வர்ஜீனியா உலூயிசு திரிம்பிளே
வர்ஜீனியா உலூயிசு திரிம்பிளே (Virginia Louise Trimble) (பிறப்பு: 1943) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியல் வரலாறு, அறிவியல் வரலாறு, பால்வெளிகள், விண்மீன்களின் கட்டமைப்பும் படிமலர்ச்சியும் ஆகிய புலங்களில் சிறப்புத் தகைமை வாய்ந்தவர் ஆவார்.[1]:{{{3}}} இவர் 600 க்கும் மேற்பட்ட வானியற்பியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[2]:{{{3}}}. மேலும், இவர் வானியல், பிற அறிவியல் புலங்களில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். இவர் 1986 இல் தேசிய வானியல் கழக அறிவியல் மீள்பார்வை விருதைப் பெற்றார். இது வானியல் குமுகத்துக்கு பல வானியற்பியல் சார்ந்த சிக்கலான சிக்கல்களை விளக்கிப் பல அறிவார்ந்த, சுருக்கமான மீள்பார்வை எழுத்தால் தகவ்ல் தந்து வளப்படுத்தியதற்காக வழங்கப்பட்டது, இவர் 2001 இல் அமெரிக்க இயற்பியல் ஆசிரியர் கழகத்தின் கிளோப்சுடெகு நினைவு விருதைப் பெற்றார். இவர் 2010 இல் ஜார்ஜ் வான் பீசுபுரோயெக் பரிசைப் பெற்ரார். இது இவருக்கு "தேசிய பன்னாட்டு வானியலாளர் குமுகத்துக்கு ஆற்ரிய மதிப்புமிகு பணிகளுக்காகவும், வானியற்பியலில் அனைத்துப் புலங்களிலும் நிகழ்ந்த முன்னேற்ரங்களை திறம்பட மதிப்பீடுகள் செய்த்தற்காகவும் நிறுவனங்கள், குழுமங்கள், குழுக்கள அறக்கட்டளைகள் ஆகியவற்றில் வானியலுக்காக இவர் வகித்த பாத்திரங்களுக்காகவும் வழங்கப்பட்டது."[3]:{{{3}}} இவர் வானியல், வானியற்பியல் ஆராய்ச்சி மீள்பார்வைக்காகப் பெயர்பெற்றார். இவை பசிபிக் வானியல் கழக வெளியீடுகளில் வந்தன. இவர் வானியற்பியல் கருத்தரங்குகளிலும் சுருக்க உரையைத் தருவார்.[4]:{{{3}}}
வர்ஜீனியா உலூயிசு திரிம்பிளே Virginia Louise Trimble | |
---|---|
![]() வர்ஜீனியா திரிம்பிளே, சேப்ளே-கர்ட்டிசு விவாத 75ஆம் ஆண்டு, ஏப்பிரல், 1995 | |
பிறப்பு | நவம்பர் 15, 1943 |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல், அண்டவியல், வானியல் வரலாறு, அறிவியல் வரலாறு |
கல்வி | கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வானியல் நிறுவனம், கேம்பிரிட்ஜ் |
ஆய்வேடு | நண்டு ஒண்முகில் படல உறைக் கட்டமைப்பும் இயக்கங்களும் (ஆய்வுரை) |
ஆய்வு நெறியாளர் | குவிதோ மூஞ்ச் |
அறியப்படுவது | வானியல், வானியற்பியல் ஆராய்ச்சி. தொலைநோக்கி ஆக்கத்திறன் ஆகியவற்றின் ஆண்டுவாரியான மீள்பார்வை |
தாக்கம் செலுத்தியோர் | யெசீ எல். கிரீன்சுட்டீன், ஜான் ஊர்த், இரிச்சர்டு பீய்ன்மன், ஜேம்சு ஈ. குன், பிரெடு ஆயில், மார்ட்டீன் இரீசு |
விருதுகள் | தேசிய வானியல் கழக அறிவியல் மீள்பார்வை விருது கிளோப்சுடெகு நினைவு விருது ஜார்ஜ் வான் பீசுபுரோயெக் பரிசு வாலன்சியா பல்கலைக்கழக தகைமை முனைவர் பட்டம் |
துணைவர் | ஜோசப் வெபர் |
வாழ்க்கை
தொகுதிரிம்பிளே "வேதியியல் தந்தைக்கும் தாய்க்கும் ஒரே மகளாக வளர்ந்தார். இவர் மொழி வல்லமையோடு வளர்ந்துள்ளார். இவரது வளர்ப்பிடம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் சீருந்தில் செல்லும் தொலைவில் அமைந்திருந்தது."[5]:{{{3}}} இவர் 1962 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தபோது, Life இதழின் கட்டுரைக்கான கருப்பொருளானார். அது இவரை "180 அறிதிறன் உள்ள அழகிய முகம்" எனப் பாராட்டிக் கட்டுரை வெளியிட்டது.[6]:{{{3}}} அடுத்த ஆண்டே இவர், அந்தி வட்டாரம் எனும் தொலைக்காட்சித் தொடரை நடத்த, தேசியப் பரப்புரைப் பயணத்தில் அந்தி வட்டாரப் பெண்ணாகத் தேர்வு பெற்றார். [7]:{{{3}}} இவர் தன் இளங்கலையியல் பட்டத்தை 1964 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார் இவர் 1968 இல் தன் முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து பெற்றார். இவர் காலத்தில் இந்நிறுவனத்தில் விதிவிலக்கான திறமை பெற்றிருந்தால் ஒழிய பெண்களே சேர்க்கப்படுவதில்லை[8]:{{{3}}}. இவர் மட்டுமே இரண்டாம் பெண்ணாக பலோமார் வான்காணகத்தில் சேர்ந்தார்.