பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை

பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை (Banihal Qazigund Road Tunnel) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பீர் பாஞ்சல் மலைத்தொடரில் 1790 மீட்டர் உயரத்தில் அமைந்த பனிஹால் மற்றும் காசிகுண்ட் நகரங்களை இணைக்கும் 8.5 கிமீ நீளம் கொண்ட நான்கு வரிசைகளைக் கொண்ட இரு வழிச் சுரங்கப்பாதையாகும். இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் இடையே பயணிக்கும் தொலைவும், நேரம் சுருங்கும். இச்சுரங்கச் சாலைப் பணி ரூபாய் 2,100 கோடி மதிப்பீட்டில், 2011-இல் துவங்கி நடைபெற்று வருகிறது.[1]

பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை
மேலோட்டம்
தற்போதைய நிலைமுடிவுற்றது
வழித்தடம்பனிஹால் -காசிகுண்ட்
தொடக்கம்பனிஹால்
முடிவுகாசிகுண்ட்
செய்பணி
பணி ஆரம்பம்2011
Trafficதானியங்கி
தொழினுட்பத் தகவல்கள்
நீளம்8.5 கிமீ
தண்டவாளங்களின் எண்ணிக்கை4 வழித்தடங்கள் (இரு வழிப்பாதை)
உயர் புள்ளை1,790 m (5,870 அடி)

சுரங்கச் சாலை அமைப்பு

தொகு

இதன் ஒவ்வொரு சாலைச் சுரங்கப்பாதையும் 7 மீட்டர் அகலமும், இரு வழிப்பாதையும் கொண்டது. பராமரிப்புப் பணிக்கும், அவசர காலத்தில் வெளியேறும் வகையில், இருவழிச் சுரங்கப்பாதையில், 500 மீட்டர் நீள இடைவெளியில், இரு சுரங்கச் சாலைகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கச் சாலைகளில் வெளியேறும் புகை போன்ற மாசுக் காற்றினை வெளியேறுவதற்கும், தூய காற்று உட்புகுவதற்கும் ஏற்ப சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கப்பாதைகளை பாதுகாக்கவும், கண்காணிப்பதற்கும் நவீன கருவி வசதிகள் கொண்டது. இச்சுரங்கபாதையை பயன்படுத்துவதற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கச் சாலைப் பணியின் முன்னேற்றம்

தொகு

மே 2016-இல் சுரங்கச் சாலைப்பணி 7.2 கிமீ தொலைவிற்கு குடையப்பட்டது.[2] மே 2018-இல் முழு நீளத்திற்கும் மலையைக் குடையும் பணி முடிவடைந்துள்ளது.[3] பயணிகளின் பயன்பாட்டிற்கு 8.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4 வழித்தடங்கள் கொண்ட இச்சுரங்கச் சாலையை 4 ஆகஸ்டு 2021 அன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார்.[4]

அமைவிடம்

தொகு

சுரங்கச் சாலையின் தெற்குப் பகுதியின் வாயில் 33°29′22″N 75°10′22″E / 33.4895°N 75.1729°E / 33.4895; 75.1729 பாகையிலும், வடக்குப் பகுதி 33°33′53″N 75°11′12″E / 33.5646°N 75.1867°E / 33.5646; 75.1867 பாகையிலும் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. CONCERN: 8 years on, work on Qazigund-Banihal tunnel far from over
  2. "Tunnels of Hope in Valley, Governance Now". பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
  3. http://www.kashmirtimes.in/newsdet.aspx?q=79343
  4. "Auto News India, Car and Bikes News, Launch, Price, Features, Reviews". Hindustan Times Auto News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.