வில்பத்து தேசிய வனம்
வில்பத்து சரணாலயத்தின் அமைவிடம், அனுராதபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் (கொழும்பில் இருந்து 180 கி.மீ) வட மத்திய, வட மேல் மாகாணங்களில் கடல் மட்டத்திலிருந்து 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் தெற்கு எல்லையாக மோதரகம் ஆறும் வடக்கு எல்லையாக கலா ஓயாவையும், மேற்கு எல்லையாக இந்து சமுத்திரத்தையும் கொண்டுள்ளது. வில்பத்துவே இலங்கையில் உள்ள பெரிய சரணாலயம் ஆகும். இதன் பரப்பளவு 131, 693 ஹெக்டேயர் ஆகும். இங்கு 60க்கும் மேற்பட்ட குளங்களும், ஏரிகளும் உள்ளடங்கும்.[1][2][3]
வில்பத்து தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() A black-winged stilt in Wilpattu National Park | |
அருகாமை நகரம் | அனுராதபுரம் |
ஆள்கூறுகள் | 8°26′N 80°00′E / 8.433°N 80.000°E |
பரப்பளவு | 131667.1 ha |
நிறுவப்பட்டது | December 25, 1938 |
நிருவாக அமைப்பு | Department of Wildlife Conservation |
இங்கு ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 27.2 செல்சியசாக காணப்படுகிறது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 1000மிமி ஆகும். இலங்கையின் வறண்ட வலயத்தில் அமைந்திருந்தாலும் அதிகமான நீர் நிலைகள் காணப்படுகின்றன. வட கீழ் பருவக் காற்று மூலமும், மார்ச் ஏப்ரல் மாதங்களில் பருவ மழை மூலமும் நீரைப் பெற்றுக் கொள்ளும் வில்பத்துவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உலர் கால நிலையாகவே காணப் படுகிறது.
அதிகம் மழை பெறும் பகுதிகளில் உயர்ந்த மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும், கடல் சார்ந்த பகுதிகளில் உவர் நீர்த் தாவரங்களும், மற்றும் பற்றைக் காடுகளும், புதர்க் காடுகளும் வில்பத்துவில் உள்ளடங்குகிறது.
பிராணிகள்
தொகுஇந்த பூங்காவில் சிறுத்தைகள், யானைகள், நரிகள், ஓநாய்கள், மான்கள் போன்ற விலங்குகளும் 120 வகையான பறவைகளும் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wilpattu Ramsar Wetland Cluster". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ Kittle, A. M.; Watson, A. C.; Samaranayake, P. K. L. (May 2021). "Edge effects and distribution of prey forage resources influence how an apex predator utilizes Sri Lanka's largest protected area" (in en). Journal of Zoology 314 (1): 31–42. doi:10.1111/jzo.12870. பன்னாட்டுத் தர தொடர் எண்:0952-8369. https://zslpublications.onlinelibrary.wiley.com/doi/10.1111/jzo.12870.
- ↑ Samarasinghe, Dinal J. S.; Wikramanayake, Eric D.; Gopalaswamy, Arjun M.; Jayewardene, Rukshan; Kumara, Jehan; Fernando, Javana; Gunawardene, Kithsiri; Alexander, Justine Shanti et al. (2022-09-01). "Evidence for a critical leopard conservation stronghold from a large protected landscape on the island of Sri Lanka". Global Ecology and Conservation 37: e02173. doi:10.1016/j.gecco.2022.e02173. பன்னாட்டுத் தர தொடர் எண்:2351-9894. https://www.sciencedirect.com/science/article/pii/S2351989422001755.