வராக சம்ஹார மூர்த்தி
சொல்லிலக்கணம்தொகுவேறு பெயர்கள்தொகுஏனமடுத்தான் தோற்றம்தொகுதிருமாலின் வராக அவதாரத்தை சூலத்தினால் குத்தி ககொல்வதே வராக சம்ஹார மூர்த்தியின் வடிவாகும். உருவக் காரணம்தொகுபிரம்மனிடம் அழியா வரம் பெற்ற இரணியாக்கன் எனும் அசூரன் உலகை பாய் போல சுருட்டி கர்ப்போதக கடலுக்குள் சென்று ஒளித்து வைத்தான். இதை பார்த்த விஷ்ணு உடனேயே வராக அவதாரம் எடுத்து அவனை கொன்று உலகை மீட்டார். அதன் பின் கர்வம் கொண்டு எதிர்வந்த உயிர்கள் அனைத்தையும் வதைத்து உண்ண ஆரமித்தார். தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் மன்றாட, அவர்களுக்கு உதவும் பொருட்டு வேடனாக வடிவெடுத்தார் சிவன். வராகத்தினை சூலத்தினால் குத்தி அதை கொலை செய்தார், அதன் இரு கொம்பினை உடைத்து ஏரிந்தார். அந்த இரு கொம்புகளை தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார். அதனால் அந்த வராக வடிவ விஷ்ணு சிவனால் கொல்லப்பட்டார் மற்றும் உயிர்த்தெழுக்க பட்டார். இந்த விஷ்ணுவின் வராக அவதாரத்தை கொன்ற சிவனின் திருவுருவக் கோலம் தான் வராக சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது. கோயில்கள்தொகுஇலக்கியங்களில்தொகுகாட்டுப்பன்றியமை கொன்று அதின் கொம்புகளை உடைத்து கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே என திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.[2] கர்வம் கொண்ட வராகம் பல்வேறு உயிர்களை கொன்றமையால், தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் சென்று அந்த வராகத்தினை கொல்ல வேண்டினர். சிவன் முருகனிடம் அந்த வராகத்தினை கொன்று அதின் இரு கொம்பினையும் உடைத்து வரும்படி கூற, முருகன் அந்த வராகத்தினை கொன்று அதின் இரு கொம்பினையும் உடைத்து வந்தார். அதனை சிவன் தன் கழுத்தில் இருந்த மாலையில் அணிந்து கொண்டார் என்றொரு புராணத்தினை திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். அந்த வராகத்தினை கொன்று அதின் இரு கொம்பினையும் அணிந்த சிவனின் வடிவத்தினை தமிழகத்தில் மக்கள் வராக சம்ஹார மூர்த்தி என்று போற்றியுள்ளனர். இந்த புராணம் வராகத்தினை சிவன் கொன்றமை குறித்த தொன்மக் கதையிலிருந்து மாறுபட்டதாக உள்ளது. மேலும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு
|