விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/தமிழ்
(விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அதிகம் பார்க்கப்படும் தகவல் செறிவுள்ள கட்டுரை. சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம்--Ravidreams 19:05, 16 நவம்பர் 2006 (UTC)
- நல்ல கட்டுரை, ஆனால் தமிழ் என்ற தலைப்பில் சேர்க்கப்படவேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஆகையால் முழுமை பெறவில்லை என்று நினைக்கின்றேன். கட்டமைப்பும் மேம்படுத்தப்படலாம். --Natkeeran 17:44, 18 நவம்பர் 2006 (UTC)
- நற்கீரன், கட்டுரை ஏற்கனவே நீளமாக உள்ளது. மேற்படி தகவல்களை துணைத்தலைப்புகளில் சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை தாருங்கள். எந்த விதத்தில் தற்போதைய உள்ளடக்கம், கட்டமைப்பை மாற்றலாம் என்றும் தெரியப்படுத்துங்கள்--Ravidreams 10:57, 19 நவம்பர் 2006 (UTC)
- சிறந்த முயற்சியின் அடிப்படையிலுள்ள கட்டுரை. ஆய்த எழுத்து என்ற துணைத்தலைப்பிலுள்ள கேடயப்படம் இருப்பது பொருத்தமாகப் படவில்லை. கேடயத் தோற்றத்திலிருந்தா, முப்பாற்புள்ளிகள் தோன்றியது? இம்முற்பாற் புள்ளி , ஆரம்பத்தில் இ என்பதனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.கி.பி.5க்கு பிறகே தற்போதுள்ள இ என்ற குறியீடு தோன்றியது எனலாம்.த* உழவன் 06:13, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- தற்போது மேற்கோள் தேவை என்று கேட்கப்பட்ட வரிக்கு மேற்கோள் சேர்த்தாயிற்று. [1]--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:27, 3 சூலை 2012 (UTC)
- 8.எண்கள் என்பதிலுள்ள எண்களுக்கான அட்டவணையில், எட்டு என்ற எண்ணில், அ- என்று இருப்பது தவறு. அ-வில் வரும் சுழி இல்லாது இருக்க வேண்டும்.காண்கஅதனை உருவாக்க வேண்டும். பழைய நூல்களில் அதற்கான குறியீடு காணின் அதனைக் காட்டவும். அதற்குரிய கணினி எழுத்துருவை உருவாக்க முனைகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
ஆதரவு
தொகுநடுநிலைமை
தொகுஎதிர்ப்பு
தொகுகருத்துக்கள்
தொகு"இங்கே" என்னும் சொல் இலங்கை மற்றும் யாழ்பாணத்தில் "இங்கை" என பயன்படுத்துவதாக குரிப்பிட்டிருந்தீர்கள்,ஆனால் அச்சொல் இலங்கையிலோ அல்லது யாழ்பாணத்திலோ அவ்வாரு உச்சரிக்கப் படுவதில்லை.
மாறாக "இங்கே" எனும் சொல் யாழ்பாணத்தில் நேரடியாக "இங்க" என்றும், சூழ்நிளைகளுற்கேற்ப- இஞ்ச,இந்த. இவ்வாரு அழைக்கப்படுகின்றது.
ஆனால் பிரமாவட்டங்களில் குறிப்பாக கொழும்பில் "இங்க" என்றே அழைக்கப்படுகின்றது.−முன்நிற்கும் கருத்து 103.247.50.188 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மறுப்பு: இங்கை என்ற பயன்பாடு யாழ்ப்பாணத்தில் பரவலாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 10:34, 30 சூலை 2015 (UTC)