மனோரமா சிங்
மனோரமா சிங் (Manorama Singh, 23 ஆகத்து 1938 – 8 திசம்பர் 2024)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவரது கணவர் சந்திரசேகர் சிங் பீகார் முதல்வராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் 1980களில் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பீகாரில் உள்ள பங்கா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
மனோரமா சிங் Manorama Singh | |
---|---|
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1984–1985 | |
முன்னையவர் | சந்திரசேகர் சிங் |
பின்னவர் | சந்திரசேகர் சிங் |
தொகுதி | பாங்கா |
பதவியில் 1986–1989 | |
முன்னையவர் | சந்திரசேகர் சிங் |
பின்னவர் | பிரதாப் சிங் |
தொகுதி | பாங்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கல்யாண்பூர், முங்கேர், பிகார், இந்தியா | 23 ஆகத்து 1938
இறப்பு | 8 திசம்பர் 2024 பட்னா, பீகார், இந்தியா | (அகவை 86)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சந்திரசேகர் சிங் |
மூலம்: [1] |
மனோரமா சிங் 1984-ல் பாங்கா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1985-ல் இவரது கணவர் தில்லியில் அமைச்சரானபோது தனது பதவியிலிருந்து விலகினார். இவரது கணவர் 1986-ல் இறந்தார். இதனால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் 1986-ல் நடத்தப்பட்டது. இவர் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற பாங்கா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா கட்சியின் ஜார்ஜ் பெர்னாண்டஸை எதிர்த்து 186,237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[6] ஆனால் 1989, 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ बांका की पूर्व सांसद मनोरमा सिंह का निधन, जिले में शोक की लहर
- ↑ "Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Bihar's biwi brigade". The Times of India. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Shiri Ram Bakshi; Sita Ram Sharma; S. Gajrani (1998). Contemporary Political Leadership in India: George Fernandes, Defence Minister of India. APH Publishing. pp. 101–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7024-999-3. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ India Today. Living Media India Pvt. Limited. 1987. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Details of Bye Elections from 1952 to 1995". ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ "Banka Lok Sabha Election Result - Parliamentary Constituency".