மத கஜ ராஜா

இந்திய தமிழ்த்திரைப்படம்

மத கஜ ராஜா (Madha Gaja Raja) சுந்தர் சி. எழுதி இயக்கிய தமிழ்க் கலவை திரைப்படம் ஆகும். நவம்பர் 2012 அன்று அறிவிக்கப்பட்ட இப்படம் பல முறை தாமதமாகி பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 12 சனவரி 2025 அன்று வெளியானது.[2][3][4]

மத கஜ ராஜா
மத கஜ ராஜா சுவரொட்டி
மத கஜ ராஜா சுவரொட்டி
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புஜெமினி பிலிம் சர்கியூட்
கதைசுந்தர் சி.,
வெங்கட்ராகவன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஷால்
அஞ்சலி
சந்தானம்
வரலட்சுமி சரத்குமார்
ஒளிப்பதிவுரிச்சர்ட் எம். நாதன்
படத்தொகுப்புபிரவின் கே.எல்
என்.பி ஶ்ரீகாந்த்
கலையகம்ஜெமினி பிலிம் சர்கியூட்
விநியோகம்விஷால் பிலிம் பாக்டரி
ஓட்டம்2ம 26 நி (146 நிமிடங்கள்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி[1]

கதைச் சுருக்கம்

சின்ன அனைக்கட்டியில், காவல் ஆய்வாளர் சீனிவாசனின் மகன் ராஜா, தீக்குச்சி திருமுகம் மற்றும் அவரது மகள் மாதவியை கொடியவர்களிடமிருந்து காக்கிறார். மாதவியுடனான காதல் கலந்த நட்பு சீனிவாசனின் எதிர்ப்பால் முறிகிறது.

கல்யாணசுந்தரம், ராஜா, ரமேஷ் மற்றும் சண்முகம் ஆகியோர் நெடுங்கால நண்பர்கள். கல்யாணசுந்தரத்தின் இல்லற வாழ்வின் சிக்கலை ராஜா தீர்க்கிறார். ஆசிரியர் தண்டபாணியின் மகள் திருமண வாழ்வையும் செம்மைப்படுத்துகிறார்.

துணை ஆட்சியர் ரமேஷ் பொய்யான கையூட்டு குற்றச்சாட்டில் சிக்குகிறார். செய்தித்துறை தொழிலதிபர் கருக்குவேல் விஸ்வநாத்தின் சூழ்ச்சியால் இது நடைபெறுகிறது. அமைச்சர் நல்லமுத்துவுடன் இணைந்து விஸ்வநாத் ராஜாவையும் குற்றவாளியாக்க முயல்கிறார்.

கொடிய சதித்திட்டங்கள் நகரம் முழுவதும் பரவுகின்றன. நல்லமுத்துவின் மறைவு மர்மமாகிறது. சாதிக் கலவரம் மூண்டு, ஊர்வலம் நடத்தத் திட்டமிடுகிறார் விஸ்வநாத். இதன் பின்னணியில் கருப்புப் பணம் கடத்தும் சூழ்ச்சி இருப்பதை ராஜா கண்டறிகிறார்.

தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கிப் பயணிக்கும் கருப்புப் பண வாகனங்கள். இடையில் மாயாவின் கடத்தல். ரமேஷின் உயிருக்கு ஆபத்து. விஸ்வநாத்தின் அதிகார வெறி உச்சத்தைத் தொடுகிறது. இந்த பெரும் சதியை முறியடிக்க ராஜாவிடம் என்ன திட்டம் இருக்கிறது? நண்பர்களின் வாழ்க்கையும், ஊரின் அமைதியும், நீதியும் காக்கப்படுமா?

