மனுஷ்ய புத்திரன்

எழுத்தாளர்

மனுஷ்ய புத்திரன் (Manushyaputhiran) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். 1968 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அப்துல் அமீது என்பது இவரது இயற்பெயராகும். பதிப்பாளர், அரசியல்வாதி, பாடலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிக்கையாசிரியர் என பன்முகங்களுடன் தமிழர் உலகில் இயங்கி வருகிறார்.[1] 2015 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தில்[2] இணைந்து தற்பொழுது திராவிட முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளராக உள்ளார்.[3] இக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
பிறப்புஅப்துல் ஹமீது
15 மார்ச்சு 1968 (1968-03-15) (அகவை 56)
துவரங்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
புனைபெயர்மனுஷ்ய புத்திரன்
தொழில்கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர்
தேசியம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
வகைநவீன கவிதை
கருப்பொருள்தமிழ் இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்சன்சுகிருதி சம்மான் (2002)
இணையதளம்
https://uyirmmai.com/

மனுஷ்ய புத்திரன் பதினைந்து வயதிலிருந்தே கவிதைகள் எழுதி வருகிறார். மனுஷ்ய புத்திரனின் முதல் கவிதை சுபமங்களாவில் வெளியானது. முதல் படைப்பு மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’ 1983 ஆம் ஆண்டில் வெளியானது. பல இலக்கிய, வணிக இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. மனுஷ்ய புத்திரனின் அரசியல் கட்டுரைகள் நக்கீரன், தினமலர் போன்ற நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.

வாழ்க்கைக்குறிப்பு

தொகு

மனுஷ்ய புத்திரன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கதீஜா பீவி, சேக் முகமது தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது 7 வயதிலேயே பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். துவரங்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழியில் பொருளியலில் இளங்கலைப்பட்டமும் பெற்றார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் மற்றும் வரலாறு இரண்டு பாடங்களிலும் இரண்டு முதுகலைப்பட்டங்களைப் பெற்றார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். உயிர்மை என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். கவிஞர் சல்மா மனுஷ்ய புத்திரனின் சகோதரியாவார். உயிர்மை என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இதே பெயரில் உயிர்மை பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். இதே பெயரில் மின்னிதழ் மற்றும் தொலைக்காட்சியும் அறியப்படுகின்றன.

விமர்சனங்கள்

தொகு

மரண தண்டனை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலை போன்ற பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகள் குறித்த முற்போக்கான கருத்துக்களுக்காக அவர் அறியப்படுகிறார்.[4][5][6]

சர்ச்சைகள்

தொகு

2018 ஆம் ஆண்டில், மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதை காரணமாக, அவருக்கும் எச். ராஜாவுக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டது. பின்னர் பல எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.[7][8]

படைப்புகள்

தொகு
கவிதைகள்
ஆண்டு தலைப்பு
1983 மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
1993 என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
1998 இடமும் இருப்பும்
2001 நீராலானது
2005 மணலின் கதை
2006 கடவுளுடன் பிரார்த்தித்தல்
2009 அதீதத்தின் ருசி
2010 இதற்கு முன்பும் இதற்கு பின்பும்
2011 பசித்த பொழுது
2012 அருந்தப்படாத கோப்பை
2013 சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
2014 அந்நிய நிலத்தில் பெண்
2016 ஊழியின் தினங்கள்
2016 புலரியின் முத்தங்கள்
2016 இருளில் நகரும் யானை
2016 தித்திக்காதே
2017 பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்
2017 நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்
2018 கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்
2018 மாநகர பயங்கரவாதி
2018 எழுந்து வா தலைவா
2019 ஒரு நாளில் உனது பருவங்கள்
2019 தீண்டி விலகிய கணம்
2019 மர்ம முத்தம்
2019 இரவுக்குக் கைகள் இல்லை
2019 சிநேகிதியின் காதலர்கள்
2019 வைரல் யானை
2019 தரைக்கு வராத இலைகள்
2019 மெளனப்பனி
2019 வாதையின் கதை
2019 அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது
2021 அலெக்ஸா… நீ என்னைக் காதலிக்கிறாயா?
2021 வசந்தம் வராத வருடம்
2022 மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
கட்டுரைகள்
ஆண்டு தலைப்பு
2003 காத்திருந்த வேளையில்
2003 எப்போதும் வாழும் கோடை
2009 என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்
2012 டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
2012 தோன்ற மறுத்த தெய்வம்
2012 எதிர் குரல் பாகம் 1
2012 இந்தியர்களின் போலி மனசாட்சி
2013 நிழல்கள் நடந்த பாதை
2013 குற்றமும் அரசியலும்
2013 கைவிட்ட கொலைக்கடவுள்
2014 நிழல்களோடு பேசுவோம்
2017 சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்
2017 நரகத்திற்கு போகும் பாதை
2017 திராவிடத்தால் வாழ்ந்தோம்

விருதுகள்

தொகு
  • 2002- இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்சுகிருதி சம்மான் விருது[9]
  • 2003- அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருது
  • 2004- இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருது
  • 2011- கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது (அதீதத்தின் ருசி)
  • 2016- ஆனந்த விகடன் தலைசிறந்த 10 மனிதர்கள் விருது[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஒரு கவிஞன் என்பவன் நடிகன் கிடையாது!- மனுஷ்ய புத்திரன் பேட்டி". Hindu Tamil Thisai. 2021-03-07. பார்க்கப்பட்ட நாள் 2025-02-01.
  2. "திமுகவில் இணைந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்". Hindu Tamil Thisai. 2015-08-19. பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.
  3. WebDesk. "'மண்டியிட்டு எவர் பாதங்களையும் தொட முடியவில்லை': மனுஷ்ய புத்திரன் அரசியல் கவிதை?". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2025-02-01.
  4. Kolappan, B. (27 January 2013). "Manushyaputhiran incurs wrath of Muslim body for death penalty views". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/tamil-nadu/manushyaputhiran-incurs-wrath-of-muslim-body-for-death-penalty-views/article4348779.ece. 
  5. "Love for caste, hatred for humanity, votes for party". Archived from the original on 6 November 2013.
  6. Kolappan, B. (3 April 2014). "Writers warm up to electoral arena, enter campaign scene". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/writers-warm-up-to-electoral-arena-enter-campaign-scene/article5864119.ece. 
  7. "Why I Started #AllWomenBleed".
  8. "'H Raja instigating violence': Writers support Manushyaputhiran for Sabarimala poem". 21 August 2018.
  9. "Pankaj Mishra, Manushya Puthiran among Sanskriti awardees.". Press Trust of India. 27 November 2003. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-2792983_ITM. பார்த்த நாள்: 21 March 2009. 
  10. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=மனுஷ்ய_புத்திரன்&oldid=4201463" இலிருந்து மீள்விக்கப்பட்டது