வலைவாசல்:புவியியல்


புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன.

1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு.

2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது.

3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு.

4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு.

ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தொகு  

சிறப்புக் கட்டுரை

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும். இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.


தொகு  

சிறப்புப் படம்

மட்டக்களப்பு வாவி
மட்டக்களப்பு வாவி
படிம உதவி: அன்ரன்

மட்டக்களப்பு வாவி இலங்கையின் மட்டக்களப்பில் மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமானதும் 27,527 ஏக்கர் பரப்பளவினையும் கொண்ட இது இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் மறைவதால் படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.

தொகு  

செய்திகளில் புவியியல்

தொகு  

புவியியலாளர்கள்‎

பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்
பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும், பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார். இவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின் நகரில் கல்வி கற்றார். 1860ஆம் ஆண்டில், யூலென்பர்க் பயணம் எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், 1862க்கும் இடையில், இலங்கை, ஜப்பான், தாய்வான், செலெபெஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், சீயாம், பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், 1868க்கும் இடையில், ஐக்கிய அமெரிக்காவில், கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை சீனா, ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். இவர், புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

  • ... கொலம்பஸ் இறந்த வேளையிலும் தான் கண்டறிந்தது ஆசியாவின் கிழக்குக்கரை தான் என்று உறுதியாக நம்பினார்.
தொகு  

இதே மாதத்தில்

தொகு  

புவியியல் கண்டங்கள்

அன்டார்க்டிக்கா
ஆப்பிரிக்க-யூரேசியா
அமெரிக்காக்கள்
ஆத்திரேலியா (கண்டம்)
ஆப்பிரிக்கா
யூரேசியா
வட அமெரிக்கா
ஓசியானியா
ஐரோப்பா
ஆசியா
தென் அமெரிக்கா
அமாசியா
கோண்டுவானா • இலெமூரியா • பாஞ்சியா


தொகு  

பகுப்புகள்

புவியியல் பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • புவியியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|புவியியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • புவியியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • புவியியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • புவியியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் புவியியல்
விக்கித்திட்டம்
துணைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்


தொகு  

தொடர்பான தலைப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
அறிவியல்அறிவியல்
அறிவியல்
இந்தியாஇந்தியா
இந்தியா
உயிரியல்உயிரியல்
உயிரியல்
சூழலியல்சூழலியல்
சூழலியல்
தமிழ்நாடு அறிவியல் இந்தியா உயிரியல் சூழலியல்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wiki.x.io/w/index.php?title=வலைவாசல்:புவியியல்&oldid=3616194" இலிருந்து மீள்விக்கப்பட்டது