவுலான் (Trowulan). அந்த நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பூபாட் (Bubat) சதுக்கத்தில் முகாமிட்டனர். திருமணச் சடங்கிற்கு அழைப்பு வரும் என்று காத்து இருந்தனர். இருப்பினும், சுண்டா அரச குடும்பத்தினர், மஜபாகித் ஜாவானியர்களின் நிலையைத் தவறாக மதிப்பிட்டு விட்டனர். இந்த விசயம் பின்னர்தான் தெரிய வந்தது.

சுண்டா மக்கள் தங்களின் சுண்டா இராச்சியத்தை, மஜபாகித் அரசிற்குச் சமமான நிலையில் பார்த்தார்கள். ஆனால் மஜபாகித் அரசு, சுண்டா அரசைத் தங்களுக்குக் கீழ்படிந்த ஓர் அடிமை அரசாகப் பார்த்தது.

கயா மடாவின் கோரிக்கை

தொகு

அப்போது மஜபாகித்தின் பிரதமராக இருந்தவர் கயா மடா (கஜ மதன்). சுண்டா அரசை அடிபணியச் செய்வதற்கு உடனடியாக ஒரு திட்டம் வகுத்தார். சுண்டா இளவரசி சித்ரா ரசுமி, மஜபாகித்தின் அரசியாக முடிசூட்டப் படுவதற்குப் பதிலாக, மஜபாகித்தின் மஜபாகித் மன்னர் ஆயாம் உரூக்கின் (Hayam Wuruk) துணைவிகளில் ஒருவராக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை முன்வைத்துப் பிடிவாதமாக இருந்தார்.

அந்தக் காலக் கட்டத்தில் கயா மாடா, மஜபாகித் அரசில் அசைக்க முடியாத சக்தி வாய்ந்த பிரதமராக இருந்தார். மஜபாகித் அரசு பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்ததற்கு கயா மடா தான் மூல காரணம்.

கயா மடாவின் கோரிக்கையால் சுண்டா தரப்பினர் அவமானம் அடைந்தனர். திருமணத்தை உடனடியாக நிறுத்தம் செய்தனர். தங்களின் தாயகமான சுண்டாவிற்குத் திரும்பத் தயாராகினர். இது கயா மடாவை சினமூட்டியது. சுண்டா அரசக் குடும்பத்தினரின் முகாமை முற்றுகை செய்யத் தூண்டியது.

பூபாட் போர்

தொகு

பூபாட் சதுக்கத்தில் (Bubat Square) மஜபாகித் இராணுவத்திற்கும் (Majapahit Javanese) சுண்டா அரசப் பரிவாரங்களுக்கும் இடையே முதலில் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கலவரம் நடந்தது. இது பூபாட் போர் (Battle of Bubat) என்று அழைக்கப்படுகிறது.[14]:391 ஒரு புறத்தில் இராணுவத்தினர். இன்னொரு புறத்தில் ஆயுதங்கள் இல்லாத அரச குடும்பத்தினர்; உறுதுணையாக, சுண்டா அரசின் பாதுகாவலர்கள். சுண்டா தரப்பின் எண்ணிக்கை மிகக் குறைவு. முன்னூறு பேருக்குள் இருக்கலாம்.[15]:192

சுண்டா தரப்பினர் பெரும்பாலோர் அரச குடும்பத்தினர்; அரச அதிகாரிகள்; பிரபுக்கள்; புரோகிதர்கள்; வேலையாட்கள்; மற்றும் அரசக் காவலர்கள். எந்த ஒரு சண்டைக்கும் தயாரான நிலையில் இல்லாதவர்கள். மறுபுறத்தில் கயா மடாவின் கட்டளையின் கீழ் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பல ஆயிரம் பேர் இருந்தனர். அனைவரும் நன்கு பயிற்சி பெற்ற இராணுவத் துருப்புக்கள். வில். அம்பு, வாள், ஈட்டி, கத்தி, எரி தழல் குண்டு என பற்பல போர் ஆயுதங்களைக் கொண்டவர்கள்.

