யூக்கான் பன்னாட்டு கதைகூறல் விழா

யூக்கான் பன்னாட்டு கதை கூறல் விழா (Yukon International Storytelling Festival) என்பது ஒவ்வொரு கோடைகாலத்திலும் யூக்கானின் வைட்ஹார்ஸில் பொதுவாக திறந்தவெளிச் சூழலில் நடத்தப்பட்ட ஒரு கதை கூறல் விழாவாகும். லூயிஸ் ப்ராஃபீட்-லெப்லாங்க் மற்றும் ஆன் டெய்லர் ஆகியோர் இக்கதை கூறல் விழாவின் இணை நிறுவனர்கள் ஆவர்.[1] வடக்கு டச்சோன் தேசத்தைச் சேர்ந்த ப்ராஃபீட்-லெப்லாங்க், யூக்கானின் கடைசி டாகிஷ் வம்சத்தில் ஒருவரான ஏஞ்சலா சிட்னியின் (1902 – 1991) மருமகள் ஆவார். தெற்கு யூக்கானின் டாகிஷ் மக்களின் கதைகளைப் பாதுகாப்பதற்காக சிட்னி தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார், [2] 1984 ஆம் ஆண்டில் சிட்னி தனது மக்களின் கதைகளை உலக அளவிலான பார்வையாளர்களுக்குப் பரப்புவதற்காக டொராண்டோ கதை சொல்லும் விழாவிற்குப் பயணிக்க வேண்டியிருந்தது என்பதை உணர்ந்தபோது, யூக்கான் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான உள்ளூரில் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க ப்ரோஃபீட்-லெப்லாங்க் மற்றும் டெய்லர் ஆகியோருக்கு உந்துதல் ஏற்பட்டது. [1] 1987 ஆம் ஆண்டில் ஆர்வமுள்ள தரப்பினர் ஒன்று கூடி 1988 ஆம் ஆண்டில் முதல் யூக்கான் கதைகூறல் விழாவைத் திட்டமிட்டனர். பின்னர் இது யூக்கான் மற்றும் கனடாவின் எல்லைக்கு அப்பாலும் வளர்ந்து, பூர்வீக மக்களின் கதைகூறல், துருவங்களைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகம் முழுவதிலுமிருந்து கதைசொல்லிகளை ஈர்த்தது.

வரலாறு

தொகு

1984 ஆம் ஆண்டு, டொராண்டோ கதைசொல்லல் விழாவில் ஏஞ்சலா சிட்னி தனது கதைகளைப் பகிர்ந்து கொண்டார். இவரால் ஈர்க்கப்பட்ட கதைசொல்லிகள் 1988 ஆம் ஆண்டு யூக்கான் பன்னாட்டு கதைகூறல் விழாவை உருவாக்க கூட்டு முயற்சியெடுத்தனர். [3]

முதல் பதின்ம ஆண்டுகள்

1988 ஆம் ஆண்டு நடந்த இந்த விழாவின் முதல் பதிப்பு 4 கண்டங்கள் மற்றும் 23 மொழிகளைச் சேர்ந்த (16 தாய்மொழிகள் உட்பட) கதைசொல்லிகளை முன்மொழிந்தது. 1989 ஆம் ஆண்டில் விழா களை கட்டியது. அதிக அளவிலான பள்ளி மாணவர்களின் வருகையை ஊக்குவித்தது. ஜெர்ரி ஆல்ஃபிரட் போன்றோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 1990 ஆம் ஆண்டில் இவ்விழா மேலும் வளர்ச்சி பெற்றது. 1991 ஆம் ஆண்டில் இந்த விழா ஒரு தேசிய விழா மதிப்பாய்வாளரால் புகழ் பெற்று இவ்விழா "யூக்கான் பன்னாட்டு கதைகூறல் விழா" என்று பெயரைப் பெற்றது. இந்த விழாவை உருவாக்க உத்வேகம் அளித்த டாகிஷ் பெண்மணி ஏஞ்சலா சிட்னி இறந்தார். 1992 ஆம் ஆண்டு நடக்கவிருந்த இவ்விழாவிற்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்ட உருசிய விருந்தினர்களின் காரணமாக அரசியல்ரீதியான சிக்கல்களைச் சந்தித்தது. 1993 ஆம் ஆண்டு இவ்விழாவிற்கு அதிக பார்வையாளர்கள் வரப்பெற்றதால் சாதனை வருகை மற்றும் மிக அதிகமான வசூல் விற்பனையைக் கண்டது. 1994 ஆம் ஆண்டு ஒரு புயல் காரணமாக இவ்விழா கடுமையான நிதி இழப்பைச் சந்தித்தது, புயல் விழாக் கூடாரங்களை கிட்டத்தட்ட அழித்துவிட்டது, இதனால் விழா வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 1995 ஆம் ஆண்டில், கடந்த கால நிதி இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு விழா சிக்கனமான முறையில் நடத்தப்பட்டது, மேலும் முதல் முறையாக உபரித் தொகையை உருவாக்கியது. 1996 ஆம் ஆண்டில் விழா மீண்டும் ஒருமுறை நல்ல வளர்ச்சி பெற்று அதன் இரண்டாவது சிறந்த வருகையைக் கண்டது. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற 10வது ஆண்டு விழா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருகையைப் பெற்றது, இறுதியாக கனடா குழுமத்திடமிருந்து விழாவிற்கான ஆர்வத்தை ஈர்க்கத் தொடங்கியது.

