விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 01:51 மணி புதன், பெப்பிரவரி 12, 2025 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
சனவரி 1: புத்தாண்டு நாள்; விடுதலை நாள்: புருணை, எயிட்டி, சமோவா, சூடான்
- 1804 – எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.
- 1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
- 1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா (படம்) தில்லியில் அறிவிக்கப்பட்டார்.
- 1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன.
- 1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
சி. வை. தாமோதரம்பிள்ளை (இ. 1901) · வே. அகிலேசபிள்ளை (இ. 1910) · வி. எஸ். ராகவன் (பி. 1925)
அண்மைய நாட்கள்: திசம்பர் 31 – சனவரி 2 – சனவரி 3
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/cc/RIAN_archive_510848_Interplanetary_station_Luna_1_-_blacked.jpg/100px-RIAN_archive_510848_Interplanetary_station_Luna_1_-_blacked.jpg)
- 1782 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
- 1791 – வடமேற்கு இந்தியப் போர்: ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் படுகொலை செய்தனர்.
- 1920 – ஐக்கிய அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.
- 1954 – பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
- 1959 – சந்திரனை நோக்கிய முதலாவது விண்கலம் லூனா 1 (படம்), சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1993 – கிளாலி நீரேரியில் 35 முதல் 100 பேர் வரை இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 – இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (இ. 1960) · சி. ஆர். நாராயண் ராவ் (இ. 1960)
அண்மைய நாட்கள்: சனவரி 1 – சனவரி 3 – சனவரி 4
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/b6/Marthanda_Vurmah_Maha_Rajah.png/100px-Marthanda_Vurmah_Maha_Rajah.png)
- 1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.
- 1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.
- 1754 – அம்பலப்புழா சமரில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் (படம்) முறியடித்தார்.
- 1833 – போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.
- 1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
- 1994 – முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.
- 2015 – போகோ அராம் போராளிகள் வட-கிழக்கு நைஜீரியாவில் பாகா நகரைக் கைப்பற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர்.
புஷ்பவல்லி (பி. 1925) · பொ. வே. சோமசுந்தரனார் (இ. 1972) · எம். எஸ். கோபாலகிருஷ்ணன் (இ. 2013)
அண்மைய நாட்கள்: சனவரி 2 – சனவரி 4 – சனவரி 5
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/d8/NASA_Mars_Rover.jpg/100px-NASA_Mars_Rover.jpg)
சனவரி 4: பர்மா - விடுதலை நாள் (1948)
- 1762 – எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.
- 1889 – இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- 1948 – பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.
- 1958 – முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
- 1959 – சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
- 2004 – இசுப்பிரிட் (படம்) என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
- 2010 – உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
எஸ். எஸ். வாசன் (பி. 1903) · சேசாத்திரி சுவாமிகள் (இ. 1929) · திருக்குறள் வீ. முனிசாமி (இ. 1994)
அண்மைய நாட்கள்: சனவரி 3 – சனவரி 5 – சனவரி 6
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/5b/Eris_and_dysnomia2.jpg/100px-Eris_and_dysnomia2.jpg)
- 1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர்.
- 1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
- 1970 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.
- 1971 – உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
- 1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தை உருவாக்கத் தொடங்கினார்.
- 2000 – ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
- 2005 – சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு (படம்) கண்டுபிடிக்கப்பட்டது.
ஆர். முத்துசாமி (பி. 1926) · வெ. துரையனார் (இ. 1973) · அ. சீ. ரா (இ. 1975)
அண்மைய நாட்கள்: சனவரி 4 – சனவரி 6 – சனவரி 7
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e2/Maria_Montessori.jpg/100px-Maria_Montessori.jpg)
- 1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
- 1907 – மரியா மாண்ட்டிசோரி (படம்) தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.
- 1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
- 1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவை சென்றடைந்தார்.
