போராளி

ஆயுதம் ஏந்திய செயற்பாட்டாளர்

போராளி (Militant) என்பவர் பொதுவாக "சீர்திருத்தத்தை" ஏற்படுத்தும் நோக்கத்துக்காக தீவிரமான செயற்பாட்டாளராக, சண்டையிடுபவராக இருப்பவரைக் குறிப்பதாகும். [1] [2] இதற்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் மில்டண்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பெயரடையும், பெயர்ச்சொலுமாகும். மில்டண்ட் என்ற சொல்லானது 15 ஆம் நூற்றாண்டின் இலத்தீன் சொல்லான " மிலிட்டேர் " என்பதிலிருந்து வந்தது, அதாவது "சிப்பாயாக பணியாற்றபவர்" என்பது அதன் பொருளாகும். படையெடுப்பாளர்களுக்கு எதிரான ஒரு தற்காப்பு அமைப்பாக குடிப்படை தொடர்பான நவீன கருத்து ஆங்கிலோ-சாக்சன் குடிப்படைகளில் இருந்து வளர்ந்தது. நெருக்கடியான சமயங்களில், குடிப்படையினர் தங்களது குடிமைக் கடமைகளை விட்டுவிட்டு, அவசரகாலம் முடியும் வரை சிப்பாயாக இருப்பர். நொருக்கடி நீங்கிய பிறகு குடிபடையினர் தங்கள் வழமையான பணிக்குத் திரும்புவர்.

போராளி என்பதன் தற்போதைய பொருள் பொதுவாக அரசபடையின் சிப்பாயைக் குறிப்பதில்லை: ஒரு குறிக்கோளை அடைய, பொதுவாக அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்படும் குழுவைச் சேர்ந்தவரைக் குறிப்பதாக உள்ளது. "போராளி [அரசியல்] ஆர்வலர்" என்பவர் போராளி என்று விவரிக்கப்படாத எந்த ஒரு செயல்பாட்டாளரைக் காட்டிலும் அதிக மோதல்களில் ஈடுபடுபராகவும், ஆக்ரோசமானவராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவார்.

போராளித்தனம் என்பது உடல்ரீதியான வன்முறை, ஆயுதமேந்திய போர், பயங்கரவாதம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ட்ரொட்ஸ்கிச போராளிக் குழு ஒரு செய்தித்தாளை வெளியிட்டது. அது தொழிலாளர் தகராறுகளில் தீவிரமாக இருந்தது. அரசியல் கூட்டங்களில் தீர்மானங்களை எடுத்தது. ஆனால் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கிறித்துவ தேவாலய போராளிகளின் நோக்கம் பாவம், பிசாசு மற்றும் ". . . இந்த உலகின் இருளின் ஆட்சியாளர்கள், உயர்ந்த இடங்களில் ஆன்மீக துன்மார்க்கத்திற்கு எதிராக" (எபேசியர் 6:12) போராடுவது, ஆனால் அது ஒரு வன்முறை இயக்கம் அல்ல.

பெயர்ச்சொல்லாக

தொகு

போராளி, ஒரு பெயர்ச்சொல்லாக, ஒரு குறிக்கோளை அடைய போர்க்குணமிக்க முறைகளைக் கடைபிடிப்பவர்; இந்தச் சொல் இராணுவத்துடன் தொடர்புடையது அல்ல. போராளி என்பது ஆக்ரோஷமான நடத்தை அல்லது அணுகுமுறைகளை வெளிப்படுத்தும் ஒரு நபரைக் குறிக்கலாம்.

போராளி என்பது சில சமயங்களில் பயங்கரவாதி அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளருக்கான இடக்கரடக்கலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dictionary Reference.com". Dictionary Reference.com. பார்க்கப்பட்ட நாள் 13 November 2011.
  2. "Merriam-Webster".. 
"https://ta.wiki.x.io/w/index.php?title=போராளி&oldid=4173060" இலிருந்து மீள்விக்கப்பட்டது