ஸ்ரீ. ஸ்ரீராமன்

ஸ்ரீனிவாசன் ஸ்ரீராமன் (16 நவம்பர் 1918 - 11 சூன் 1993, மெட்ராஸில் ) ஓர் இந்தியத் துடுப்பாட்ட நிர்வாகி ஆவார்.

ஸ்ரீனிவாசன் ஸ்ரீராமன்
இருபதாவது பிசிசிஐஇன் தலைவர்
பதவியில்
1985–1988
முன்னையவர்என். கே. பி. சால்
பின்னவர்பிசுவந்த் தத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 நவம்பர்,1918
சென்னை, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு11 சூன், 1993
சென்னை, தமிழ்நாடு

ஸ்ரீராமன் 1942-1944/45 வரை மெட்ராஸ் கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளராகவும், தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் (TNCA) 1954-1985 செயலாளராகவும், 1963-1964 மற்றும் 1964-1965 ஆம் ஆண்டு வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் இணைச் செயலாளராகவும், 1965/1966 - 1969/1970 ஆம் ஆண்டுகளில் செயலாளராகவும், துணைத் தலைவராக 1977/78 - 1984/1985, 1985/1986 மற்றும் 1988/1989 ஆம் ஆண்டுகளில் தலைவராகவும் இருந்தார்.

ஸ்ரீராமன் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது, தமிழ்நாடு முதல்வரும் இவரது நண்பருமான கே.காமராசருடனான தனது நட்பின் மூலம் தமிழ்நாடு துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட மைதானத்தை மாநகராட்சி மைதானத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு குத்தகைக்கு மாற்றினார். இவர் பிசிசிஐ தலைவராக இருந்தபோது 1987 உலகக் கிண்னத்தை பாக்கித்தானுடன் இணைந்து இந்தியா நடத்தியது. [1]

1972 இல் மெரிலிபோன் துடுப்பாட்டச் சங்கத்தின் (எம்சிசி) கெளரவ வாழ்நாள் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஒரு ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார். 1977-1978 இல் இந்திய அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது அணியின் உதவி மேலாளராக இருந்தார். எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஒரு மாநாட்டு அரங்கம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

இவர் மாரடைப்பால் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ashok, Venugopa L (14 November 2017). "Sriraman, the uncommon administrator with a common man's heart". The New Indian Express. https://www.newindianexpress.com/sport/cricket/2017/nov/14/sriraman-the-uncommon-administrator-with-a-common-mans-heart-1700519.html. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=ஸ்ரீ._ஸ்ரீராமன்&oldid=4191603" இலிருந்து மீள்விக்கப்பட்டது