மதராசபட்டினம் (திரைப்படம்)

ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மதராசபட்டினம் என்பது 2010இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை விஜய் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஆர்யா, ஏமி ஜாக்சன், நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2010 சூலை 9 வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.[2][3]

மதராசபட்டினம்
இயக்கம்விஜய்
இசைஜி. வி. பிரகாஷ்குமார்
நடிப்புஆர்யா
ஏமி ஜாக்ஸன்
நாசர்
கொச்சி ஹனீஃபா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஅந்தோனி கோன்சால்வேஸ்
கலையகம்ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்(இந்தியா)
அய்ங்கரன் இன்டர்நேஷனல் (உலகளாவிய)
வெளியீடுசூலை 9, 2010 (2010-07-09)
மொழிதமிழ்
மொத்த வருவாய்28 கோடி

கதைச் சுருக்கம்

தொகு

கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆ‌ங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளைத் தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.

இந்தியா சுதந்திரம் பெறும் சமயத்தில் சென்னை ஆளுநராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு கழுதைக்குட்டியைக் காப்பாற்றுவதைக் காண்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, ஏமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வரும் ஏமி, ஆர்யா இத்தனை ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரில் பல நற்பணிகள் செய்து வருகிறார் என்றும் அறிகிறார். இதைத் தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துறக்கிறார்.

நடிகர்கள்

தொகு
மதராசபட்டினம்
ஒலிச்சுவடு
வெளியீடு4 ஏப்ரல் 2010
ஒலிப்பதிவு2009
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்33:41
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்
திங்க் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
(2009)
மதராசபட்டினம்
(2010)
டார்லிங்
(2010)

மதராசபட்டினம் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இந்த பாடல்களை 4 ஏப்ரல் 2010 அன்று கமல்ஹாசன் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் வெளியிட்டனர். பாடல்களை நா. முத்துக்குமார் எழுதினார்.

தமிழ் பாடல்கள்

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "பூக்கள் பூக்கும் தருணம்"  ஹரிணி, ரூப் குமார் ரத்தோட், ஆண்ட்ரியா ஜெரெமையா, ஜி. வி. பிரகாஷ் குமார் 6:37
2. "வாம்மா துரையம்மா"  உதித் நாராயண், கொச்சி ஹனீஃபா, ஏமி சாக்சன் 4:47
3. "பீல் ஆப் லவ் (Feel Of Love)"  நவீன் ஐயர், சீனு 3:42
4. "மேகமே ஓ மேகமே"  ம. சு. விசுவநாதன், விக்ரம், நாசர், நா. முத்துக்குமார், அஜயன்பாலா 6:05
5. "ஆருயிரே"  சோனு நிகம், சைந்தவி 6:12
6. "காற்றிலே"  ஹரிஹரன், ஜியா 4:45
7. "தி டான்ஸ் தீம்"  நவீன் ஐயர் 1:33
மொத்த நீளம்:
33:41
1947: எ லவ் ஸ்டோரி
ஒலிச்சுவடு
வெளியீடு2011
ஒலிப்பதிவு2009
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்33:31
மொழிதெலுங்கு மொழி
இசைத்தட்டு நிறுவனம்ஆதித்தியா மியூசிக்கு
இசைத் தயாரிப்பாளர்ஜி. வி. பிரகாஷ் குமார்

தெலுங்கு பாடல்கள்

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "மேகம்மா"  மாணிக்க விநாயகம், திப்பு 6:02
2. "மேகம்மா" (இசைகருவிகள்)  1:26
3. "ஓ பிரேமா"  சோனு நிகம், சைந்தவி (பாடகி) 6:10
4. "ஓ பிரேமா" (இசைகருவிகள்)  3:37
5. Untitled  ரூப் குமார் ரத்தோட், ஹரிணி 6:40
6. "ரம்மா டோரசனி"  உதித் நாராயண் 4:52
7. "சுவிட்ச்"  ஹரிசரண் 4:44
மொத்த நீளம்:
33:31

மேற்கோள்கள்

தொகு
  1. British teenage rookie enters Kollywood
  2. "Madrasapattinam Tamil Movie Review". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "பத்து ஆண்டுகளை நிறைவுசெய்யும் 'மதராசபட்டினம்': வெள்ளித்திரையில் மீண்ட சென்னையின் வரலாறு". Hindu Tamil Thisai. 2020-07-09. பார்க்கப்பட்ட நாள் 2025-01-25.

வெளி இணைப்புகள்

தொகு