வடமதுரை
வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தொகுவடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[2] இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது.
அரசியல்
தொகுஇப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக திருமதி. நிருபாராணி கணேசன் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Vadamadurai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் சனவரி 30, 2007.
- ↑ Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
- ↑ வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்