விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2016
இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்தப்பட்டவுடன் காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
- விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே பாறைத்தூண் (படம்) என்றும் கருதப்படுகிறது.
- பொதுவாக சூன், சூலை மாதங்களில் மஞ்சள் தேமல் நோய் அதிகமாக காணப்படும்.
- படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் என அழைக்கப்படுகிறது.
- சுகோவில் அளவுகோல் (படம்) மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.
- நான்கு தலைமுறைத் தேசாந்திரித் தட்டான்கள் மொத்தமாக 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கின்றன.
- மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து மாலிப்டினம் அறுபுளோரைடு உருவாகிறது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/2f/Flag_of_the_United_Nations.svg/160px-Flag_of_the_United_Nations.svg.png)
- மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் சாங்காய் ஆகும்.
- ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் ஐக்கிய நாடுகளில் சபையின் (படம்) உத்யோகபூர்வ மொழிகள்.
- ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/49/Human_brain_NIH.jpg/150px-Human_brain_NIH.jpg)
- மூளை (படம்) 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது
- தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.
- அண்டத்தின் 75% தனிம திணிவு ஐதரசனால் ஆனது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/a/ac/Pl0-028.jpg/125px-Pl0-028.jpg)
- வளரி (படம்) என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.
- கருங்குழிகள் என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
- மங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/f8/Tim_Berners-Lee.jpg/100px-Tim_Berners-Lee.jpg)
- இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு டிம் பேர்னேர்ஸ்-லீ (படம்) கண்டுபிடித்தார்.
- பெர்ள் நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.
- பிரெஞ்சுப் புரட்சி விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.
- சனாகின் மடாலயம் (படம்) ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.
- கம்போடியா இனப்படுகொலை 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.
- கஜாக்கி அணை 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
- பைசலாபாத், (படம்) பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.
- யுகத்தா எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.
- முதல் சவொலின் மடாலயம் இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.
- தாய்லாந்தின் பண்பாடு இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது.
- இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் இசுமீர் (படம்) ஆகும்.
- பாக்கித்தான் அரசியலமைப்பு பாக்கித்தானை கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகவும், இசுலாமை தேசிய சமயமாகவும் குறிக்கின்றது.
- பாக்கித்தான் முன்மொழிவு தனியான நாடாக பாக்கித்தானைக் கோருவதற்கு காரணமாக அமைந்தது.
- தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக 1,1-இருபுரோமோயீத்தேன் (படம்) காணப்படுகிறது.
- நகர நடுவம் பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.
- இறபீக் சாமியின் படைப்புகள் 28 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- நரகத்திற்கான கதவு (படம்) துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
- பெரிய அரண்மனையில் உள்ள கோட்டைகள் அனைத்திற்கும் இயைபு பெயரிடப்பட்டுள்ளன.
- சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் காமா ஆகும்.
- பழைய கற்காலத்தில் அஸ்தோதில் மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.
- மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் அகண்ட சீனா (படம்) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/20/Bamboonetwork.svg/120px-Bamboonetwork.svg.png)
- ஆராத், அதன் சுத்தமானதும் உலர்ந்த காற்றினாலும் உலகளவில் ஈழை நோய்க்கு ஒரு முக்கிய தளமாக இருக்கிறது.
- மூங்கில் கட்டமைப்பு (படம்) தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.
- செம்பூர்ணா என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் "ஓய்வுக்கான இடம்" என்பதாகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/a/a5/Torakusu-yamaha.jpg/120px-Torakusu-yamaha.jpg)
- வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி, ஒரு வட்ட நாற்கரத்தினுள் அமையும் முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.
- டொரகுசு யமஹா (படம்) நினைவாக 1987 ஆம் ஆண்டு நிப்பான் கக்கி நிறுவனம் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- பழங்காலக் கொரியப் பாடல்களில் வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடிப்படைக் கூறுகளாக விளங்கின.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c0/Indian_Jackal_02.jpg/120px-Indian_Jackal_02.jpg)
- மீன் மழை போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்ததாக தகவல் உள்ளது.
