பன்னிமடை
பன்னிமடை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
பன்னிமடை | |
---|---|
பன்னிமடை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°05′11″N 76°54′55″E / 11.0864°N 76.9153°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஏற்றம் | 499.6 m (1,639.1 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,785 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641017[1] |
புறநகர்ப் பகுதிகள் | துடியலூர், குருடம்பாளையம், கணுவாய், அப்பநாயக்கன்பாளையம் |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் |
சட்டமன்றத் தொகுதி | கவுண்டம்பாளையம் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 499.6 மீ. உயரத்தில், (11°05′11″N 76°54′55″E / 11.0864°N 76.9153°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பன்னிமடை அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பன்னிமடை ஊரின் மொத்த மக்கள்தொகை 13,785 பேர் ஆகும். இதில் 7,027 பேர் ஆண்கள் மற்றும் 6,758 பேர் பெண்கள் ஆவர்.[2]
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற உலகளந்த பெருமாள் கோயில், வெங்கடேச பெருமாள் கோயில், கருப்பராய சுவாமி கோயில், கிருஷ்ண சுவாமி கோயில் [3][4][5][6] ஆகிய இந்துக் கோயில்கள் பன்னிமடை ஊரில் அமைந்துள்ளன
அரசியல்
தொகுபன்னிமடை பகுதியானது, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pannimadai Pin Code - 641017, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ "Pannimadai Village Population - Coimbatore North - Coimbatore, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ "Arulmigu Ulagalantha Perumal Temple, Pannimadai - 641019, Coimbatore District [TM010953].,Arulmigu Ulagalantha Perumal,Arulmigu Ulagalantha Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ "Arulmigu Venkatesa Perumal Temple, Pannimadai - 641018, Coimbatore District [TM010952].,Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ "Arulmigu Karupurayasamy Temple, Pannimadai - 641107, Coimbatore District [TM010847].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ "Arulmigu Krishnasamy Temple, Pannimadai - 641017, Coimbatore District [TM011630].,Arulmigu Krishnasamy Temple,Arulmigu Krishnasamy Temple". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
- ↑ "PANNIMADAI Village in COIMBATORE". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.