தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் (ஆங்கிலம்: Southwest Penang Island District; மலாய்: Daerah Barat Daya Pulau Pinang; சீனம்: 西南县); ஜாவி: دايره بارت داي ڤولاو) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் பெரும் நகரமாக பாயான் லெப்பாஸ் நகரம் உள்ளது.
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் Southwest Penang Island District | |
---|---|
![]() | |
![]() தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°18′N 100°10′E / 5.300°N 100.167°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | தென்மேற்கு பினாங்கு தீவு |
தொகுதி | பாயான் பாரு |
அரசு | |
• உள்ளூராட்சி | பினாங்கு தீவு மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 175 km2 (68 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,88,603 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 110xx, 119xx |
தொலைபேசி எண்கள் | +604 |
வாகனப் பதிவெண்கள் | P |
இந்த மாவட்டம் பினாங்குத் தீவின் தென்மேற்குப் பகுதியில் பாதியை உள்ளடக்கியது; மற்றும் கிழக்குப் பகுதியில் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையாக உள்ளது.
இது 175 km2 (68 sq mi) பரப்பளவைக் கொண்ட மாநிலம். மற்றும் 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மக்கள்தொகை 197,131. இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக பாலிக் புலாவ் நகரம் உள்ளது. பாயான் லெப்பாஸ் நகரம் இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும்.[2]
வரலாறு
தொகு1786-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (British East India Company), பினாங்குத் தீவின் கட்டுப்பாட்டைத் தன்னகப் படுத்தியது. பினாங்குத் தீவின் வடகிழக்கு முனையில் ஜார்ஜ் டவுன் நகரத்தை நிறுவியது.[3][4]
அதன் பின்னர் பல பத்தாண்டுகளாக, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து பினாங்குத் தீவு நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் கட்டத்தில், பினாங்கில் எந்த ஒரு நிர்வாகப் பிரிவும் அமைக்கப்படவில்லை.
பாலிக் பூலாவ்
தொகு1888-ஆம் ஆண்டில், பினாங்குத் தீவின் தென்மேற்கில் உள்ள பாலிக் புலாவ் பகுதியில் ஒரு மாவட்டமும்; ஒரு நில அலுவலகமும் நிறுவப்பட்டது. இவ்வாறு தான், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அந்த வகையில், அப்போதையக் காலக்கட்டத்தில், பினாங்கு தீவு இரண்டு பெரும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாவட்டங்களும் 1890-ஆம் ஆண்டுகளில் பினாங்கின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் காட்சிப்படுத்தபட்டு இருந்தன.[5]
புவியியல்
தொகுஇந்தத் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்; பினாங்குத் தீவின் தெற்குப் பகுதியையும் மற்றும் பினாங்குத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மத்திய மலைத் தொடர்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. மாவட்டத்தின் கீழ் பின்வரும் நகரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
நகரங்கள்
தொகு
|
|
|
குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்கள்
தொகு
|
|
தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்
தொகுமலேசியா; பினாங்கு; தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (North Seberang Perai District); 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 201 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
PBD3031 | பாயான் லெப்பாஸ் | SJK(T) Bayan Lepas[7][8] | பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி | 11900 | பாயான் லெப்பாஸ் | 89 | 14 |
PBD3032 | சுங்கை ஆரா | SJK(T) Sungai Ara[9] | சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி | 11900 | பாயான் லெப்பாஸ் | 111 | 14 |
பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
தொகு- ☆ மத்திய செபராங் பிறை மாவட்டம் - (Central Seberang Perai District)
- ☆ வட செபராங் பிறை மாவட்டம் - (North Seberang Perai District)
- ☆ வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் - (Northeast Penang Island District )
- ☆ தென் செபராங் பிறை மாவட்டம் - (South Seberang Perai District)
- ☆ தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் - (Southwest Penang Island District)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profil Daerah". ptj.johor.gov.my. Archived from the original on 2021-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "George Town meliputi 'pulau', jelas Datuk Bandar". Buletin Mutiara. 1 May 2015. http://www.buletinmutiara.com/download/2015/BuletinMutiaraMay12015-BM.pdf.
- ↑ "Latar Belakang". dbd.penang.gov.my. Archived from the original on 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
- ↑ Mohd Nasser bin Malim. "Perubahan Pentadbiran Daerah dan Tanah di Balik Pulau, Pulau Pinang 1888 - 1956". University of Science, Malaysia. http://eprints.usm.my/31804/1/MOHD_NASSER_BIN_MALIM_24(NN).pdf.
- ↑ "Map of Pinang Island and Province Wellesley,1897". nas.gov.sg. Archived from the original on 2021-11-30. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
- ↑ "SPBT SJKT BAYAN LEPAS - பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ KumaraN, குமரன். "பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு - அநேகன்". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ "BAYAN LEPAS: SJKT Sungai Ara's efforts to instill United Nations Sustainable Development Goals in its various school activities has earned it a recognition from the Education Ministry". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Southwest Penang Island District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.