மோசிக்கரையனார்
மோசிக்கரையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 260.
மோசிக்கரை என்பது ஓர் ஊர். பாடலைப் பார்க்கும்போது அது கடலின் ஓரத்தில் இருந்ததை உணரமுடிகிறது.
பாடல் சொல்லும் செய்தி
தொகு- நெய்தல் திணை
- எற்பாடு பொழுது நெய்தல் திணைக்கு உரியது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள பாடல் இது. எற்பாடு = பகல் 2 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலம்.
தோழி சொல்லத் தொடங்குகிறாள். தலைவி தொடர்கிறள். அவன் 'அன்பிலாளன்' (அன்பு இல்லாதவன்). அவனை என் அறிவு விரும்புகிறது. எற்பாடு பொழுது முடிந்து அரைநாள் வரப்போகிறது.
எற்பாடு பொழுதில் நிகழ்வன
தொகுமண்டிலம் - பொழுதின் வெயில் தணியும்.
மாலை - மாலைப்பொழுது தன் நிறத்தைக் காட்டும்.
வண்டினம் - வண்டினம் மலரில் உண்ணும்.
குருகி இனம் - கண்டல் மரத்திற்கு வந்து ஒலிக்கும்.
திமில் - மீன் மிடிக்கச் செல்லும் திமில் கரைக்கு வந்துவிட்டதால் கடல்பாட்டு அவிந்துகொண்டிருக்கும்.
செக்கர் - வானம் செவ்வானமாக மாறும்.
அன்றில் - அன்றில் மணல்மேட்டுப் பனைமடலுக்குச் செல்லும்.
கழிமலர் - உப்பங்கழியில் பூக்கும் பூக்கள் முகத்தை மூடிக் கூம்பும்.
புன்னை - வீட்டுமனையில் வளர்க்கப்பட்ட புன்னை பூத்துப் புதுமணம் வீசும்.
- இப்படி எற்பாடு முடிந்து மாலைக்காலம் வருகிறதே. என்ன செய்வேன்? என்கிறாள் தலைவி.