ராமன் பரசுராமன்

ராமன் பரசுராமன் (Raman Parasuraman) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். எம்.எசு. கோபிநாத் இயக்கினார். சிவகுமார், லதா, ரதி, சத்யராஜ், பண்டரி பாய் ஆகியோர் நடித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[1]

ராமன் பரசுராமன்
இயக்கம்எம். எஸ். கோபிநாத்
தயாரிப்புபி. புவனேசுவர்
சுரேசு ஃபைன் ஆர்ட்சு
இசைசத்யம்
நடிப்புசிவகுமார்
லதா
ரதி
வெளியீடுசெப்டம்பர் 19, 1980
நீளம்3882 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மூன்று பழங்கால சிலை கடத்தல்காரர்கள் ஒரு கணவன் மற்றும் மனைவியைக் கொன்று, அவர்களின் இரண்டு மகன்களை அனாதைகளாக விடுகிறார்கள். சகோதரர்கள் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பரசுராமன் என்ற பெரியவன் தன் பெற்றோரைக் கொன்ற மூவரையும் பழிவாங்க வேண்டும் என்ற தீவிர வெறியுடன் சட்ட விரோதியாக வளரும்போது, ​​இளைய ராம் என்ற மருத்துவர் மருத்துவராகிறார். பரசுராமன் அந்த மூவரையும் வெளிநாட்டில் தேடிச் சென்று அனைவரையும் கொன்று விடுகிறான். இறுதியில் சகோதரர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

ராமன் பரசுராமன் சிங்கப்பூர், சப்பான், ஆங்காங்கு மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது.[2][3] ஏ.ஆர். சீனிவாசன் மூன்று எதிரிகளில் ஒருவராக நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் படம் கிட்டத்தட்ட முடிந்த போதிலும் அசல் நடிகர் பின்வாங்கினார்.[4]

பாடல்கள்

தொகு

சத்யம் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[5][6]

விமர்சனம்

தொகு

படத்தின் இசை, ஒளிப்பதிவைப் பாராட்டிய கல்கி இதழ் படத்தில் நகைச்சுவையின் பற்றாக்குறை இருந்ததை சுட்டிக்காட்டியது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Raman Parasuraman (1980)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 8 October 2021.
  2. "திரைப்படச் சோலை 29: ராமன் பரசுராமன்" (in ta). இந்து தமிழ் திசை. 7 May 2021 இம் மூலத்தில் இருந்து 2 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210602213818/https://www.hindutamil.in/news/blogs/668029-thiraippada-solai.html. 
  3. "சிவகுமார் கார் மீது லதா மண்வீச்சு" (in ta). Anna: pp. 4. 11 November 1979. https://eap.bl.uk/archive-file/EAP372-6-23-4-26. 
  4. Venkatramanan, Geetha (29 March 2012). "Drama with dignity". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210122002729/https://www.thehindu.com/features/friday-review/theatre/drama-with-dignity/article3257906.ece. 
  5. "Raman Parasu Raman Tamil Film EP Vinyl Record by Sathyam". Mossymart. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 17 October 2022.
  6. "Raman Parasu Raman". JioSaavn. 31 May 1980. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 17 October 2022.
  7. "ராமன் பரசுராமன்". Kalki. 19 October 1980. p. 46. Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 20 March 2024 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=ராமன்_பரசுராமன்&oldid=4188558" இலிருந்து மீள்விக்கப்பட்டது