- மேற்கு வங்காளத்தில் காணப்படும் இந்திய நரிகள் (படம்) கொஞ்சம் கருப்பு கலந்ததாக உள்ளது.
- புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
- 2015 ஆம் ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக லாப்ரடோர் மூவலந்தீவு (படம்) உள்ளது.
- ஜாலியின் தராசு மூலம் சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/1/1a/The_Treaty_of_Utrecht_%28clean%29.jpg/120px-The_Treaty_of_Utrecht_%28clean%29.jpg)
- எல்லெர்மான் குண்டுகள் என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.
- உத்ரெக்ட் உடன்பாடு (படம்) மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.
- சூரிய நியான் என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7c/Chandigarh_Lake.jpg/120px-Chandigarh_Lake.jpg)
- ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை உலக தூக்க நாள் கொண்டாடப்படுகிறது.
- சுக்னா ஏரி (படம்) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
- வாதக் காய்ச்சல் தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/d0/Gerald_Ford_-_NARA_-_530680.tif/lossy-page1-100px-Gerald_Ford_-_NARA_-_530680.tif.jpg)
- 1309 முதல் 1378 வரை கத்தோலிக்க திருச்சபையின் ஏழு திருத்தந்தையர்கள் உரோமையில் இல்லாமல், பிரான்சின் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்.
- தேர்தலில் வெற்றிபெறாமலே ஐக்கிய அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் இப்பதவிகளை வகித்த ஒரே நபரும் ஜெரால்ட் ஃபோர்ட் (படம்) ஆவார்.
- தேவதத்தன் புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/40/Chrysopelea_taprobanica.jpg/120px-Chrysopelea_taprobanica.jpg)
- இலங்கை பறக்கும் பாம்பு (படம்) இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.
- தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.
- கி.மு 12 இல் இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் கோண்டபோரஸ் ஆவர்.
- எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (படம்) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும்.
- கொர்பு மலை, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.
- த வேர்ல்டு ஃபக்ட்புக் என்பது அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.
- குமரிலபட்டர், கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.
- மேகலை நகரங்கள் என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.
- ஐராவதம் என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.
- அப்பர் சியாங் நீர்மின்னாற்றல் திட்டம் மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
- துயரம் என்பது பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த மனிதரின் 6 அடிப்படையான உணர்வுகளில் ஒன்று ஆகும்.
- முத்துத் தோட்டுடனான சிறுமி என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், "வடக்கின் மோனா லிசா" அல்லது "டச்சு மோனா லிசா" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.
- சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஏரிசு ஆகும்.
- இந்திய காட்டுக்காகம் (படம்) ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது.
- கோவில் நுழைவு ஆணை என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.
- கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு ஆவார்.
- டோடிக்கனீசு போர்த்தொடர் என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
- பேரானந்த சித்தியார் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 108 விருத்தங்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த நூல் ஆகும்.
- 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்ற பொழுது, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.
- இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இட்லர் கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
- கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது.
- இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு மலேசிய இஸ்லாமிய கட்சி உருவானது.
- பூக் ஏவுகணை அமைப்பு சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஹிரூ ஒனோடா 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.
- 1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
- தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.
- நவீன சாரங்கதரா எனும் தமிழ்த் திரைப்படத்தில் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
- முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு தடுமாற்றம் எனப்படுகிறது.
- கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான நெப்டியூன் கோளிற்கு சூட்டப்பட்டது.
- ஆசியா கண்டத்திலேயே அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட நாடு இந்தியாவாகும்.
- வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி அவர்களுக்கு பிரிட்டனில் 1916 - 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய "ரைட் ஹானரபில்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- பேரோ லொபேஸ் டி சூசா என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.
- வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான உஜ்ஜயந்தா அரண்மனை கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.
- வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் வத்திக்கான் வானொலி என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.
- ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட ஹாரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.