வலைவாசல்:இராணிப்பேட்டை/தகவல்கள்/1
தமிழ்நாட்டின் முப்பத்தாறாவது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு முக்கிய ஆலயங்கள் உள்ளன.

இராணிப்பேட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான "திருக்கடிகை" என்ற 'சோளிங்கர்' ஊரில் இலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஓர் ஏக்கர் மலைப் பரப்பில், மலையடிவாரத்திலிருந்து 1,305 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, சுமார் 750 அடி உயரத்தில், முறையே 200 அடி மற்றும் 150 அடி நீள, அகலங்கள் கொண்ட பரப்பில் இக்கோயில் திகழ்கிறது. நரசிம்மரும் ஆஞ்சநேயரும் தனித்தனி சன்னதிகளில் யோக நிலைகளில் அருள்பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
இராணிப்பேட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் கீழ்மின்னல் என்ற கிராமத்தின் மலை மீது பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரத்தினகிரி பாலமுருகன் கோயில் என்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது.