2016 இலாகூர் தற்கொலைத் தாக்குதல்
மார்ச் 27, 2016 அன்று பாக்கித்தானின் இலாகூரின் பெரிய பூங்காக்களில் ஒன்றான குல்சன்-இ-இக்பால் பூங்காவின் வாயிலுக்கருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 69 நபர்கள் உயிரிழந்தனர்; 300க்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.[1][2][3] உயிர்ப்பு ஞாயிறு நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறித்தவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடந்ததாக அறியப்படுகின்றது; இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறுவர்களுமாவர்.[4] பாக்கித்தானிய தாலிபானின் ஜமாத்-உல்-அராரா என்ற தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.[5]
2016 இலாகூர் தற்கொலைத் தாக்குதல் | |
---|---|
வடமேற்கு பாக்கிதான் போர் | |
இடம் | குல்சன்-இ-இக்பால் பூங்கா, லாகூர், பாக்கித்தான் |
ஆள்கூறுகள் | 31°30′59″N 74°17′25″E / 31.51625°N 74.29032°E |
நாள் | 27 மார்ச் 2016 6:30 pm (UTC+05:00) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | கிறித்தவ குடிமக்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
ஆயுதம் | வெடிகுண்டு அரைஞாண்பட்டை |
இறப்பு(கள்) | 69 |
காயமடைந்தோர் | 300+ |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஜமாத்-உல்-அரார் |
பின்னணி
தொகுபாக்கித்தானில் சமயச் சிறுபான்மையினருக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடும் பல அமைப்புக்களுக்கு பாக்கித்தானிய தாலிபான் மேற்பார்ப்பு அமைப்பாக விளங்குகின்றது. இவர்களால் பாக்கிதானின் மக்கள்தொகையில் 2% வரையிலுள்ள கிறித்தவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.[4]
2013இல் நடந்த தற்கொலைத் தாக்குதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்துப் புனிதர் தேவாலயத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்.[6][7] மார்ச் 2015இல் லாகூர் தேவாலயக் குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.[8] அப்போது தாலிபான் இதற்கு பொறுப்பேற்றதுடன் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்தது.[8]
பாக்கித்தானிய தாலிபானின் ஒரு பிரிவான ஜமாத்-உல்-அரார், முதலில் குழுவிலிருந்து பிரிந்து பின்னர் மார்ச் 2015இல் மீண்டும் இணைந்தது.[4][9][10] ஜமாத்-உல்-அரார் குழுதான் நவம்பர் 2014இல் வாகா எல்லைத் தாக்குதலை நடத்தியது; இதில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.[11]
குண்டு வெடிப்பு
தொகுமாலை 6:30க்கு குண்டுவெடிப்பு நடைபெற்றது; அவசர உதவி 1122 தொடர்பாளர் மாலை 6:44க்கு அழைப்பு வந்ததாகவும் உடனே 23 மருத்துவ உதவுகை ஊர்திகள் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.[12] 40க்கும் மேற்பட்ட உயிரற்ற உடல்கள் லாகூரின் ஜின்னா மருத்துவகத்தை வந்தடைந்தன.[13] மருத்துவ உதவுகை ஊர்திகள் பற்றாது போனமையால் வாடகையுந்துகளும் தானிகளும் காயமுற்றோரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன.[13] 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு இலாகூர் தேவாலயங்களில் குண்டுவெடிப்பை நடத்தியிருந்த பாக்கித்தானிய தாலிபானின் ஜமாத்-உல்-அரார் தற்போதைய குண்டுவெடிப்பிற்கும் உரிமை கோரியது.[14][15] ஜமாத்-உல்-அராரின் தொடர்பாளர் எசனுல்லா எசான் கிறித்தவர்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிபடுத்தினார்.[5]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Suicide blast kills at least 72 in Lahore park". The Express Tribune. 27 March 2016.
- ↑ "Pakistan explosion leaves many dead at Lahore park". பிபிசி. 27 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ "72 killed, over 300 injured in Lahore suicide blast". The News. 27 March 2016. http://www.thenews.com.pk/latest/108378-Blast-at-Lahore-park-leaves-over-30-injured. பார்த்த நாள்: 27 March 2016.
- ↑ 4.0 4.1 4.2 Los Angeles Times (27 March 2016). "Taliban says it targeted Christians in a park on Easter Sunday, killing 65". latimes.com.
- ↑ 5.0 5.1 "Scores killed in Lahore suicide attack". Al Jazeera. 27 March 2016. http://www.aljazeera.com/news/2016/03/deadly-blast-hits-pakistan-lahore-160327143110195.html. பார்த்த நாள்: 27 March 2016.
- ↑ "Orders fresh probe into church attack SC rues poor investigation in sensitive cases | Newspaper". Dawn.Com. 2010-12-24. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
- ↑ New York Times: "Suicide Attack at Christian Church in Pakistan Kills Dozens" by ISMAIL KHAN and SALMAN MASOOD 22 September 2013
- ↑ 8.0 8.1 Raja, Adeel; Shah, Zahir; Mullen, Jethro. "In Pakistan, Taliban's Easter bombing targets Christians; 67 people killed". CNN. http://www.cnn.com/2016/03/27/asia/pakistan-lahore-deadly-blast/index.html. பார்த்த நாள்: 28 March 2016.
- ↑ "Pakistan Taliban faction announce split, new leader". Agence France-Presse. 4 September 2014 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141111065156/http://www.afp.com/en/node/2799017/. பார்த்த நாள்: 11 November 2014.
- ↑ "Pakistani splinter group rejoins Taliban amid fears of isolation". ராய்ட்டர்ஸ். 12 March 2015 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225081403/https://www.reuters.com/article/us-pakistan-militants-alliance/pakistani-splinter-group-rejoins-taliban-amid-fears-of-isolation-idUSKBN0M81WF20150312. பார்த்த நாள்: 13 March 2015. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Farooq, Umar; Shah, Zahir; Riaz, Wasim. "TTP splinter groups claim Wagah attack; 60 dead". http://www.dawn.com/news/1142006/ttp-splinter-groups-claim-wagah-attack-60-dead. பார்த்த நாள்: 19 March 2015. "At least 60 people were killed on Sunday in a blast near the Wagah border, the responsibility of which was claimed separately by the outlawed Jundullah and TTP-affiliated Jamaat-ul-Ahrar outfits"
- ↑ "At least 60 dead, over 250 injured in Gulshan-e-Iqbal blast in Lahore". The Nation. 27 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ 13.0 13.1 "30 killed in Lahore's Gulshan-e-Iqbal Park bombing". Pakistan Today. 27 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ "At least 65 dead after suicide attack in Lahore park". Dawn. 27 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
- ↑ "Deadly blasts hit Pakistan churches in Lahore". BBC News. 15 March 2015. http://www.bbc.com/news/world-asia-31894708. பார்த்த நாள்: 27 March 2016.
தமிழ் ஊடகங்களில்
தொகு- தினமணி: லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்:பெண்கள், குழந்தைகள் உள்பட 56 பேர் பலி
- தி இந்து தமிழ்: லாகூர் தாக்குதலில் 69 பேர் பலி: கிறிஸ்தவர்களை குறிவைத்ததாக பயங்கரவாத அமைப்பு தகவல்
- பிபிசி தமிழ்: லாகூர் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் உட்பட 70 பேர் பலி
- உதயன்: பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் : 60 பேர் சாவு
- மாலைமலர்: லாகூர் பூங்காவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு[தொடர்பிழந்த இணைப்பு]