மருந்தியக்கத் தாக்கவியல்
மருந்தியக்கத் தாக்கவியல் என்பது மருந்து செலுத்தப்பட்ட ஒரு உடலானது அம்மருந்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வு ஆகும். மருந்தியக்கவியல் என்பது ஒரு மருந்து ஒரு உயிரினத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும். இரண்டும் சேர்ந்து, மருந்தின் அளவு, நன்மை மற்றும் பாதகமான விளைவுகளை நிர்ணயிக்கின்றன. சில நேரங்களில் மருந்தியக்கவியலை பி. டி. (PD) என்றும் மருந்தியக்கத் தாக்கவியலை பி. கே. (PK) என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.[1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/f6/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.png/399px-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.png)
மருந்தியக்கத் தாக்கவியல் (Pharmacokinetics) என்பது பண்டைய கிரேக்க சொற்களான ”பார்மகான்” (மருந்து) மற்றும் ”கைனடிகோஸ்” (நகர்தல்) என்பவற்றில் இருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும். [1] இச்சொல்லை முதன்முதலில் 1953ம் ஆண்டு ஜெர்மானிய குழந்தைமருத்துவரான டோஸ்ட் என்பவர் தமது நூலில் பயன்படுத்தினார் எனினும் இச்சொல் அவரது காலத்திற்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. [2] [3]
படிநிலைகள்
தொகுஒரு உயிரினத்தின் உடலில் மருந்து செலுத்தப்பட்ட பின் ஏற்படும் பல கட்ட நிகழ்வுகள் ADME (அல்லது LADME) என்றழைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு,
- விடுபடுதல் (Liberation) -மருந்தில் உள்ள மூலப்பொருள் மருந்தின் மூல உருவாக்கத்திலிருந்து பிரியும் செயல்.[4][5]
- உறிஞ்சுதல் (Absorbtion)-மருந்து அதன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து உடலின் தொகுதிச்சுற்றோட்டத்தினுள் நுழையும் செயல்.
- பகிர்மானம் (Distribution)-உடலின் திரவங்கள் மற்றும் திசுக்கள் முழுவதும் மருந்து மூலப்பொருட்களின் பரவல்.
- வளர்சிதை மாற்றம் (Metabolism)- மருந்துகளால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மருந்துகள் வளர்சிதைப்பொருட்களாக முறிவு அடைதல்
- கழிவுநீக்கம் (Excretion)-உடலில் இருந்து மருந்துப்பொருள் அல்லது வளர்சிதைப்பொருட்களை அகற்றுதல். அரிதான சந்தர்ப்பங்களில், சில மருந்துகள் மீளமுடியாத வகையில் உடல் திசுக்களில் குவிந்து விடுகின்றன. [6]
சில பாடப்புத்தகங்கள் முதல் இரண்டு கட்டங்களை சேர்த்துக் குறிப்பிடுகின்றன, ஏனெனில் மருந்து பல்வேறு நேரங்களில் செயல்படும் வடிவத்தில் அளிக்கப்படும், இதன் பொருட்டு விடுபடுதல் (liberation) கட்டம் இருக்காது. மற்ற சில புத்தகங்கள் பகிர்மானம் (distribution), வளர்சிதைமாற்றம் (metabolism), மற்றும் கழிவுநீக்கம் (excretion) ஆகியவற்றை இணைத்து "விநியோக கட்டம்" (disposition phase) என்று குறிப்பிடுகின்றன. சில ஆசிரியர்கள் மருந்தின் நச்சுப் பக்கவிளைவுகளை (toxicological aspect) சேர்த்து, ADME-Tox அல்லது ADMET என்று குறிப்பிடுகின்றனர். வளர்சிதைமாற்றம் (metabolism) மற்றும் வெளியேற்றம் (excretion) ஆகிய இரு கட்டங்களையும் சேர்த்து "நீக்கம்" (elimination) கட்டமாகக் குறிப்பிடப்படுகின்றனர். [7] [8] [9]
மருந்து இருப்புநிலை
தொகுமருந்து இருப்பு நிலை என்பது மருந்து உடலில் செலுத்தப்பட்ட பின் உடலின் தொகுதிச் சுற்றோட்டத்தினை அடையும் மருந்தின் அளவாகும். நடைமுறையில், சிரைவழி சிகிச்சை மூலம் செலுத்தப்படும் போது மருந்தின் அதிகபட்ச மருந்து இருப்பு நிலை எட்டப்படுகிறது. இது மருந்து இருப்பு நிலை அளவு 1 (அல்லது 100%) என குறிக்கப்படுகிறது. பிற மருந்து செலுத்து முறைகளின் மருந்து இருப்பு நிலை என்பது சிரைவழி சிகிச்சை மூலம் எட்டப்பட்ட அம்மருந்தின் மருந்து இருப்பு நிலை அளவுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்படுகிறது. [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pharmacokinetics. (2006). In Mosby's Dictionary of Medicine, Nursing & Health Professions. Philadelphia, PA: Elsevier Health Sciences. Retrieved December 11, 2008, from http://www.credoreference.com/entry/6686418 பரணிடப்பட்டது 2016-04-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Rescigno, Aldo; Bocchialini, Bianca Maria (1991), Rescigno, Aldo; Thakur, Ajit K. (eds.), "Pharmacokinetics: Unfolding of a Concept", New Trends in Pharmacokinetics (in ஆங்கிலம்), Springer US: 1–25, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4684-8053-5_1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-8053-5, பார்க்கப்பட்ட நாள் 2025-02-01
- ↑ Dost, F. H. (1953). Der Blutspiegel : Kinetik der Konzentrationsabläufe in der Kreislaufflüssigkeit. G. Thieme.
- ↑ Koch HP, Ritschel WA (1986). "Liberation". Synopsis der Biopharmazie und Pharmakokinetik (in ஜெர்மன்). Landsberg, München: Ecomed. pp. 99–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-609-64970-4.
- ↑ "Pharmacokinetics in drug discovery". Journal of Pharmaceutical Sciences 97 (2): 654–90. February 2008. doi:10.1002/jps.21009. பப்மெட்:17630642.
- ↑ Ruiz-Garcia, Ana; Bermejo, Marival; Moss, Aaron; Casabo, Vicente G. (2008-02). "Pharmacokinetics in Drug Discovery". Journal of Pharmaceutical Sciences 97 (2): 654–690. doi:10.1002/jps.21009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3549. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022354916324832.
- ↑ Mitra, Ashim; Lee, Chi H.; Cheng, Kun (2013-08-26). Advanced Drug Delivery (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-66284-7.
- ↑ Lee, Mary; Desai, Archana (2007). Gibaldi's Drug Delivery Systems in Pharmaceutical Care (in ஆங்கிலம்). ASHP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58528-136-7.
- ↑ Talevi, Alan (2022-06-14). The ADME Encyclopedia: A Comprehensive Guide on Biopharmacy and Pharmacokinetics (in ஆங்கிலம்). Springer Nature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-84860-6.
- ↑ Waterbeemd, Han van de; Lennernäs, Hans; Artursson, Per (2006-03-06). Drug Bioavailability: Estimation of Solubility, Permeability, Absorption and Bioavailability (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-60515-6.