சுண்டா மன்னர் மகாராஜா லிங்க புவானா

தொகு

பூபாட் சதுக்கத்தின் மையத்தில் சுண்டா தரப்பினர் சுற்றி வளைக்கப் பட்டனர். தாக்குதல் தொடங்கியது. இறப்பை எதிர்கொண்ட போதிலும், சுண்டா அரச குடும்பத்தினர் அசாதாரண வீரத்துடன் போரிட்டனர். ஆனாலும், எதிர்த்தரப்பு மஜபாகித் இராணுவத்தினரின் ஆயுதங்களுடன் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒவ்வொருவராக வீழ்ந்தனர்.[16]:55-57

இந்தக் கட்டத்தில் சுண்டா மன்னர் மகாராஜா லிங்க புவானா (Maharaja Lingga Buana) எனும் பிரபு மகாராஜாவும் (Prabu Maharaja) களம் இறங்கினார். மஜபாகித் தளபதியுடன் நடந்த சண்டையில் (1357-ஆம் ஆண்டு) கொல்லப் பட்டார். மஜபாகித் இராணுவம் சுண்டா அரச குடும்பத்தை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழித்தது. காயம் அடைந்த ஆண்கள் அனைவரும் பின்னர் படுகொலை செய்யப் பட்டனர்.[17]:306[18]

பூபாட் தீக்குளிப்பு

தொகு
 
பூபாட் தீக்குளிப்பு (பூபாட் சதுக்கம்) நடந்த துரோவுலான் தொல்லியல் களம்
 
சுண்டா மன்னர் மகாராஜா லிங்க புவானா எனும் சொற்களில் பராயங்கான் கையெழுத்துப் பிரதி
 
சுண்டா இராச்சியத்தின் கவாலி கல்வெட்டு (c.1400)

இந்தக் கட்டத்தில் இளவரசி சித்ரா ரசுமியும், மற்ற சுண்டானியப் பெண்களும் தங்கள் நாட்டின் மதிப்பு மரியாதையைப் பாதுகாக்க ஒரு முடிவு செய்தனர். ஆண்கள் அனைவரும் உயிர் இழந்த பிறகு பெண்கள் மட்டும் உயிர் வாழ்வது நியாயம் அல்ல என்று முடிவு செய்தனர்.

உயிர்விட்ட ஆண்களைப் போல பெண்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். பூபாட் சதுக்கத்தில் ஒரு பெரிய தீ மூட்டப்பட்டது. அதில் பெண்கள் பலர் தீக்குளித்தனர் (Ritualized Suicide). இந்தக் கட்டத்தில் மஜபாகித் படையினர் நெருங்கி வந்து விட்டதால், தீக்குளிக்க முடியாத பெண்கள் சிலர், கத்தியால் தங்கள் நெஞ்சிலும் வயிற்றிலும் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த வகையில் பெண்கள் அனைவருமே உயிர் துறந்தனர்.[19]

சதி வழமை

தொகு

இந்த நிகழ்ச்சி நடக்கும் போது, சுண்டா அரசக் குடும்பத்தினர் அனைவரும் இந்து மதம் சார்ந்தவர்கள். சதி வழமையைப் பின்பற்றி வந்தவர்கள். உடன்கட்டை ஏறல் சடங்கை அறிந்து வைத்து இருந்தவர்கள். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளும் வழக்கம் தான் சதி வழமை ஆகும்.

இந்தக் கலவரத்தில் ஒட்டு மொத்த சுந்தா அரச குடும்பமே அழிந்தது. ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தப்பித்தார். அவர்தான் இளவரசி சித்ரா ரசுமி பித லோகாவின் இளைய சகோதரர் இளவரசர் பிரபு ராஜா வாஸ்து (Prabu Raja Wastu). நிசுகல வாஸ்து காஞ்சனா (Prince Niskalawastu Kancana) என்றும் அழைக்கப் படுகிறார்.

இளவரசர் பிரபு ராஜா வாஸ்து

தொகு

அப்போது அவர் ஒன்பது வயது சிறுவனாக இருந்தார். அதனால் மஜபாகித் திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. சுண்டா கவாலி (Kawali palace) அரண்மனையில் விட்டுச் செல்லப்பட்டார். இவர்தான் சுண்டா அரசப் பரம்பரையின் ஒரே வாரிசு.

