துடியலூர் (Thudiyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகும். பழங்காலத்தில் இவ்வூர் திருத்துடிசையம்பதி என்று அழைக்கப்பட்டு வந்தது‌. அவிநாசிக்குச் சென்றுவிட்டு பேரூருக்கு இவ்வழியாக வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இத்தலத்தில் இறைவனும் இறைவியும் வனமுருங்கை கொண்டு சமைத்து உணவளித்தனர் என்பது இவ்வூரின் வரலாறுகளில் ஒன்று. அதற்கு சான்றாக இன்றும் இவ்வூரில் பழமையான விருந்தீஸ்வரர் எனும் சோழர் காலத்துச் சிவன் கோவில் உள்ளது.[1]தமிழர் ஆட்சிக் காலத்தில், இவ்வூர் ஆறைநாட்டின் பகுதியாக விளங்கியது.[2]

துடியலூர்
—  புறநகர்ப் பகுதி  —
துடியலூர் பேருந்து நிலையம்
துடியலூர் பேருந்து நிலையம்
ஆள்கூறு 11°04′48.3″N 76°56′29.7″E / 11.080083°N 76.941583°E / 11.080083; 76.941583
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி துடியலூர்
மக்கள் தொகை 33,924 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


477 மீட்டர்கள் (1,565 அடி)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,924 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். துடியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துடியலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொடருந்து நிலையம்

தொகு
 
டொயொட்டோ காட்சியறை அருகிலுள்ள துடியலூர் ரயில்வே கேட்

துடியலூரில் தொடருந்து நிலையம் உள்ளது. அதில் மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் தொடருந்து நின்று செல்கிறது.

கோவில்கள்

தொகு
  • அருள் மிகு அரவான் திருக்கோவில்
  • அருள் மிகு பால வினாயகர் திருக்கோவில்
  • பால ஆஞ்சநேயர் திருக்கோவில்
  • விருந்தீசுவரர் கோவில்
  • அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
  • அருள்மிகு சடச்சியம்மன் திருக்கோவில்

ஆதாரங்கள்

தொகு
  1. "Virundeeswarar Temple", Wikipedia (in ஆங்கிலம்), 2024-04-29, பார்க்கப்பட்ட நாள் 2024-12-03
  2. கொங்கு மண்டல சதகம், பாடல் 21, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 20
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 22, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wiki.x.io/w/index.php?title=துடியலூர்&oldid=4182583" இலிருந்து மீள்விக்கப்பட்டது