மலேசிய விடுதலை நாள்
மலேசிய விடுதலை நாள் (மலாய்: Hari Merdeka; அல்லது Hari Kebangsaan Malaysia ஆங்கிலம்: Malaysia Independence Day) என்பது 1957-ஆம் ஆண்டு பிரித்தானிய குடிமைவாத ஆட்சியிடமிருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்ற நாளாக 31 ஆகத்து அன்று கொண்டாடப்படுகிறது. இதில் மலேசிய நாள் (மலாய்: Hari Malaysia) என்பது வேறு; மலேசிய விடுதலை நாள் என்பது வேறு ஆகும்.[1][2]
மலேசிய விடுதலை நாள் Malaysia Independence Day Hari Kebangsaan Malaysia | |
---|---|
![]() 2012-ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டம் | |
கடைப்பிடிப்போர் | மலேசியர்கள் |
முக்கியத்துவம் | மலாயா கூட்டமைப்பு விடுதலை |
நாள் | 31 ஆகத்து |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
1963 செப்டம்பர் 16-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு, சரவாக், வடக்கு போர்னியோ மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்து மலேசியா எனும் நாடாக உருவான நாள்; மலேசியா நாள் என்று கொண்டாடப்படுகிறது.[3]
விடுதலைக்கான பின்னணி
தொகுபிரித்தானியர்களுடன் விடுதலைக்கான பேச்சுவார்த்தைக்காக துங்கு அப்துல் ரகுமான் தலைமையில் அமைச்சர்கள், மலாயாவின் அரசியல் தலைவர்கள் மலாயன் சீன அசோசியேசன் தலைவர் துன் டத்தோ சர் டான் செங் லொக் மற்றும் மலேசிய இந்தியக் காங்கிரசின் தலைவர் துன் சம்பந்தன் ஆகியோர் இலண்டன் சென்றனர்.[4]
மலாயா அவசர காலத்தில் கம்யூனிச அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், 8 பிப்ரவரி 1956ல் பிரித்தானிய அரசாட்சியிடமிருந்து விடுதலைக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் நிர்வாகக் காரணங்களால் 31 ஆகத்து 1957 என்று இறுதி முடிவானது. விடுதலை நாள் நிகழ்ச்சிக்காக மெர்டேக்கா சதுக்கம் கோலாலம்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டது.[5] [6]
31 ஆகத்து 1957
தொகு30 ஆகத்து 1957 இரவு கோலாலம்பூர் அரச சிலாங்கூர் மன்றம், விடுதலை சதுக்கத்தில் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குழுமினர். பிரதமராக பதவி ஏற்க இருந்த துங்கு அப்துல் ரகுமான் 11:58 பின்னேரத்தில் வந்தார். அவருடன் மலேசிய கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.[7]
இரண்டு நிமிடம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டு யூனியன் கொடி கீழே இறக்கப்பட்டது. மலேசியாவின் புதியகொடி ஏற்றப்பட்டு மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்ட பின்னர், ஏழு முறை மெர்டேக்கா என்று பொதுமக்கள் குரல் எழுப்பினர். பின்னர் துங்கு அப்துல் ரகுமான் பேசும்போது "மலாயன் மக்களின் வாழ்வில் சிறப்பான தினம்" என்று வர்ணித்தார்.[8]
31 ஆகத்து 1957 காலை கொண்டாட்ட நிகழ்வுகள் இதற்காகவே அமைக்கப்பட்ட மெர்டேக்கா மைதானத்தில் நடத்தப்பட்டது. காலை 9:30க்கு துவங்கிய அந்தக் கொண்டாட்டத்தில் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மலாய் மாநில ஆட்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள், கூட்டரசின் அமைச்சர்கள், மற்றும் குடிமக்கள் கலந்து கொண்டனர்.[9]
பங்கேற்றவர்கள்
தொகுஇந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விவரம்:
- அரச குடும்ப உறுப்பினர்கள்
- தாய்லாந்து அரசர் மற்றும் அரசி
- The Crown Prince and Princess of Japan
- (அரசியின் பிரதிநிதியாக) The Duke and Duchess of Gloucester
- Prince William of Gloucester
அரசுத் தலைவர்கள்
தொகு- தென்ஆப்ரிக்கப் பிரதமர், Johannes Gerhardus Strijdom
- இந்தியப் பிரதமர், Jawaharlal Nehru
- ,பாக்கித்தான் பிரதமர் Huseyn Shaheed Suhrawardy
- வியட்நாம் பிரதமர், Phạm Văn Đồng
- சிலோன் பிரதமர், சாலமன் பண்டாரநாயக்கா
- பர்மா பிரதமர், U Nu
- கம்போடியா பிரதமர், Sim Var
- The United States Secretary of State, John Foster Dulles (representing US President, டுவைட் டி. ஐசனாவர்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Starchild: Malaysian children are in high spirits to celebrate Merdeka Day." The Star. 27 August 2021. Retrieved 1 September 2021.
- ↑ Adila Sharinni Wahid. "Ceriakan anak-anak polis pada Hari Merdeka." Sinar Harian. 31 August 2021. Retrieved 1 September 2021.
- ↑ Chin, James; Harding, Andrew (2015), 50 Years of Malaysia: Federalism Revisited, Marshall Cavendish International, p. 10, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9814561242
- ↑ Wan Mohd Nor Wan Daud (2011), "A Reflection on Malaysia's Journey Since Independence", Malaysia and the European Union – Perspectives for the Twenty-First Century (Freiburg Studies in Social Anthropology / Freiburger Sozialanthropologische Studien), LIT Verlag: 9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3643800855
- ↑ Malaysia Act 1963
- ↑ Adrian Lim Chee En (30 August 2016). "Stop celebrating 'Hari Merdeka Malaysia'". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019.
- ↑ Mahmood., Ibrahim (1981). Sejarah perjuangan bangsa Melayu : suatu penyingkapan kembali sejarah perjuangan bangsa Melayu menuju kemerdekaan. Pustaka Antara, Kuala Lumpur. இணையக் கணினி நூலக மைய எண் 959796594.
- ↑ "MyGOV – The Government of Malaysia's Official Portal". www.malaysia.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 July 2021.
- ↑ Pelancongan., Malaysia. Kementerian Kebudayaan, Kesenian dan (2003). Di atas runtuhan kota Melaka kita dirikan negara baru : pengisytiharan kemerdekaan di Bandar Hilir, Melaka, 20 Februari 1956. Kementerian Kebudayaan, Kesenian & Pelancongan, Malaysia dan Jabatan Muzium dan Antikuiti. இணையக் கணினி நூலக மைய எண் 607250142.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் மலேசிய விடுதலை நாள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.