இரண்டாம் பத்தாண்டுகள்.

1998 ஆம் நடந்த இந்நிகழ்வு இதர உள்ளூர் நிகழ்வுகளின் போட்டி காரணமாக வருகை இழப்பை உணர்ந்தது. 1999 ஆம் ஆண்டில் இது ஒரு புதிய வெற்றிகரமான "குளிர்கால சுற்றுப்பயணத்தை" முன்மொழிந்தது, இறுதியாக கனடா குழுமத்தின் ஆதரவைப் பெற்றது. 2000 ஆம் ஆண்டு இந்நிகழ்வு சூன் மாதத்தில் நடைபெற்றது. அப்போது சிறந்த வானிலை இருந்தது. 2001 ஆம் ஆண்டு, விழா பிரபலமடைவதற்கு மழை தடையாக இருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டில் இந்த விழா அதிக அரசியல் ஆதரவைப் பெற்றதுடன் ஒரு புதிய ஆற்றல்மிக்க தலைவருடன் புதிய அலுவலகங்களுக்கு நகர்ந்தது. 2003 ஆண்டில் இந்நிகழ்வில் வெற்றிகரமான துருவப்பகுதிகளைச் சுற்றியுள்ள நாட்டினருக்கான விருந்து, பிற பட்டறைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றுடன் நாள் முழுவதும் நடைபெற்றன. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பல காட்டுத் தீ நிகழ்வுகள் காரணமாக விழாவிற்கு ஒரு தனித்துவமான சூழ்நிலையை உருவாக்கியது, ஒன்றாரியோவைச் சேர்ந்த ரெட் ஸ்கை குழுவின் கதைகூறல் சிறப்பம்சமாக இருந்தது. 2005 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விழாவில் பல்வேறு செயல்பாடுகளுடன் 12 கூடாரங்கள் இருந்தன. ஜப்பானிய டிரம்மிங் குழுமம் உசூம் டைகோ, பிரேசிலிய தற்காப்புக் கலை கபோயிரா மற்றும் ராபர்ட் பிளை ஆகியோர் குறிப்பிடத்தக்க கலைஞர்களாக அலலது கலைக்குழுக்களாக இருந்தனர். 2006 ஆம் ஆண்டு, மாக்பேப் இன்டர்நேஷனல் பிரிகேடுகளின் மூத்த வீரர் ஜூல்ஸ் பைவியோ ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரை நினைவுகூர்வதில் தனித்துவம் மிக்கவராக இருந்தார்.

"ஹார்வெஸ்ட் ஃபேர்" உடனான கூட்டாண்மையும், மங்கோலிய யூர்ட்டுகளும் வசதியான, சூடான மற்றும் நெருக்கமான கதை சொல்லும் அரங்கங்களை வழங்கின. 20வது ஆண்டு விழா முதன்முறையாக ஆகத்து மாதத்தில் யூக்கான் கலை மையத்தில் உள்ளரங்கில் நடைபெற்றது. சிறப்புக் கலைஞர்களாக பாரம்பரிய மேள இசையும் குரலிசைப் பாடலும் கொண்ட இனுயிட் வழங்கலான சன்ஸ்ட்ரம், அகேடியன் பாரம்பரியக் கதை சொல்லியும் பாடகி/பாடலாசிரியருமான ஜீன் டூசெட் கரி, டொரண்டோ கதைகூறல் விழாவின் நிறுவனர் டான் யாஷின்ஸ்கி மற்றும் விழாவின் நிறுவனரின் மகளான இடா கால்மேக்னே (டாகிஷ், யூகான்) ஆகியோர் இருந்தனர்.

இந்தக் கதைகூறல் விழா தற்போதைய நிலையில் காலவரையறையற்ற அளவில் நிறுத்தப்பட்டுள்ளது.[4]

வழக்கமான உள்ளூர் கதை சொல்லிகள்

தொகு

ஜெர்ரி ஆல்ஃபிரெட் - மைக்கேல் எம்சுலி - ஆன்-லூயிசு ஜெனஸ்டு-பேக்வுட்சு பென்னி ஆகியோர் வழக்கமான உள்ளூர் கதைசொல்லிகளாகத் திகழ்கின்றனர்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Petten 2003, ப. 34.
  2. Chrapko 2011.
  3. "History". storytelling.yk.net. Archived from the original on 5 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
  4. Storytellers of Canada. "Canadian Festivals". பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.

மேற்கோள்கள்

தொகு