போர் (வேளாண்மை)

அறுவடையான வைகோகல் கட்டுகளை அடுக்கி வைப்பது

போர் (Stook, also referred to as a shock or stack,[1]) என்பது, பாரம்பரியமாக அறுவடை செய்யபட்ட தானியக் கதிர்கள் கொண்ட கதிர்கட்டுக்களை கதிரடிப்பதற்கு முன், தானியக் கொத்துகள் தரையில் படாமல் பாதுகாத்து வைக்க அடுக்கி வைக்கும் ஒரு முறை ஆகும். கதிரட்டிப்பு முடிந்தபின் எஞ்சும் வைக்கோலை மாடுகளின் உணவுக்காக பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுவதும் போர் என்றே தமிழில் அழைக்கபடுகிறது. பொதுவாக, கோதுமை, பார்லி, ஓட்ஸ் கேழ்வரகு போன்ற பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகு கதிர்கட்டுகளாக கட்டிவைக்கப்படுகின்றன. அறுவடை செய்யப்பபட்ட கதிர்களில் உள்ள தானியங்கள் சேமித்து வைக்கும் அளவுக்கான ஈரப்பதத்தை அடைய, கதிரடிப்பதற்கு சில நாட்கள் முதல் வாரங்கள் வரை தானியத்தை உலர்த்துவது அவசியமாக இருந்தது.

இங்கிலாந்தின் கிங்ஸ் சோம்போர்ன் அருகே கோதுமை கதிர்க்கட்டுகள் போர் போடப்பட்டுள்ளன.
கென்யாவில் மக்காச்சோளப் போர்.

கண்ணோட்டம்

தொகு

போரின் நோக்கமானது தானியத்தை நீண்ட கால சேமிப்பிற்கானதாக ஆகும் வரை, கதிரடிக்கப்படாது கதிரில் உள்ள தானியத்தை உலர்த்தவும், அதே நேரத்தில் பூச்சிகளிலிருந்து பாதுகாப்பதும் நோக்கமாக கொண்டது ஆகும். கதிரடிக்கப்படாத தானியம் போர்போட்டு வைத்திருக்கும்போது கூட பதமாகிறது. இங்கிலாந்தில், பொதுவாக பன்னிரெண்டு கதிர்கட்டுகள் ஒரு போரில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், எனவே இவ்வாறான போரை ஆங்கித்தில் குறிக்கும் சொல்லான ஸ்டூக் என்னும் சொல் பன்னிரண்டு அடுக்குகளைக் குறிப்பதாக தோன்றி இருக்கலாம்.

போர்போடுதல்

தொகு

அறுவடை இயந்திரங்கள் வழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, இருந்த பொதுவான விவசாய நடைமுறையானது தானியக் கதிர்களை கையால் அறுத்து, அவற்றை கட்டாக கட்டி, ஒன்றோடொன்று செங்குத்தாக அடுக்கி, காற்றில் உலர்த்தும் வகையில் "போர்"கள் உருவாக்கபட்டன.[2] அறுவடை இயந்திரங்கள் வருவதற்கு முந்தைய காலத்தில், சேமித்து வைக்கும் அளவுக்கு தானியங்களின் ஈரப்பதத்தை குறைக்க, கதிரடிப்பதற்கு சில நாட்கள் முதல் வாரங்கள் வரை தானியத்தை உலர்த்துவது அவசியமாக இருந்தது. 21 ஆம் நூற்றாண்டில், பெரும்பாலான பகுதிகளில் அறுவடை இயந்திரமயமாக்கப்பட்டள்ளதால் கதிர் அடிப்பதற்கு முன்னதாக போர் போடுவதற்கான தேவை குறைந்துவருகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=போர்_(வேளாண்மை)&oldid=4202138" இலிருந்து மீள்விக்கப்பட்டது