- 1936 – ருக்மிணிதேவி அருண்டேல் சென்னை அடையாறில் கலாசேத்திரா கலைக்கூடத்தை ஆரம்பித்தார்.
- 1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
- 1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜி. என். பாலசுப்பிரமணியம் (பி. 1910) · சி. எஸ். ஜெயராமன் (பி. 1917) · பிரமிள் (இ. 1997)
அண்மைய நாட்கள்: சனவரி 5 – சனவரி 7 – சனவரி 8
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/07/Jupiter.moons2.jpg/100px-Jupiter.moons2.jpg)
சனவரி 7: நத்தார் (கிழக்கு மரபுவழி திருச்சபை)
- 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் (படம்) கண்டறிந்தார்.
- 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1939 – பிரான்சியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
- 1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
வெ. சாமிநாத சர்மா (இ. 1978) · லட்சுமி (இ. 1987) · சம்பந்தன் (இ. 1995)
அண்மைய நாட்கள்: சனவரி 6 – சனவரி 8 – சனவரி 9
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/a/a4/Caldwell_close1.jpg/100px-Caldwell_close1.jpg)
- 1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.
- 1838 – ராபர்ட் கால்டுவெல் (படம்) மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
- 1867 – வாசிங்டனில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- 1972 – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.
- 1989 – இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.
- 1994 – உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
- 2009 – இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பு நகரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ம. க. வேற்பிள்ளை (பி. 1847) · ஏ. பெரியதம்பிப்பிள்ளை (பி. 1899) · அடிகளாசிரியர் (இ. 2012)
அண்மைய நாட்கள்: சனவரி 7 – சனவரி 9 – சனவரி 10
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/b9/Steve_Jobs_Headshot_2010-CROP.jpg/100px-Steve_Jobs_Headshot_2010-CROP.jpg)
சனவரி 9: வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
- 1760 – அகமது சா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர்.
- 1799 – பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியப் போர்களுக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
- 1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
- 1927 – கனடா, மொண்ட்ரியால் நகரில் நாடக அரங்கு ஒன்றில் தீ பரவியதில் 78 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
- 1964 – பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்றியதை அடுத்து அமெரிக்கப் படைகள் சுட்டதில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1992 – முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 2007 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை (படம்) சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.
டி. ஆர். இராமச்சந்திரன் (பி. 1917) · பொன்னம்பலம் அருணாசலம் (இ. 1924) · து. உருத்திரமூர்த்தி (பி. 1927)
அண்மைய நாட்கள்: சனவரி 8 – சனவரி 10 – சனவரி 11
- 1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
- 1920 – வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
- 1946 – இலண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
- 1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- 1972 – சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.
- 1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர் (நினைவுச்சின்னம் படத்தில்).
- 1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
ஆனந்தரங்கம் பிள்ளை (இ. 1761) · ஆர். சூடாமணி (பி. 1931) · மனோகர் (இ. 1906)
அண்மைய நாட்கள்: சனவரி 9 – சனவரி 11 – சனவரி 12
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/45/Lal_Bahadur_Shastri_%28cropped%29.jpg/100px-Lal_Bahadur_Shastri_%28cropped%29.jpg)
சனவரி 11: அல்பேனியா - குடியரசு நாள் (1946)
- 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின. ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
- 1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு துணைக்கோள்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
- 1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
- 1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி (படம்) தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.
- 1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சானா (பி. 1911) · திருப்பூர் குமரன் (இ. 1932) · நீலாவணன் (இ. 1975)
அண்மைய நாட்கள்: சனவரி 10 – சனவரி 12 – சனவரி 13
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0b/Swami_Vivekananda-1893-09-signed.jpg/100px-Swami_Vivekananda-1893-09-signed.jpg)
சனவரி 12: தேசிய இளைஞர் நாள் (இந்தியா)
- 1863 – சுவாமி விவேகானந்தர் (படம்) பிறப்பு.