23-ஆவது வயதில் சுண்டா அரசின் அரசரானார். இவர்தான் சுண்டானிய இந்து மக்களுக்கு வரிவிலக்குகள் வழங்கியவர். சுண்டானியர்கள் ஜாவானியர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டத்தையும் இயற்றியவர்.[20][21]

சுண்டா மன்னர்களின் பட்டியல்

தொகு
சுண்டா மன்னர்கள் (கல்வெட்டு; கையெழுத்துப் பிரதிகளின் சான்றுகள்) - (1030 – 1579)
எண் மன்னர் ஆட்சி காலம் கல்வெட்டு
1 செரி ஜெயபூபதி
Sri Jayabhupati
1030-1042 சாங்யாங் தாப்பாக் கல்வெட்டு (1030)
2 பிரபு மகாராஜா
Prabu Maharaja
1350-1357 பராராத்தோன், கிடொங் சுண்டா
3 புனிசூரா
Bunisora
1357-1371 பாராகியாங்கான் புராணம் (1580)
4 நிசுகலா வாஸ்து காஞ்சனா
Niskala Wastu Kancana
1371-1475 கவாலி கல்வெட்டு (1450) & பத்து தூலிஸ் கல்வெட்டு பாராகியாங்கான் புராணம் (1533)
5 சூசுக் துங்கால்
Susuk Tunggal
1475-1482 பாராகியாங்கான் புராணம் (1580)
6 தேவ நிசுகலா காஞ்சனா
Ningrat Kancana
7 வடுக மகாராசா
Sri Baduga Maharaja
1482-1521 பத்து தூலிஸ் கல்வெட்டு (1533)
8 சூரவிசேச சாமியான் அரசி
Ratu Samian/Rei Samião
1521–1535 சுண்டா-போர்த்துகல் கல்வெட்டு (1522)
9 -தேவதா அரசி
Ratu Dewata
1535–1543 பாராகியாங்கான் புராணம் (1580)
10 சக்தி அரசி
Ratu Sakti
1543–1551 பாராகியாங்கான் புராணம் (1580)
11 நிலகேந்திர அரசி
Nilakendra
1551–1567 பாராகியாங்கான் புராணம்(1580)
12 ராக மூலியா
Raga Mulya
1567–1579 பாராகியாங்கான் புராணம் (1580)

சுண்டா மன்னர்கள் (1482 – 1579)

தொகு
  1. வடுக மகாராசா Prabu Maharaja (1482 – 1521)
  2. சூரவிசுவாசா Surawisesa (1521 – 1535)
  3. ரத்து தேவதா Ratu Dewata (1535 – 1543)
  4. ரத்து சக்தி Ratu Sakti (1543 – 1551)
  5. ரத்து நிலகேந்திரா Ratu Nilakendra (1551 – 1567)
  6. ராக மூலியா Raga Mulya (1567 – 1579)

மேலும் காண்க

தொகு

காட்சியகம்

தொகு

சுண்டா இராச்சியத்தின் காட்சிப் படங்கள்: (669–1579)

