போர்த்துகேய இந்தியா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவின் போர்த்துகேய அரச சார்பாண்மை (Portuguese Viceroyalty of India, போர்த்துகேயம்: Vice-Reino da Índia Portuguesa) என்றும் பின்னர் போர்த்துக்கேய இந்தியா (போர்த்துகேயம்: Estado Português da Índia) என்றும் இந்தியாவில் இருந்த போர்த்துக்கல்லின் குடியேற்றப் பகுதிகள் அனைத்தும் அறியப்பட்டன.
இந்திய அரச சார்பாண்மை Vice-Reino da Índia | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1505–1961 | |||||||||
![]() போர்த்துக்கேய இந்தியாவின் வளர்முகம் | |||||||||
நிலை | குடியேற்றம்; சார்பாண்மை; அயல்நாட்டு மாநிலம் | ||||||||
தலைநகரம் | நோவா கோவா 1530 வரை (கொச்சி) | ||||||||
பேசப்படும் மொழிகள் | போர்த்துக்கேயம் தவிர கொங்கணி, குசராத்தி, மராத்தி, மலையாளம், பிறவும் பேசப்பட்டன. | ||||||||
அரசத் தலைவர் | |||||||||
• மன்னர் 1511–21 | போர்த்துக்கலின் மானுவல் I | ||||||||
• குடியரசுத் தலைவர் 1958–61 | அமெரிக்கோ தோமசு | ||||||||
சார்பாண்மையர் | |||||||||
• 1505–09 (முதல்) | பிரான்சிஸ்கோ டெ அல்மீடா | ||||||||
• 1827–35 (கடைசி) | மானுவல் டெ போர்த்துக்கல் எ காஸ்த்ரோ | ||||||||
தலைமை ஆளுனர் | |||||||||
• 1509–15 (முதல்) | அஃபோன்சோ அல்புகுர்க் | ||||||||
• 1958–62 (கடைசி) | மானுவல் அன்டோனியோ வாசலோ எ சில்வா | ||||||||
வரலாற்று சகாப்தம் | ஏகாதிபத்தியம் | ||||||||
• பீஜப்பூர் சுல்தானகம் வீழ்ச்சி | 15 ஆகத்து 1505 | ||||||||
14 சனவரி 1961 | |||||||||
நாணயம் | போர்த்துக்கேய இந்திய ரூபியா (INPR) போர்த்துகேய இந்திய இசுகுடோ (INPES) | ||||||||
|
போர்த்துகேய மாலுமி வாஸ்கோ ட காமா இந்தியாவிற்கு கடல்வழி கண்டறிந்து ஆறு ஆண்டுகளுக்குள்ளாகவே போர்த்துகேய அரசு 1505இல் கொச்சியில் தனது முதல் அரச சார்பாண்மையராக (வைசுராய்) பிரான்சிசுகோ டெ அல்மீடியாவை நியமித்தது. 1752ஆம் ஆண்டு வரை "போர்த்துகேய இந்திய அரசில் " இந்தியப் பெருங்கடலில் இருந்த அனைத்து போர்த்துக்கேய குடியேற்றங்களும் அடங்கி இருந்தது; இது தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தெற்கு ஆசியா வரை பரவியிருந்தது. இதன் தலைமைப் பொறுப்பில் அரச சார்பாண்மையரோ ஆளுனரோ இருந்தனர். 1510 முதல் கோவா இதன் தலைநகராயிற்று. 1752இல் மொசாம்பிக் தனி அரசாகப் பிரிந்தது. 1844இல் போர்த்துகேய இந்திய அரசு மக்காவு, திமோர் மற்றும் இந்தோனேசிய சோலார் ஆகியவற்றின் ஆட்சியை நிறுத்திக்கொண்டது. மலபாருடன் தன்னாட்சியை குறுக்கிக் கொண்டது.
1947ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் விடுதலையின்போது இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் கோவா, தமன், தியூ மற்றும் உட்புறத்தில் அமைந்த தாத்ரா, அவேலி ஆகிய பிறநாடுசூழ் பகுதிகளைக் கொண்டிருந்தது. பொதுப்பயன்பாட்டில் போர்த்துக்கேய பகுதிகளை அனைத்தும் உள்ளடக்கி கோவா என்றும் அறியப்படுகிறது. 1954ஆம் ஆண்டில் தாத்ரா மற்றும் நகர் அவேலிப் பகுதிகளை 1954ஆம் ஆண்டு இழந்தது. 1961ஆம் ஆண்டில் மற்ற மூன்று பகுதிகளும் இந்திய இராணுவ நடவடிக்கையால் கைப்பற்றப்படன. ஆனால் இதனை போர்த்துக்கல் 1975 வரை ஏற்றுக்கொள்ளவில்லை. கார்னேசன் பூ புரட்சி மற்றும் ஏகாதிபத்திய இசுதடோ நோவோ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகே இந்த இணைப்பை ஏற்றுக்கொண்டது.
வெளி இணைப்புகள்
தொகு- இந்தியப் நிலப்பரப்பின் மீது செல்வதற்கான உரிமை (போர்த்துக்கல் எதிர். இந்தியா) வழக்கில் பன்னாட்டு நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் சுருக்கம்
- டச்சு போர்த்துகேய குடியேற்ற வரலாறு டச்சு போர்த்துகேய குடியேற்ற வரலாறு: இலங்கை, இந்தியா, மலாக்கா, வங்காளம், பார்மோசா, ஆப்பிரிக்கா, பிராசில் பகுதிகளில் டச்சு போர்த்துகேய குடியேற்றம். மொழி மரபு, அழிபாடுகளின் பட்டியல், வரைபடங்கள்