[9]:{{{3}}}சுமித் கல்லூரியில் ஓராண்டு கல்வி கற்பித்ததும் பின் இரண்டாண்டு கேம்பிரிட்ஜ் கோட்பாட்டு வானியல் துறையில் முதுமுனைவர் ஆய்வு முடித்து, இர்வின் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1971 இல் புல உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் அங்கு இப்போது வனியல் பேராசிரியராக உள்ளார். இவர் 1972 இல் தான் சந்தித்த 11 நாட்களுக்குப் பின்னர்மேரிலாந்து பல்கலைக்கழக பார்க் கல்லூரி பேராசிரியராக இருந்த ஜோசப் வெபரை மணந்தார். இவர் ஈர்ப்பலை இயற்பியலில் வல்லுனர் ஆவார். அதிலிருந்து அவர் 2000 இல் இறக்கும் வரை, தன் அரைக்கல்வியாண்டை வருகைதரு பேராசிரியராக மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளார்.[10]:{{{3}}} இவர்பன்னாட்டு வானியல் ஒன்றிய செயற்குழுவின் துணைத்தலைவராக 1994 முதல் 2000 வரை இருந்துள்ளார்.[11]:{{{3}}} இவர் 1997 முதல் 2000 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.[12]:{{{3}}}
தகைமைகள்
தொகு- வானியலாளர்களாகிய எலினார் எப். கெலின், சுசெல்தே புசு ஆகிய இருவரும் இணைந்து 1978 இல் கண்டுபிடித்த முதன்மைப்பட்டை சிறுகோள் 9271 திரிம்பிளே இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1] அலுவலக முறையில் பெயரீட்டு மேற்கோள் சிறுகோள் மையத்தால் 2018 ஜனவரி 31 இல் சிறுகோள் சுற்றறிக்கைவழி வெளியிடப்பட்டது (சி.கோ.சு. 108696).[13]
தேர்ந்தெடுத்த பணிகள்
தொகு- Trimble, Virginia (1992). Visit to Small Universe. Masters of Modern Physics. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780883187920.
- Trimble, Virginia (1987). "Existence and nature of dark matter in the universe". Annual Review of Astronomy and Astrophysics 25: 425–472. doi:10.1146/annurev.aa.25.090187.002233. Bibcode: 1987ARA&A..25..425T. https://archive.org/details/sim_annual-review-of-astronomy-and-astrophysics_1987_25/page/425.
- Hansen, Carl J.; Kwaler, Steven D.; Trimble, Virginia (2012). Stellar Interiors: Physical Principles, Structure, and Evolution (2 ed.). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781441991102.
- Trimble, Virginia (1975). "The origin and abundances of the chemical elements". Reviews of Modern Physics 47: 877. doi:10.1103/RevModPhys.47.877. Bibcode: 1975RvMP...47..877T.
- வார்ப்புரு:Cite dissertation
- Virginia Trimble; Thomas R. Williams; Katherine Bracher; Richard Jarrell; Jordan D. Marché; F. Jamil Ragep, eds. (2009). Biographical Encyclopedia of Astronomers. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387351339.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "9271 Trimble (1978 VT8)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
- ↑ "Valencia Honorary Doctorate Biography".
- ↑ "George Van Biesbroeck Prize".
- ↑ "UCI Observatory profile".
- ↑ Trimble, Virginia (1992). Visit to Small Universe. Masters of Modern Physics. Springer Science & Business Media. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780883187920.
- ↑ "Behind a Lovely Face, a 180 I.Q.". Life: pp. 98–99. 1962-10-19. https://books.google.com/books?id=fFUEAAAAMBAJ&lpg=PA95&pg=PA98#v=onepage&f=true. பார்த்த நாள்: February 21, 2013.
- ↑ "The Twilight Zone: Princess Twilight".
- ↑ Virginia L. Trimble (1996-09-02). "Affirmative Action And Women In Science: Post Hoc, Ergo Propter Hoc?". The Scientist. http://www.the-scientist.com/?articles.view/articleNo/18033/title/Affirmative-Action-And-Women-In-Science--Post-Hoc--Ergo-Propter-Hoc-/.
- ↑ "World's Best Telescopes: Interview with Virginia Trimble". The Science Show. 2000-07-08. http://www.abc.net.au/radionational/programs/scienceshow/worlds-best-telescopes/3469180.
- ↑ "Valencia Honorary Doctorate Acceptance Speech".
- ↑ "IAU Directory Page".
- ↑ "AAS Past Officers". Archived from the original on 2017-07-05. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.