விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018/நேரடி சந்திப்பு
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018 தொடர்தொகுப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் 28ஆம் திகதி ஞாயிறு அன்று நேரடி சந்திப்பு நடைபெற்றது.
இடம்
தொகுஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிப் புதூர்,திருச்சி
நிகழ்வு ஒருங்கிணைப்பு
தொகுநிகழ்வு
தொகு28-10- 2018 ஞாயிறு.
- 10:00 - 10:30 மருத்துவருடன் பெண்கள் நலன் சார்ந்த ஓர் உரையாடல்
- 10:30 - 11:00 தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுத்தல், பொதுவகம் பற்றிய விளக்கம்
- 11:00 - 11:20 தேநீர் இடைவேளை
- 11:20 - 1:00 புதியவர்களுக்கான கணக்குத் தொடங்குதல், தொகுத்தல்.
- 1:00 - 2:00 மதிய உணவு இடைவேளை
- 2:00 - 4:00 பெண்கள் நலன்சார்ந்த கட்டுரை உருவாக்கம் மற்றும் தொகுத்தல், தேநீர் வழங்கல்.
(நிகழ்வுகள் மாறுதலுக்குட்பட்டது)
பங்கு பெற விரும்புவோர்
தொகுபயிலரங்க நிகழ்வு
தொகு"பெண்கள் நலனுக்கான மகளிர் விக்கி 2018" என்ற நிகழ்வை ஒட்டி கடந்த 28/10/2018 அன்று திருச்சி மாவட்டம், இடமலைப்பட்டி புதூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருச்சியில் பெண்களின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த, விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்கவும், அவற்றை மேம்படுத்தவும், பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கவும் ஒரு நாள் தொடர்தொகுப்பு (Edit-a-than) மற்றும் பயிலரங்கு(Work shop) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை பத்து மணியளவில் தொடங்கி மாலை 5 மணிவரை நிகழ்வு நடந்தது. பார்வதிஸ்ரீ விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தை வழங்கினார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி லட்சுமி அவர்கள் மகளிர் நலன் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வினைத் தந்தார். பின்னர் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு தொடங்குதல், விக்கிப்பீடியாவில் உலவுதல், செய்யக்கூடாதவை போன்றவற்றை பயனர்: பார்வதிஸ்ரீ விளக்கினார். நந்தினி கந்தசாமி, ஞா.ஸ்ரீதர், ஆங்கில விக்கிப்பயனர் பாலாஜி காசிராஜன் ஆகியோர் உதவியுடன் 20 பேருக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர் கணக்கு தொடங்கப்பட்டது. பயனர் நந்தினி கந்தசாமி மணல் தொட்டியின் பயன்பாட்டினையும் அதில் பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தையும் விளக்கிக்கூறினார். பயனர்கள் பயிற்சி செய்தபின் வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் பார்வையிடப்பட்டு கட்டுரைகளைத் தொகுக்கும் முறை பயனர் நந்தினி கந்தசாமியால் விளக்கப்படது. சிலர் கைப்பேசியிலும் சிலர் மடிக்கணினியிலும் கணக்கு தொடங்கினர். பயனர் பார்வதிஸ்ரீ "மூலத்தைத்தொகுத்தல்" முறையில் விளக்க பயனர் ஸ்ரீதர் விஷுவல் எடிட்டிங் முறை பற்றியும் விளக்கினார். பின்னர் பெண்கள் நலனுக்கான மகளிர் விக்கி 2018 திட்டம் பற்றி பார்வதிஸ்ரீயும் நந்தினியும் எடுத்துக்கூறினார்கள். பெண்கள் நலன் சார்ந்த தலைப்புகள் குறித்தும் அக்கட்டுரைகளை எவ்வாறு உருவாக்குதல், சிவப்பிணைப்பு நீல இணைப்புகள் பற்றிய விளக்கத்தையும் ஆங்கில விக்கியில் அத்தலைப்புகளைத் தேடி மொழிமாற்றம் செய்யலாம் என்பதையும் நந்தினி விளக்கினார். பயனர்களின் தொகுத்தல் தொடர்பான ஐயங்களைப் போக்க பயனர் பார்வதிஸ்ரீ, பயனர் ஸ்ரீதர். பயனர் நந்தினி கந்தசாமி பயனர் பாலாஜி காசிராஜன் ஆகியோர் உடனிருந்து உதவினர்.
நிகழ்வில், திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பயனர்கள் கலந்துகொண்டதோடு சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சேலம், காரைக்குடி ஆகிய பகுதிகளிலிருந்தும் பயனர்கள் கலந்துகொண்டனர். பயனர் லதாபாலாஜி அவர்கள் தாம் பணியாற்றும் பள்ளியில் பயிலரங்கம் நடத்த உதவியதோடு தேநீர், உணவு ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்தார். அவருக்கும் அவரது பள்ளியின் தலைமாசிரியர் திருமதி. ஜெயந்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். விழாவில் மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு. மருதநாயகம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கலந்துகொண்டோர் அனைவருக்கும் விக்கிப்பீடியாவின் சார்பில் சான்றிதழ்களை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார். சென்னைப் பயனர் திருமதி கனகலட்சுமி விக்கிப்பீடியர்களுக்கு பொன்னாடையைப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை பயனர் பார்வதிஸ்ரீ, பயனர் நந்தினி கந்தசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதனைத் தொடர்ந்து இப்பயனர்களின் தொடர் பங்களிப்புகளை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான உதவிக்குறிப்புகள் தரவும் "தமிழக மகளிர் விக்கி 2018" என்ற வாட்சாப் குழு ஒன்று தொடங்கப்பெற்று உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கலந்து கொண்டவர்கள்
தொகு- பயனர்:Vasantha Lakshmi V
- பயனர்:ச. மணிவண்ணன்
- பயனர்:கிரிஜா ஆனந்தகிருஷ்ணன்
- பயனர்:சவால் சத்யா
- பயனர்:kavitha sasikumar6212
- பயனர்:Anukeerthika
- பயனர்:Trichymumtaj
- பயனர்:Kannamma Vijayaraj
- பயனர்:Inshathasneem
- பயனர்:Siva2kalai
- பயனர்:Thilaka Rani.G
- பயனர்:K.Mallika
- பயனர்:பா.தென்றல்
- பயனர்:கலைச்செல்வி
- பயனர்:Kanagadharshni
- பயனர்:Mahalakshmiar
- பயனர்:Lathabalajim
- நந்தினி கந்தசாமி
- ஞா.ஸ்ரீதர்
- கார்த்திகேயன்
- பாலாஜி
- பயனர்:Parvathisri
- பயனர்:MaruthanayagamBEO
- பயனர்:YasminNisar