வி. நாராயணன் (வான்வெளிப் பொறியாளர்)

வி. நாராயணன் (V. Narayanan) ஓர் இந்திய விண்வெளிப் பொறியாளரும் வானூர்தித் தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார். இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இசுரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறைச் செயலராகவும் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.[2][3] இசுரோ நிறுவனத்தின் 11-ஆவது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வி. நாராயணன்
Honorable Chairman of ISRO
11- ஆவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர்
பதவியில்
14 சனவரி 2025 (2025-01-14)
Succeedingஎசு. சோமநாத்
திரவ இயக்கத் திட்ட மையம் இயக்குநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 சனவரி, 2018
முன்னையவர்எசு. சோமநாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1964 (1964-05-14) (அகவை 60)
மேலக்காட்டுவிளை, கன்னியாகுமரி மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா[1]
முன்னாள் மாணவர்ஏஎம்ஐஇ (பொறியாளர்கள் நிறுவனம், இந்தியா), இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் (முதுநிலைத் தாழ்வெப்பப் பொறியியல்)
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் (வான்வெளிப் பொறியியலில் முனைவர்

சனவரி 14,2025 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு விண்வெளித் துறையின் செயலாளராகவும், விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் நாராயணன் பொறுப்பேற்பார். [4][5]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

நாராயணன் , கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே மேலக்காட்டுவிளை எனும் சிற்றூரில் 14 மே 1964 அன்று பிறந்தார். இவருடைய தந்தை விவசாயி சி. வண்ணைய பெருமாள், தாயார் எசு. தங்கமாள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி பயின்றார்.[6] இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூரில் பட்டம் பயின்றார். [7] நாராயணன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தொழில் வாழ்க்கை

தொகு

1984 ஆம் ஆண்டு முதல் இசுரோவில் பணியாற்றி வருகிறார் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றி வரும் நாராயணன் சுமார் 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஏவூர்தி, விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர் இவர், பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா, ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2, 3 திட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பினை வழங்கியுள்ளார். நாராயணன், திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக உள்ளார்.

1989-ல் எம்.டெக் பயின்ற பிறகு, திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் கிரையோஜெனிக் ப்ராபல்ஷன் பகுதிக்கு மாறினார். இந்தியாவின் தாழ்வெப்பப் பொறியியலின் உந்துவிசை அமைப்புகளின் வளர்ச்சியில் நாராயணன் முக்கிய பங்கு வகித்தார், எரிவாயு மின்னியற்றி, துணை அளவிலான தாழ்வெப்ப இயந்திரங்கள், உந்துதல் அறைகள் போன்ற துணை அமைப்புகளின் வெற்றிகரமான வளர்ச்சிக்கும் சோதனைக்கும் பங்களித்தார். உள்நாட்டு தாழ்வெப்ப உந்துவிசை தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்க இவரது முயற்சிகள் முக்கிய பங்கு வகித்தன. [8]

C25 தாழ்வெப்பநிலையத் திட்டத்தின் இயக்குநராக, நாராயணன் GSLV Mk-III ஏவுகணை வாகனத்திற்கான C25 தாழ்வெப்ப முற்செலுத்த அமைப்பினை வடிவமைத்து மேம்படுத்துவதில் தொழில்நுட்ப-நிர்வாகப் பிரிவில் தலைமை தாங்கினார். இவரது வழிகாட்டுதலின் கீழ், இந்த அமைப்பு குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு, GSLV Mk-III வாகனத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

விருதுகள்[9]

தொகு
  • இந்திய விண்வெளிச் சங்கத்தின் தங்கப் பதக்கம்
  • ஏவூர்தி தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான இந்திய விண்வெளிச் சங்க விருது
  • இசுரோவின் சிறந்த சாதனையாளர் விருது
  • செயல்திறனுக்கான சிறப்பு விருது
  • குழுச் சிறப்பு விருதுகள்
  • சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ முனைவர் பட்டம்
  • இந்தியத் தொழில்நுட்பக் கழகம், கரக்பூர், புகழ்பெற்ற மேனாள் மாணவர் விருது (2018).
  • பொறியாளர்களின் தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்தின் (இந்தியா) தேசிய வடிவமைப்பு விருது (2019)
  • வான்வழித் தொலை அளவு இந்தியச் சமூக, தேசிய வானூர்திப் பரிசு (2019)

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.thehindu.com/sci-tech/v-narayanan-who-is-set-to-take-over-as-isro-chairman-terms-his-new-assignment-as-a-great-responsibility/article69075005.ece
  2. "இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்". Hindu Tamil Thisai. 2025-01-08. பார்க்கப்பட்ட நாள் 2025-01-08.
  3. "V Narayanan appointed new Isro chairman". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/v-narayanan-appointed-new-isro-chairman/articleshow/117033478.cms. 
  4. "V Narayanan appointed new Isro chairman". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/v-narayanan-appointed-new-isro-chairman/articleshow/117033478.cms. 
  5. "V Narayanan: The rocket scientist who will lead ISRO into its next phase: 10 facts". Livemint. https://www.livemint.com/companies/people/v-narayanan-the-rocket-scientist-who-will-lead-isro-into-its-next-phase-10-things-to-know-about-new-isro-chief-11736301472974.html. 
  6. "'அரசுப் பள்ளியில் படித்து உயர்ந்தவர்...' - இஸ்ரோ தலைவரான வி.நாராயணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து". Hindu Tamil Thisai. 2025-01-08. பார்க்கப்பட்ட நாள் 2025-01-08.
  7. DIN (2025-01-08). "புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் யார்?". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2025-01-08.
  8. "Meet V Narayanan: Chandrayaan-3 propulsion architect appointed next Isro chief". INDIA TODAY. https://www.indiatoday.in/science/story/meet-v-narayanan-chandrayaan-3-propulsion-architect-appointed-next-isro-chief-stemp-2661329-2025-01-08. 
  9. https://www.jagranjosh.com/general-knowledge/dr-v-narayanan-isro-chairman-biography-1736314051-1