மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
திருத்தந்தை மூன்றாம் ஸ்தேவான் (720 – ஜனவரி 24, 772) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக ஆகஸ்ட் 1 (அல்லது 7), 768 முதல் ஜனவரி 24, 772 வரை இருந்தவர். வரலாற்றில் 94ஆம் திருத்தந்தையாக எண்ணப்படும் இவர் சிசிலியில் பிறந்தவர்.
மூன்றாம் ஸ்தேவான் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | ஆகஸ்ட் 7, 768 |
ஆட்சி முடிவு | ஜனவரி 24, 772 |
முன்னிருந்தவர் | முதலாம் பவுல் |
பின்வந்தவர் | முதலாம் ஹேட்ரியன் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | 720 சிசிலி, இத்தாலி |
இறப்பு | ? | சனவரி 24, 772
ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
மூன்றாம் கிரகோரியின் ஆட்சியில் உரோமைக்கு வந்த இவர், படிப்படியாக திருத்தந்தையின் பணியாளர்களுள் உயர் பதவியை அடைந்தார்.
எதிர்-திருத்தந்தையர்கள் இரண்டாம் கான்ஸ்டண்டைன் (Antipope Constantine II) மற்றும் பிலிப்பு (Antipope Philip) ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டபின், இவர் திருத்தந்தையாக தேர்வானார். இத்தேர்வை செய்த சங்கத்தின் போது (ஏப்ரல் 769) திருத்தந்தைத் தேர்வுக்கான புதிய நெறி முறைகள் வழங்கப்பட்டு, வெளியிடத் தலையீட்டைத் தவிர்க்க ஒழுங்குகள் வகுக்கப்பட்டன. மேலும், புனிதர்களின் திருவுருவங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையானதே என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. (காண்க: iconoclasm)
ஃபிராங்க்கியர்(Franks) என்னும் இனத்தாரைவிட இவர் லோம்பார்தியர்(Lombards) என்னும் இனத்தாருக்கே கூடுதல் ஆதரவு அளித்தார் என்பர்.
வெளி இணைப்புகள்
தொகு- "Pope Stephen (III) IV". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913).
- 1911 Encyclopædia Britannica/Stephen (Popes)