ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலையாகும். இது ஸ்ரீநகரில் தொடங்கி ஜம்முவில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 295 கி.மீ நீளமுடையது.[1] காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை அடைய இந்த சாலையும், முகல் சாலையும் போடப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவகர் குகை குறிப்பிடத்தக்க தலமாகும். பனிமிகுதியின் காரணமாக குளிர்காலத்தில் இந்த சாலை மூடப்பட்டிருக்கும்.[2] இந்த சாலையின் போக்குவரத்தை ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் கட்டுப்படுத்துகின்றன.
![Srinagar Jammu National Highway](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0a/Jammu_Srinagar_Highway.jpg/220px-Jammu_Srinagar_Highway.jpg)
Srinagar Jammu National Highway (A segment of NH 44) | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | |
நீளம்: | 295 km (183 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | லால் சவுக், ஸ்ரீநகர் மாவட்டம் |
முடிவு: | ஜம்மு, ஜம்மு மாவட்டம் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | சிறிநகர், புல்வாமா, அனந்தநாக், ரம்பான், உதம்பூர், ஜம்மு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
சான்றுகள்
தொகு- ↑ "distancebetween.com: The Leading Distance Between Site on the Net". distancebetween.com. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.
- ↑ "greaterkasmir.com". greaterkasmir.com. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.