- 1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
- 1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
- 1967 – நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
- 1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
- 1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.
- 2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
இரா. நெடுஞ்செழியன் (இ. 2000) · முருகு சுந்தரம் (இ. 2007) · ச. வே. சுப்பிரமணியன் (இ. 1917)
அண்மைய நாட்கள்: சனவரி 11 – சனவரி 13 – சனவரி 14
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/6/6d/Remnants_of_an_army2.jpg/130px-Remnants_of_an_army2.jpg)
- 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1815 – கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
- 1842 – முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் (படம்) என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.
- 1939 – ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
- 1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
- 2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
எம். ஜி. சக்கரபாணி (பி. 1911) · கனகசபை சிவகுருநாதன் (இ. 2013) · அஞ்சலிதேவி (இ. 2014)
அண்மைய நாட்கள்: சனவரி 12 – சனவரி 14 – சனவரி 15
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/f5/Joze-Vaz.jpg/120px-Joze-Vaz.jpg)
- 1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது.
- 1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.
- 1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
- 1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- 1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1953 – யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
- 2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
- 2015 – திருத்தந்தை பிரான்சிசு யோசப் வாசு (படம்) அடிகளை கொழும்பில் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.
கோ. நடேசய்யர் (பி. 1887) · க. வெள்ளைவாரணனார் (பி. 1917) · எம். வி. வெங்கட்ராம் (இ. 2000)
அண்மைய நாட்கள்: சனவரி 13 – சனவரி 15 – சனவரி 16
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/52/Rosa_Luxemburg.jpg/100px-Rosa_Luxemburg.jpg)
- 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார்.
- 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
- 1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
- 1919 – செருமனியின் சோசலிசவாதி ரோசா லக்சம்பேர்க் (படம்) துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 1934 – 8.0 அளவு நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பீகாரைத் தாக்கியதில் 6,000–10,700 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1970 – முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
- 2005 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
தஞ்சை இராமையாதாஸ் (இ. 1965) · தேவநேயப் பாவாணர் (இ. 1981) · மீ. ப. சோமு (இ. 1999)
அண்மைய நாட்கள்: சனவரி 14 – சனவரி 16 – சனவரி 17
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/1/1e/Ivan_IV_by_anonim_%2818th_c.%2C_GIM%29.jpg/100px-Ivan_IV_by_anonim_%2818th_c.%2C_GIM%29.jpg)
- 1547 – இளவரசர் நான்காம் இவான் (படம்) உருசியாவின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264 ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது.
- 1707 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
- 1945 – இட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
- 1969 – சோவியத் விண்கலங்கள் சோயுசு 4, சோயுசு 5 விண்கலங்கள் முதல் தடவையாக புவியின் சுற்றுப்பாதையில் விண்வெளிவீரர்களைப் பரிமாறிக் கொண்டன.
- 1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
- 2008 – 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது. இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
எசு. ஜெ. தம்பையா (பி. 1929) · ஏ. பீம்சிங் (இ. 1978) · பி. சாந்தகுமாரி (இ. 2006)
அண்மைய நாட்கள்: சனவரி 15 – சனவரி 17 – சனவரி 18
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7b/Patrice_Lumumba%2C_1960.jpg/90px-Patrice_Lumumba%2C_1960.jpg)
- 1893 – அவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லில்லியுகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
- 1917 – தமிழக முன்னாள் முதலமைச்சர், நடிகர் ம. கோ. இராமச்சந்திரன் பிறப்பு.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா (படம்) இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக சப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.
