மழபுல வஞ்சி
தமிழ் இலக்கணத்தில் மழபுல வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் வேந்தர், தாம் வெற்றி பெறும்போது தோல்வியுற்ற நாட்டின் செல்வங்களைக் கொள்ளை கொள்வர். இதனைப் பொருளாகக் கொண்டதே "மழபுல வஞ்சி" எனும் இத்துறை.
விளக்கப் பாடல்கள்
தொகுஇதனை விளக்க, பகைவருடைய நாட்டை வென்ற வீரர் கொள்ளையிட்டு அவர்களது இல்லங்களில் வளம் இல்லை எனும்படி செய்வது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- கூடார்முனை கொள்ளைசாற்றி"
- வீடுஅறக்கவர்ந்த வினைமொழிந்தன்று
இதனை விளக்கும் இலக்கணப் பாடல்
- களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
- வளமனை பாழாக வாரிக் - கொளல்மலிந்து
- கண்ஆர் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
- நண்ணார் கிளைஅலற நாடு (புறப்பொருள் வெண்பாமாலை 47)
இதனை விளக்கும் புறநானூற்று இலக்கியப் பாடல்கள் மூன்று. [2]
- பகைவர் ஊரைச் சுடும் விளக்கொளியில் அந்நாட்டு மக்கள் அழும் ஒலியைக் கேட்க விரும்புபவன் கரிகாலன். [3]
- பகன்றையும் பாகலும் படர்ந்த கரும்பு வயலில் தீ மூட்டினான் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. [4]
- நீர்த்திவலைகளைக் காய்ச்சிய இரும்பு உரிஞ்சிக்கொள்வது போல் கானப்பேரெயில் கோட்டையைக் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிக்கொண்டான். [5]
மேலும் காண்க
தொகுகுறிப்பு
தொகுஉசாத்துணைகள்
தொகு- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.