நரம்பிணைப்பு
நரம்பிணைப்பு என்பது நரம்பு மண்டலத்தில் மின் சமிக்ஞையையோ வேதி சமிக்ஞையையோ ஒரு நியூரானிலிருந்து இன்னொன்றுக்குக் கடத்தும் ஓர் அமைப்பாகும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/3/30/Chemical_synapse_schema_cropped.jpg/330px-Chemical_synapse_schema_cropped.jpg)
Synapse (நரம்பிணைப்பு) என்ற சொல்லானது சர் சார்லஸ் ஸ்காட் செரிங்டன் குழுவினரால் உருவாக்கப்பட்டது. நரம்பிணைப்புகளைப் பொதுவாக வேதி நரம்பிணைப்பு, மின் நரம்பிணைப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம். படத்தில் வேதி நரம்பிணைப்பு சமிக்ஞை கடத்துதலின் மாதிரி வடிவம் காட்டப்பட்டுள்ளது.