ம. கோ. இராமச்சந்திரன் (பி. 1917) · செ. இராசநாயகம் (இ. 1940) · மு. மு. இஸ்மாயில் (இ. 2005)
அண்மைய நாட்கள்: சனவரி 16 – சனவரி 18 – சனவரி 19
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/59/The_First_Fleet_entering_Port_Jackson%2C_January_26%2C_1788%2C_drawn_1888_A9333001h.jpg/140px-The_First_Fleet_entering_Port_Jackson%2C_January_26%2C_1788%2C_drawn_1888_A9333001h.jpg)
- 1591 – சியாம் மன்னர் நரேசுவான் பர்மா இளவரசர் மின்சிட் சிராவுடன் தனியாக மோதி அவனைக் கொன்றார். இந்நாள் இன்றும் தாய்லாந்தில் அரச தாய் படைத்துறைகள் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
- 1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது (படம்).
- 1929 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- 1896 – எக்சுறே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1974 – இசுரேலுக்கும், எகிப்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.
- 1977 – ஆத்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் உயிரிழந்தனர்.
- 2005 – உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அ. குமாரசாமிப் புலவர் (பி. 1854) · எஸ். பாலச்சந்தர் (பி. 1927) · ப. ஜீவானந்தம் (இ. 1963)
அண்மைய நாட்கள்: சனவரி 17 – சனவரி 19 – சனவரி 20
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/ba/Indira_Gandhi_1977.jpg/120px-Indira_Gandhi_1977.jpg)
- 1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
- 1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது.
- 1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகஸ்டின் பிரெனெல் முனைவுற்ற ஒளியைப் பற்றிய விளக்கத்தை அறிவித்தார்.
- 1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேருவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.
- 1966 – இந்திரா காந்தி (படம்) இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1983 – ஆப்பிள் நிறுவனத்தின் வரைகலை பயனர் இடைமுகம் மற்றும் சுட்டியுடனான முதலாவது வணிக-முறை தனி மேசைக் கணினி ஆப்பிள் லீசா" வெளியிடப்பட்டது.
- 1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் எபிரோன் திரும்பினார்.
ஜி. சுப்பிரமணிய ஐயர் (பி. 1855) · சீர்காழி கோவிந்தராஜன் (பி. 1933) · தாமரைக்கண்ணன் (இ. 2011)
அண்மைய நாட்கள்: சனவரி 18 – சனவரி 20 – சனவரி 21
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/d5/King_Charles_I_after_original_by_van_Dyck.jpg/90px-King_Charles_I_after_original_by_van_Dyck.jpg)
- 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (படம்) மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
- 1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
- 1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.
- 1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
- 1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
சவரிராயர் (பி. 1859) · சி. மூ. இராசமாணிக்கம் (பி. 1913) · ம. ப. பெரியசாமித்தூரன் (இ. 1987)
அண்மைய நாட்கள்: சனவரி 19 – சனவரி 21 – சனவரி 22
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/8/83/Lenin_1920.jpg/100px-Lenin_1920.jpg)
- 1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
- 1924 – சோவியத் தலைவர், மார்க்சியப் புரட்சியாளர் விளாதிமிர் லெனின் (படம்) இறப்பு.
- 1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1960 – மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
- 1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
- 2004 – நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இசுபிரிட் தளவுலவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
- 1976 – கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக பயணிகள் சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.
சு. வித்தியானந்தன் (இ. 1989) · சொக்கலிங்க பாகவதர் (இ. 2002) · எம். எஸ். உதயமூர்த்தி (இ. 2013)
அண்மைய நாட்கள்: சனவரி 20 – சனவரி 22 – சனவரி 23
- 1849 – இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்: பஞ்சாப், முல்தான் முற்றுகை ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. கடைசி சீக்கியப் படை சரணடைந்தது.
- 1901 – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி (படம்) தனது 81வது அகவையில் காலமானார்.
- 1905 – இரத்த ஞாயிறு: சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உருசியப் பேரரசருக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1905 புரட்சி ஆரம்பமானது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
- 1945 – இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான சோல்பரி ஆணைக்குழு முதன் முதலாக கொழும்பு நகர மண்டபத்தில் கூடியது.
- 1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.
