வானோடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வானோடி ஒரு வானூர்தி ஓட்டுநரைக் குறிக்கின்றது. தமிழில் விமானி, விமான ஓட்டுநர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இதற்கு சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் அவசியம். இவர்கள் பல மணி நேரம் ஓட்டிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான தகுதிகளை ஒவ்வொரு நாட்டு அரசும் வெவ்வேறு விதமாக வரையறுத்துள்ளன. இவர்களின் திறனைப் பொருத்து சான்றிதழ் வழங்கப்படும். தனி உரிமம் வழங்கப்பட்டவர், தனி விமானங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார். வணிக உரிமம் பெற்றவரே பலர் பயணிக்கக் கூடிய விமானங்களை ஓட்டக் கூடியவர். சிலர் தங்களின் பொழுதுபோக்குக்காகவோ, பணம் திரட்டுவதற்காகவோ, தங்களின் தொழிலுக்காகவோ விமான ஓட்டிகளாக பயற்சி பெறுவதுண்டு. பல நாடுகளில் இராணுவத்திலும் விமான ஓட்டிகளை சேர்த்துக் கொள்வர். அரசின் வான்படைக்குச் சொந்தமான போர் விமானங்களை ஓட்டுவது இவர்களது பணி. இராணுவத்தில் சேரும் விமான ஓட்டிகளுக்கு தனித்துவமான பயிற்சியும் பாடத்திட்டமும் இருக்கும்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/dd/USAF_pilot.jpg/220px-USAF_pilot.jpg)