மலாயா வங்கிக் கோபுரம்
மே பேங்க் கோபுரம் அல்லது மலாயா வங்கிக் கோபுரம் (ஆங்கிலம்: Maybank Tower; மலாய்: Menara Maybank) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள முதன்மையான வானளாவியும்; அடையாள இடமும் ஆகும்.[1][2]
மே பேங்க் கோபுரம் Maybank Tower Menara Maybank | |
---|---|
![]() | |
![]() | |
மாற்றுப் பெயர்கள் | மெனாரா மே பேங்க், மே பேங்க் தலைமை அலுவலகம் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவடைந்தது |
வகை | வணிக அலுவலகங்கள் |
இடம் | 100 துன் பேராக் சாலை, புடு, கோலாலம்பூர், மலேசியா |
கட்டுமான ஆரம்பம் | 1984 |
நிறைவுற்றது | 1987 |
உயரம் | |
கூரை | 243.54 m (799.0 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 50 |
தளப்பரப்பு | 167,300 m2 (1,801,000 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | இசாசு கசுத்தூரி அசோசியேட்சு தாய்செய் கட்டுமான நிறுவனம். |
பழைய கோலாலம்பூர் மாநகர மையத்தின் கிழக்கு எல்லையில் புடுராயா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
இந்தக் கட்டிடம் மலாயா வங்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மே பேங்க் நாணயவியல் அருங்காட்சியகமும் இடம் பெற்றுள்ளது.
வரலாறு
தொகுஅறமன்றக் குன்றில் குடியேற்றக் காலத்து அமர்வு நீதிமன்றங்கள் இருந்த இடத்தில் 1984-இல். மே பேங்க் கோபுரம் கட்டத் தொடங்கப்பட்டது; 1987-இல் கட்டுமானம் நிறைவுற்றது.
1995-இல் பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்படும்வரை, இதுவே கோலாலம்பூரிலும் மலேசியாவிலும் மிக உயரமானக் கட்டிடமாக இருந்தது. இதன் உயரம் பெட்ரோனாஸ் கோபுரங்களின் பாதியாக, 244 m (801 அடி) உள்ளது.
கோலாலம்பூர் மாநகரத்தின் வான் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக இந்தக் கோபுரம் விளங்குகின்றது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Kramer, Greg (2000). SimCity 3000 Prima Official Strategy Guide (in ஆங்கிலம்). Roseville, CA: Prima Games. pp. 532. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761529845.
- ↑ "Jadyn's Tower". The Buildings of SIMCITY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-21.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Maybank Tower (Kuala Lumpur) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Dupré, Judith (1996). Skyscrapers. New York: Black Dog & Loventhal. pp. 96–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-884822-45-2.
- Dupré, Judith (2008). Skyscrapers (2nd ed.). New York: Black Dog & Leventhal. pp. 100–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57912-787-8.