- 1999 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் அவரது இரு மகன்களுடன் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
தி. வே. கோபாலையர் (பி. 1927) · சுவாமி ஞானப்பிரகாசர் (இ. 1947) · ஏ. இ. மனோகரன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: சனவரி 21 – சனவரி 23 – சனவரி 24
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7e/Netaji_Subhas_Chandra_Bose.jpg/100px-Netaji_Subhas_Chandra_Bose.jpg)
- 1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
- 1816 – கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கனும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
- 1870 – அமெரிக்கா, மொன்ட்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 அமெரிக்கப் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1897 – இந்தியாவின் விடுதலைப் போராளி சுபாஸ் சந்திர போஸ் (படம்) பிறப்பு.
- 1937 – லியோன் திரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 1973 – வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
முத்து குமாரசுவாமி (பி. 1833) · அரியக்குடி இராமானுசர் (இ. 1967) · இரா. இளவரசு (இ. 2015)
அண்மைய நாட்கள்: சனவரி 22 – சனவரி 24 – சனவரி 25
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e3/Macintosh_128k_transparency.png/100px-Macintosh_128k_transparency.png)
- 41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
- 1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.
- 1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
- 1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.
- 1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.
- 1961 – இரண்டு ஐதரசன் குண்டுகளை ஏற்றிச் சென்ற குண்டு-வீச்சு விமானம் ஒன்று வட கரொலைனாவில் நடுவானில் இரண்டாகப் பிளந்தது. ஐதரசன் குண்டு ஒன்றின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.
- 1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொசு (படம்) தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.
சி. பி. முத்தம்மா (பி. 1924) · சி. கே. சுப்பிரமணிய முதலியார் (இ. 1961) · வி. எஸ். ராகவன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சனவரி 23 – சனவரி 25 – சனவரி 26
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/d8/NASA_Mars_Rover.jpg/120px-NASA_Mars_Rover.jpg)
- 1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார்.
- 1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இடி அமீன் தலைவரானார். அடுத்த எட்டாண்டுகள் இவரது கடுமையான இராணுவ ஆட்சி இடம்பெற்றது.
- 1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1998 – கண்டியில் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
- 2004 – நாசாவின் ஆப்பர்சூனிட்டி தளவுளவி (படம்) செவ்வாயில் தரையிறங்கியது.
- 2005 – இந்தியாவின் மகாராட்டிராவில் கோவில் ஒன்றில் நெரிசலில் சிக்கி 258 பேர் உயிரிழந்தனர்.
- 2011 – எகிப்தியப் புரட்சியின் முதல் அலை ஆரம்பமானது.
பி. ஆர். ராஜமய்யர் (பி. 1872) · பித்துக்குளி முருகதாஸ் (பி. 1920) · செங்கை ஆழியான் (பி. 1941)
அண்மைய நாட்கள்: சனவரி 24 – சனவரி 26 – சனவரி 27
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0c/Arthur_Phillip_-_Project_Gutenberg_eText_12992.jpg/100px-Arthur_Phillip_-_Project_Gutenberg_eText_12992.jpg)
சனவரி 26: ஆஸ்திரேலியா நாள், இந்தியக் குடியரசு நாள்
- 1564 – இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது.
- 1565 – விஜயநகரப் பேரரசுக்கும் இசுலாமிய தக்காண சுல்தான்களுக்கும் இடையே இடம்பெற்ற தலைக்கோட்டை சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இசுலாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
- 1788 – ஆர்தர் பிலிப் (படம்) தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து ஆஸ்திரேலியாவில் புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
- 1905 – 3,106.75 கரட் எடையுள்ள கலினன் என்ற உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் கண்டெடுக்கப்பட்டது.
