மகாராஜாலேலா நிலையம்

கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையம்

மகாராஜாலேலா நிலையம் (ஆங்கிலம்: Maharajalela Station; மலாய்: Stesen Maharajalela; சீனம்: 马哈拉惹雷拉站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மகாராஜாலேலா சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.[1]

 MR3  மகாராஜாலேலா நிலையம்
Rapid_KL_Logo | KL Monorail_Logo ஒற்றைத் தண்டூர்தி
Maharajalela Station
மகாராஜாலேலா நிலையத்தின் தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்மகாராஜாலேலா சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°7′53″N 101°41′26″E / 3.13139°N 101.69056°E / 3.13139; 101.69056
உரிமம்கேஎல் இன்பிராசிரக்சர் கூட்டு நிறுவனம்
(KL Infrastructure Group Limited}
தடங்கள் கோலாலம்பூர் மோனோ
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்திய நிலையம்
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு MR3 
வரலாறு
திறக்கப்பட்டது31 ஆகத்து 2003; 21 ஆண்டுகள் முன்னர் (2003-08-31)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
துன் சம்பந்தன்
கேஎல் சென்ட்ரல்
 
 கோலாலம்பூர் மோனோ 
 
ஆங் துவா
தித்திவங்சா
அமைவிடம்
Map

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]

பொது

தொகு

மகாராஜாலேலா சாலையின் பெயரால் மகாராஜாலேலா நிலையம் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மெர்டேக்கா அரங்கத்தில் இருந்து தென்மேற்கே, மகாராஜாலேலா சாலையின் மீது கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையம், பெட்டாலிங் சாலையில் இருந்து தெற்கே சில நூறு மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. 4 செரி பெட்டாலிங் வழித்தடம்; 5 கிளானா ஜெயா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ள சில நிலையங்கள் இந்த நிலையத்திற்கு அருகிலேயே உள்ளன.

இம்பி சாலை மற்றும் சுல்தான் சுலைமான் சாலை ஆகிய சாலைகள் இந்த நிலையத்தின் பாதையில்தான் உள்ளன. முன்னர் இந்த நிலையம், மெர்டேக்கா மோனோரெயில் நிலையம் (Merdeka Monorail Station) என்று அழைக்கப்பட்டது.[3]

நிலைய தள அமைப்பு

தொகு
L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை மகாராஜாலேலா சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C

நுழைவாயில்கள்

தொகு

இந்த நிலையத்தில் மூன்று வெளியேறு வழிகள் உள்ளன. அவற்றில் இரண்டு வழிகள்; வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மகாராஜாலேலா சாலையின் இருபுறமும் செல்கின்றன. மேலும் ஒரு வழி; நிலையத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மெர்டேக்கா அரங்கத்தின் கார் நிறுத்துமிடத்திற்குச் செல்கிறது.

மகாராஜாலேலா கோலாலம்பூர் மோனோரெயில் நிலையம்
நுழைவாயில் இலக்கு தோற்றம்
A தெரு நிலைஅணுகல். மகாராஜாலேலா சாலை, சைனாடவுன்
மேல்நோக்கி மட்டுமே படிக்கட்டுகள்; முடிக்கப்படாத மின் சுமைதூக்கி
B நேரடி அணுகல் மெர்டேக்கா அரங்கம்
C தெரு நிலைஅணுகல். மகாராஜாலேலா சாலை, அத்தாப் கிராமம்
மேல்நோக்கி மட்டுமே படிக்கட்டுகள்; முடிக்கப்படாத மின் சுமைதூக்கி; எதிர்காலத்தில் சன்வே பெல்பீல்ட் (Sunway Belfield) அடுக்குமாடி குடியிருப்புகள்

காட்சியகம்

தொகு

மகாராஜாலேலா நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Maharajalela Monorail Station is an elevated monorail train station that forms a part of the Kuala Lumpur Monorail". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 6 February 2025.
  2. "Maharajalela Monorail station is a Malaysian elevated monorail train station that forms a part of KL Monorail line located in Kuala Lumpur and opened alongside the rest of the train service on August 31, 2003". klia2.info. 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2025.
  3. Azliana Ahmad (1999). Peranan Sistem Transit Aliran Ringan (STAR) dalam mengatasi masalah pengangkutan awam di bandar Kuala Lumpur. Universiti Malaya: Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya, 1998/99. pp. Lampiran 2.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=மகாராஜாலேலா_நிலையம்&oldid=4204004" இலிருந்து மீள்விக்கப்பட்டது