மேற்கோள்கள்

தொகு
  1. Marwati Djoened Poesponegoro; Nugroho Notosusanto (2008). Sejarah Nasional Indonesia: Zaman Kuno (in இந்தோனேஷியன்). Balai Pustaka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9794074084. இணையக் கணினி நூலக மைய எண் 318053182.
  2. Kartapranata, Gunawan (2024-09-14). "Mencari Pakuan Pajajaran" (in id). Kompas.id. https://www.kompas.id/baca/kompas_multimedia/mencari-pakuan-pajajaran. 
  3. "Shuddha-Sanskrit Dictionary". www.learnsanskrit.cc. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  4. Glashoff, Klaus. "Sunda, Sanskrit Dictionary for Spoken Sanskrit". spokensanskrit.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  5. "Sunda in Sanskrit Dictionary". Sanskrit Dictionary. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
  6. "Ternyata Ini Asal Usul Nama Sunda, hingga Pengaruhnya di Nusantara". SINDOnews.com (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  7. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. pp. 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4155-67-5.
  8. Ali, Fachry (2016-11-26). "Sunda-"Java" and The Past : A Socio-Historical Reflection" (in en). Insaniyat: Journal of Islam and Humanities 1 (1): 33–40. doi:10.15408/insaniyat.v1i1.4350. பன்னாட்டுத் தர தொடர் எண்:2541-500X. http://journal.uinjkt.ac.id/index.php/insaniyat/article/view/4350. 
  9. Nugroho, Irawan Djoko (2011). Majapahit Peradaban Maritim. Suluh Nuswantara Bakti. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-602-9346-00-8.
  10. Reid, Anthony (2000). Charting the Shape of Early Modern Southeast Asia. Silkworm Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9747551063.
  11. Berg, C. C. (1927). Kidung Sunda. Inleiding, tekst, vertaling en aanteekeningen. BKI LXXXIII :1-161.
  12. Zoetmulder, Petrus Josephus; Robson, S.O. (1982). Old Javanese-English Dictionary. 's-Gravenhage: Martinus Nijhoff.
  13. Lombard, Denys (2005). Nusa Jawa: Silang Budaya, Bagian 2: Jaringan Asia. Jakarta: Gramedia Pustaka Utama. An Indonesian translation of Lombard, Denys (1990). Le carrefour javanais. Essai d'histoire globale (The Javanese Crossroads: Towards a Global History) vol. 2. Paris: Éditions de l'École des Hautes Études en Sciences Sociales.
  14. Marwati Djoened Poesponegoro; Nugroho Notosusanto (2008). Sejarah Nasional Indonesia: Zaman kuno (in இந்தோனேஷியன்). Balai Pustaka. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9794074084. இணையக் கணினி நூலக மைய எண் 318053182. பார்க்கப்பட்ட நாள் 3 June 2018.
  15. Jákl, Jiří (2016). "The Loincloth, Trousers, and Horse-riders in Pre-Islamic Java: Notes on the Old Javanese Term Lañciṅan". Archipel (91): 185–202. doi:10.4000/archipel.312. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-8613. 
  16. Damais, L.C. (1958). "Études d'épigraphie indonésienne. VŚ Dates de manuscrits et documents divers de Java, Bali et Lombok". Bulletin de l'École française d'Extrême-Orient 49 (1): 1–257. doi:10.3406/befeo.1958.1481. 
  17. Robson, S.O. (1979). "Notes on the early Kidung literature". Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 135 (2): 300–322. doi:10.1163/22134379-90002559. 
  18. Drs. R. Soekmono. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (1973, 5th reprint edition in 1988 ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 72.
  19. Y. Achadiati S.; Soeroso M.P. (1988). Sejarah Peradaban Manusia: Zaman Majapahit. Jakarta: PT Gita Karya. p. 13.
  20. Hadi, Usman. "Antropolog: Dampak Perang Bubat Diwariskan Lintas Generasi" (in id-ID). detiknews. https://news.detik.com/berita-jawa-tengah/d-3670213/antropolog-dampak-perang-bubat-diwariskan-lintas-generasi/komentar. 
  21. Hery H Winarno (24 April 2015). "Tragedi Perang Bubat dan mitos orang jawa dilarang kawin dengan sunda". https://www.merdeka.com/peristiwa/tragedi-perang-bubat-mitos-orang-jawa-dilarang-kawin-dengan-sunda.html. 

வெளி இணைப்புகள்

தொகு
  • "Maharadja Cri Djajabhoepathi, Soenda’s Oudst Bekende Vorst", TBG, 57. Batavia: BGKW, pp. 201–219, 1915)
  • Sumber-sumber asli sejarah Jakarta, Jilid I: Dokumen-dokumen sejarah Jakarta sampai dengan akhir abad ke-16
  • Kebudayaan Sunda Zaman Pajajaran, Jilid 2, Edi S. Ekajati, Pustaka Jaya, 2005
  • The Sunda Kingdom of West Java From Tarumanagara to Pakuan Pajajaran with the Royal Center of Bogor, Herwig Zahorka, Yayasan Cipta Loka Caraka, Jakarta, 2007-05-20.
"https://ta.wiki.x.io/w/index.php?title=சுண்டா_இராச்சியம்&oldid=4193687" இலிருந்து மீள்விக்கப்பட்டது