பிரான்சின் பதினாறாம் லூயி
பதினாறாம் லூயி (Louis XVI), (23 ஆகஸ்ட், 1754 – 21 ஜனவரி, 1793), பிரான்சின் மன்னனாக 1774 முதல் 1792 வரை ஆட்சி செய்தவர். இவரது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (Louis-Auguste) ஆகும்.
பதினாறாம் லூயி Louis XVI | |||||
---|---|---|---|---|---|
பிரான்சினதும் நவாரினதும் மன்னன் | |||||
![]() | |||||
ஆட்சி | 10 மே 1774 – 10 ஆகஸ்ட் 1792 | ||||
முடிசூட்டு விழா | 11 ஜூன் 1775 | ||||
முன்னிருந்தவர் | பதினைந்தாம் லூயி | ||||
பின்வந்தவர் | நடப்பின்படி தேசிய அவை சட்டப்படி பதினேழாம் லூயி அடுத்து முடிசூடியவர்: முதலாம் நெப்போலியன் (1804 இல்) | ||||
அரசி | மரீ அன்டொனெட் (1755–93) | ||||
வாரிசு(கள்) | மரீ-தெரேஸ்-சார்லோட் (1778–1851) லூயி-ஜோசப் (1781–89) பதினேழாம் லூயி (1785–95) சோஃபீ ஹெலன் பீட்ரிக்ஸ் (1786–87) | ||||
| |||||
மரபு | போர்பன் மாளிகை | ||||
தந்தை | லூயி (1729-1765) | ||||
தாய் | மரீ-ஜோசெஃபி (1731–67) | ||||
அடக்கம் | சென் டெனிஸ் பசீலிக்கா, பிரான்ஸ் |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/9/90/LouisXVIExecutionBig.jpg/380px-LouisXVIExecutionBig.jpg)
இவரது மனைவி மரீ அன்டெனெட் என்ற ஆஸ்த்ரிய இளவரசி. பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் போகப் போக அவர் மீதும் மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். 1792 ஆகஸ்ட் 10 இல் இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 21, 1793 இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. பதினாறாம் லூயி மன்னனின் இறப்பு பிரான்சின் போர்பன் மரபு மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது. இதுவே பின்னர் முதலாம் நெப்போலியன் ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.
வெளி இணைப்புகள்
தொகு