வத்செத்
(வத்செட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வத்செத் என்பவர் பண்டைய எகிப்திய சமயத்தின் ஒரு பெண் கடவுள் ஆவார்.[1]இவர் கீழ் எகிப்தின் கடவுள் மற்றும் பாதுகாவலராக கூறப்படுகிறார். சூரிய தகடான யுரயசுவில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட சின்னத்தை கீழ் எகிப்திய பார்வோன்கள் அணிந்து வந்தனர். நிலத்தின் கடவுளாக கூறப்படும் வத்செட் எகிப்திய இராசநாகத்தை தலையாக கொண்டுள்ளார். இவர் இராவின் கண் மற்றும் ஓரசு கடவுளின் கண் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறார். வத்செத் கடவுளும் மேல் எகிப்தின் கடவுளான நெக்பெத்தும் இரு பெண்கள் என அழைக்கப்படுகின்றனர்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/a/a2/Part_of_a_menat_of_Harsiesi%2C_high_priest_of_Amun_of_Thebes%2C_circa_870_BC%2C_22nd_Dynasty%2C_gold%2C_silver_and_copper_inlays%2C_from_Thebes%2C_Egypt%2C_%C3%84M_23733%2C_in_the_%C3%84gyptisches_Museum_Berlin.jpg/300px-thumbnail.jpg)