மு. உரூபகலா
மு. உரூபாகலா (M. Roopakala)(பிறப்பு 20 சூன் 1979) கருநாடகாவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கருநாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] இவர் பாஜகவின் அசுவினி சம்பங்கியை 50,467 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சனவரி 2024-இல், இவர் கருநாடக கைவினைத் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3]
இளமை
தொகுஉரூபாகலா, ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. எச். முனியப்பாவின் மகள் ஆவார்.[4] இவர் 2016ஆம் ஆண்டு கருநாடக மாநில திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். இவரது கணவர் சசிதர் கருநாடக சட்டமன்ற செயலகத்தில் இயக்குநராக பணிபுரிகிறார்.[5]
இவரது தந்தை முனியப்பா, தனது மகள் உரூபாகலாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டால், 2024 மக்களவைத் தேர்தலில் கோலாரில் போட்டியிலிருந்து விலக ஒப்புக்கொண்டார்.[6]
சர்ச்சை
தொகுசூன் 2023-இல், பெண்களுக்கு இலவச பயணத்திற்கான அரசாங்க சக்தி திட்டத்தைத் தொடங்கி வைத்து, சிறிது தூரம் பேருந்தை ஓட்டினார் உருப்காலா.[7] இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைப் பேருந்தை இயக்க அனுமதித்ததற்காக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கருநாடக சாலைப் போக்குவரத்துக் கழக கோலார் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.[8] சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இவர் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனக்கு உள்ளதாக அறிவித்தார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka Assembly Election Results 2023: Full list of winners - India Today". 2023-05-14. Archived from the original on 14 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
- ↑ "Roopakala M". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
- ↑ "To placate, keep dissent in check, Congress govt in Karnataka appoints board, corporation chiefs". The Indian Express (in ஆங்கிலம்). 2024-01-27. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
- ↑ "Karnataka assembly elections 2023 results: Amid twists & turns, families taste victory". The Times of India. 2023-05-14. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/karnataka-assembly-elections-2023-results-amid-twists-turns-families-taste-victory/articleshow/100220311.cms.
- ↑ "Husband alleges bid to harmKGF MLA's poll prospects". The Times of India. 2023-05-02. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/husband-alleges-bid-to-harmkgf-mlas-poll-prospects/articleshow/99920884.cms.
- ↑ DHNS. "K H Muniyappa among 3 ministers in Congress ticket shortlist". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
- ↑ DHNS. "MLA Roopakala drives bus in KGF". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
- ↑ Goudar, Mahesh M. (2023-06-13). "KGF MLA Roopakala draws criticism for driving KSRTC bus during launch of Shakti scheme". The South First (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
- ↑ "Roopakala M(Indian National Congress(INC)):Constituency- KOLAR GOLD FIELD(KOLAR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.