- 1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 சனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாளாக) அறிவித்தது. இது 17 ஆண்டுகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 2001 – குஜராத்தில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
சி. டி. ராஜகாந்தம் (பி. 1917) · ஓவியர் மணியம் (பி. 1924) · ஆர். கே. லட்சுமண் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சனவரி 25 – சனவரி 27 – சனவரி 28
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/95/Entrance_Auschwitz_I.jpg/120px-Entrance_Auschwitz_I.jpg)
- 1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுசுவிட்சு வதைமுகாமில் (படம்) எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
- 1962 – 1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
- 1967 – எட்வேர்ட் வைட் உட்பட அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தனர்.
- 1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
மகா வைத்தியநாதையர் (இ. 1893) · கோமல் சுவாமிநாதன் (பி. 1935) · விருகம்பாக்கம் அரங்கநாதன் (இ. 1965)
அண்மைய நாட்கள்: சனவரி 26 – சனவரி 28 – சனவரி 29
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/9f/Challenger_explosion.jpg/100px-Challenger_explosion.jpg)
- 1846 – இந்தியாவில் அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி சிமித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றன.
- 1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.
- 1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- 1986 – சாலஞ்சர் விண்ணோடம்' (படம்) புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
- 1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தி. முத்துச்சாமி ஐயர் (பி. 1832) · சரோஜா ராமாமிருதம் (பி. 1931) · டொமினிக் ஜீவா (இ. 2021)
அண்மைய நாட்கள்: சனவரி 27 – சனவரி 29 – சனவரி 30
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/94/First_Car_Replica_IAA_2007_1_crop.jpg/140px-First_Car_Replica_IAA_2007_1_crop.jpg)
- 1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
- 1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் சோசோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1886 – செருமனியர் கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான (படம்) காப்புரிமம் பெற்றார்.
- 1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.
- 1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.
- 1996 – பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
- 2017 – கியூபெக் துப்பாக்கிச் சூடு, 2017: கியூபெக்கில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
வி. வி. சடகோபன் (பி. 1915) · சி. எஸ். ஜெயராமன் (இ. 1995) · சுந்தரம் ராஜம் (இ. 2010)
அண்மைய நாட்கள்: சனவரி 28 – சனவரி 30 – சனவரி 31
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/6/61/Gandhi_smiling_1942.jpg/120px-Gandhi_smiling_1942.jpg)
சனவரி 30: தியாகிகள் நாள் (இந்தியா)
- 1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- 1661 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக பொதுநலவாய இங்கிலாந்தின் காப்பளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் அவர் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் வைபவரீதியாகத் தூக்கிலிடப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கிக் குண்டினால் தாக்கப்பட்டு பால்டிக் கடலில் மூழ்கியதில் 9,500 பேர் உயிரிழந்தனர்.
- 1948 – மகாத்மா காந்தி (படம்) இந்துத் தீவிரவாதி நாதுராம் கோட்சேயினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 பேர் மட்டக்களப்பில் துணை இராணுவத்தினரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இராமலிங்க அடிகள் (இ. 1874) · சி. சுப்பிரமணியம் (பி. 1910) · ஜே. சி. குமரப்பா (இ. 1960)
அண்மைய நாட்கள்: சனவரி 29 – சனவரி 31 – பெப்பிரவரி 1
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c9/Ham_the_chimp_%28cropped%29.jpg/100px-Ham_the_chimp_%28cropped%29.jpg)
சனவரி 31: நவூரு - விடுதலை நாள் (1968)
- 1606 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் யேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக கை பாக்சு என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
- 1803 – கண்டிப் போர்கள்: கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கனுக்கு எதிரான போரை பிரித்தானியர் ஆரம்பித்தனர்.
- 1928 – லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.
- 1953 – வடகடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 300 பேரும் உயிரிழந்தனர்.
- 1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி (படம்) ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
- 1996 – கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
க. நா. சுப்ரமண்யம் (பி. 1912) · டைகர் வரதாச்சாரியார் (இ. 1950) · அகிலன் (இ. 1988)
அண்மைய நாட்கள்: சனவரி 30 – பெப்பிரவரி 1 – பெப்பிரவரி 2