இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு மொத்தம் 4.42 மில்லியன் கிலோமீட்டர்கள் (2.059 மில்லியன் மைல்கள்) நீளமுள்ள சாலைகளைக் கொண்டு உலகின் இரண்டாவது மிகப்பெரும் சாலை வலையமைப்பைக் கொண்டுள்ள நாடாகத் திகழ்கிறது. ஓர் சதுர கிமீ நிலப்பரப்பிற்கு 0.66 கிமீ சாலை என சாலை அடர்த்தி ஐக்கிய அமெரிக்காவின் நாடுகளினதை (0.65) விட சற்றே கூடுதலாகவும் சீனா (0.16) அல்லது பிரேசிலை விட (0.20) மிகக் கூடுதலாகவும் உள்ளது. [1] 2002ஆம் ஆண்டு நிலவரப்படி இவற்றில் 47.3% சாலைகள் மட்டுமே நிலப்பாவப்பட்ட சாலைகளாகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/86/Durgapur_Xpressway.jpg/220px-Durgapur_Xpressway.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c5/Nh76.jpg/220px-Nh76.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c6/NH75.jpg/220px-NH75.jpg)
மேற்கோள்கள்
தொகு- ↑ "India Transport Sector". World Bank.