1980 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியக் குடியரசின் ஏழாம் நாடாளுமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஏழாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முந்தைய மூன்று ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி உடைந்ததால் அதன் ஆட்சி கவிழ்ந்தது. இந்திய தேசிய காங்கிரசு எளிதில் வென்று இந்திரா காந்தி நான்காம் முறை பிரதமரானார்.
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 542 இடங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 356,205,329 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 56.92% ▼ 5.55pp | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகுஇத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா கட்சி அரசால் மூன்றாண்டுகள் கூட ஆட்சி புரிய இயலவில்லை. ஜனசங்கத்தின் வலதுசாரிகளும், சோசலிசக் கொள்கை கொண்டவர்களும் இணைந்து உருவான அக்கட்சி, விரைவில் கொள்கை வேறுபாடுகளால் பிளவுற்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். ஜனதா கட்சியின் சில பிளவுகளின் ஆதரவைப் பெற்றிருந்த சரண் சிங் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக காங்கிரசு தலைவி இந்திரா காந்தி தந்த வாக்குறுதியை நம்பி பிரதமரானார். ஆனால் இந்திரா ஆதரவளிக்க மறுத்து விட்டதால், நாடாளுமன்றத்தை சந்திக்காமலேயே சரண் சிங் அரசு கவிழ்ந்தது. 1980ல் புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. நெருக்கடி நிலையின் போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக தன் மீது போடப்பட்ட வழக்குகளின் மூலம் மக்களின் அனுதாபத்தைப் பெற்றிருந்தார் இந்திரா. மேலும் “வேலை செய்யக்கூடிய அரசிற்கு வோட்டளியுங்கள்” (Vote for a government that works) என்ற புதிய பிரச்சார கோஷத்தின் மூலம் ஜனதா கட்சி ஆட்சியில் நிலையற்ற தன்மையை சுட்டிக்காட்டி மக்களின் ஆதரவைப் பெற்றார். வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் 1980 தேர்தலில் காங்கிரசு எளிதில் வென்றது.
முடிவுகள்
தொகுமொத்தம் 59.62 % வாக்குகள் பதிவாகின.[1]
கூட்டணி | கட்சி | வென்ற இடங்கள் | மாற்றம் | வாக்கு % |
---|---|---|---|---|
இந்திரா காங்கிரசு இடங்கள்: 374 மாற்றம்: +286 வாக்கு %: |
இந்திரா காங்கிரசு | 351 | 271 | |
திமுக | 16 | 15 | ||
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 3 | 1 | ||
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 | 1 | ||
கேரள காங்கிரசு (ஜோசப்) | 1 | -1 | ||
ஜனதா கூட்டணி இடங்கள்: 34 மாற்றம்: -194 வாக்கு %: |
ஜனதா கட்சி | 31 | -172 | |
அதிமுக | 2 | -15 | ||
அகாலி தளம் | 1 | -7 | ||
இடதுசாரிக் கூட்டணி இடங்கள்: 53 மாற்றம்: +17 வாக்கு %: |
சிபிஎம் | 35 | 13 | |
சிபிஐ | 11 | 4 | ||
புரட்சிகர சோசலிசக் கட்சி | 4 | — | ||
பார்வார்டு ப்ளாக் | 3 | — | ||
கேரள காங்கிரசு (மணி) | 1 | — | ||
மற்றவர்கள் இடங்கள்: 63 மாற்றம்: -120 |
லோக் தளம் (ஜனதா மதச்சார்பின்மை) | 41 | -36 | |
காங்கிரசு (அர்ஸ்) | 13 | -43 | ||
சுயேச்சைகள் | 6 | -27 | ||
மற்றவர்கள் | 3 | -14 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 7th Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்