நடிகர்கள்

இசை

திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.[5]

பாடல்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "சிக்கு புக்கு"  அண்ணாமலைசின்னப்பொண்ணு, பிரபு பந்தாலா 04:26
2. "மை டியர் லவரு"  பா. விஜய்விஷால், விஜய் ஆண்டனி 04:24
3. "நீதானே நீதானே"  பா. விஜய்விஜய் ஆண்டனி 04:35
4. "சற்று முன் வரை"  அண்ணாமலைசந்தோஷ் ஹரிஹரன் 05:27
5. "தும்பாக்கி"  பா. விஜய்விஜய் ஆண்டனி 04:17
மொத்த நீளம்:
23:09

தயாரிப்பு

கஜராணி கதாபாத்திரத்துக்கு முதலில் வேறொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் அந்த நடிகை வருவதற்கு ஒரு வாரம் தாமதம் ஆகும் என்பதால், அவசர அவரசமாக வரலட்சுமியைத் தொடர்பு கொண்டு உடனடியாக நடிக்க அழைத்துவரப்பட்டார்.[6]

வரவேற்பு

இப்படத்திற்கு தினமணி நாளிதழ், "குடும்பத்துடன் சிரித்து மகிழ நல்ல பொழுதுபோக்கு படமாகத் திரைக்கு வந்துள்ளார் மத கஜ ‘கலகல’ ராஜா!" என்று விமர்சனம் எழுதினர்.[7] தினமலர் நாளிதழ் திரைப்படத்திற்கு ஐந்துக்கு மூன்று மதிப்பெண்கள் கொடுத்தனர்.[8] தமிழ் இந்தியன் எக்சுபிரசு வலைப் பக்கத்தில், "12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி இருக்க வேண்டிய படம் தற்போது திரைக்கு வந்திருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும் வகையில் காமெடி காட்சிகளை சுந்தர். சி வடிவமைத்துள்ளார்" என்று விமர்சனம் எழுதினர்.[9] மாலைமலர் நாளிதழ், "சந்தானம் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இயக்கியுள்ளார். சில லாஜிக் ஓட்டைகளும் திரைக்கதையில் சில தொய்வு இருந்தாலும் படத்தின் நகைச்சுவை காட்சிகள் அதை சரிக்கட்டிவிடுகிறது" என்று விமர்சனம் எழுதினர்.[10]

மேற்கோள்கள்

  1. Jayaprakash, Mugilavan (2025-01-16). "Madhagajaraja Approaches 25 Crore Milestone in Ongoing Box Office Success - Tamil News". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-20.
  2. "Vishal's next: 'Madha Gaja Raja'". IndiaGlitz. 3 May 2012. Archived from the original on 10 May 2012. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012.
  3. "Vishals next with Sundar C Does a triple role!". IndiaGlitz. 16 February 2012. Archived from the original on 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 May 2024.
  4. "Hansika- The Dream girl of Kollywood". Sify. 2 March 2012. Archived from the original on 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.
  5. "Madha Gaja Raja – EP". Apple Music. 24 August 2013. Archived from the original on 4 January 2025. பார்க்கப்பட்ட நாள் 4 January 2025.
  6. Thi Cinemas (2025-01-17). "😥Vishal Health - எங்களை ரொம்ப பயமுறுத்துனாங்க ! Sundar C Speech madha gaja raja success Meet". பார்க்கப்பட்ட நாள் 2025-01-20.
  7. சிவசங்கர் (2025-01-12). "'கலகல'வென வந்தாரா? மத கஜ ராஜா - திரை விமர்சனம்!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2025-01-16.
  8. "மத கஜ ராஜா - விமர்சனம் {3/5} : மத கஜ ராஜா - காமெடி ராஜாக்கள், கலக்கல் ராணிகள்… - Madha Gaja Raja". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-16.
  9. WebDesk. "மத கஜ ராஜா விமர்சனம்: சுந்தர்.சி, விஷால், சந்தானம் கூட்டணி மீண்டும் திரையில் மேஜிக்கை நிகழ்த்தியதா?". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-16.
  10. Maalaimalar (2025-01-11). "மத கஜ ராஜா திரைவிமர்சனம் - Madha Gaja Raja Review in Tamil". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-20.
"https://ta.wiki.x.io/w/index.php?title=மத_கஜ_ராஜா&oldid=4194217" இலிருந்து மீள்விக்கப்பட்டது