ரியாசி தொடருந்து நிலையம்
ரியாசி தொடருந்து நிலையம் நிலையக் குறியீடு: REAI) (Reasi railway station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ரியாசி மாவட்டத்தின் தலைமையிட நகரமாக ரியாசி நகரத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து 807.295|m|ft}} உயரத்தில் அமைந்த ரியாசி தொடருந்து நிலையம் 2 நடைமேடைகள் கொண்டுள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்த இந்நிலையம் ஜம்மு தாவி தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 73.6 கிலோ மீட்டர் தொலைவிலும், :ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 29.1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
ரியாசி தொடருந்து நிலையம் | ||
---|---|---|
இந்திய இரயில்வே | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | ரியாசி, ரியாசி மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) இந்தியா | |
ஏற்றம் | 807.295 மீட்டர்கள் (2,648.61 அடி) | |
உரிமம் | இந்திய இரயில்வே | |
இயக்குபவர் | வடக்கு ரயில்வே மண்டலம் | |
தடங்கள் | ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 3 | |
கட்டமைப்பு | ||
கட்டமைப்பு வகை | Standard (on-ground station) | |
தரிப்பிடம் | ஆம் | |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | |
மற்ற தகவல்கள் | ||
நிலை | பயன்பாட்டில் | |
நிலையக் குறியீடு | REAI | |
மண்டலம்(கள்) | வடக்கு ரயில்வே மண்டலம் | |
கோட்டம்(கள்) | ஃபிரோஸ்பூர் | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 2024 | |
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
அருகமைந்த நிலையம்:ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம் |
தொடருந்து சேவைகள்
தொகுரியாசி தொடருந்து நிலையத்திலிருந்து உதம்பூர் தொடருந்து நிலையம், ஜம்மு தாவி தொடருந்து நிலையம், கட்ரா தொடர்ந்து நிலையங்களுக்கு தினசரி பயணியர் மற்றும் விரைவு வண்டிச் சேவைகள் உள்ளது.[1]